நிறுவப்பட்டது | 1935 |
---|---|
ஆய்வு வகை | தன்னாட்சி, ஆய்வு மையம் |
நிதிநிலை | ₹711 மில்லியன் (2012)[1] |
ஆய்வுப் பகுதி | உயிரியல், வேதியியல் |
பணிப்பாளர் | அருண் பந்தோபாத்யா |
துறை | 66[1] |
மாணவர்கள் | 427[1] |
அமைவிடம் | கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா 22°29′51″N 88°22′12″E / 22.4974°N 88.3700°E |
Campus | நகரம் |
Affiliations | AcSIR |
Operating agency | அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றம் |
இணையதளம் | www |
இந்திய வேதியியல் உயிரியல் நிறுவனம் (Indian Institute of Chemical Biology) (ஐ.ஐ.சி.பி.) என்பது இந்தியாவின் மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவில் உள்ள உயிரியல் மருத்துவ ஆராய்ச்சி மையமாகும்.[2]
1935ஆம் ஆண்டில் இந்திய மருத்துவ பரிசோதனை நிறுவனம் (IIEM) என நிறுவப்பட்டது. பின்னர் 1956ஆம் ஆண்டில் இதனை அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தின் (சிஎஸ்ஐஆர்) தன்னுடைய கட்டுப்பாட்டிற்கொன்டு நிதியுதவி அளித்து 1982இல் இந்திய வேதியியல் உயிரியல் நிறுவனமாக மாற்றியது.[2] இங்கு 6 முக்கியப் பிரிவுகளில் ஆய்வும் விருத்தியும் செயல்பாட்டில் உள்ளது. இத்துறைகள் புற்றுநோய் உயிரியல் மற்றும் அழற்சி கோளாறு, செல் உயிரியல் மற்றும் உடலியங்கியல், வேதியியல், தொற்று நோய்கள் மற்றும் நோயெதிர்ப்பியல், மூலக்கூறு மற்றும் மனித மரபியல், மற்றும் கட்டமைப்பு உயிரியல் மற்றும் உயிர் தகவலியல் முதலியன.