வகை | தன்னாட்சி, அரசு CSIR |
---|---|
உருவாக்கம் | 1944 |
பணிப்பாளர் | டாக்டர். எஸ்.சந்திரசேகர் |
அமைவிடம் | உப்பல் ஆர்.டி, ஐ.ஐ.சி.டி காலனி, தர்னகா , தெலுங்கானா , Telangana , இந்தியா 500007 17°25′20″N 78°32′22″E / 17.422114°N 78.539307°E |
வளாகம் | நகர்புறம் தர்னகா 170 ஏக்கர்கள் (690,000 m2) |
இணையதளம் | www |
இந்திய வேதியியல் தொழில்நுட்ப நிறுவனம் (Indian Institute of Chemical Technology) ஒரு தேசிய அளவிலான ஆராய்ச்சி மையம் .இது இந்தியா உள்ள தெலுனங்கானா மாநிலத்தில் அமைந்துள்ளது.இந்நிறுவனம் அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றம் கீழ் இயங்குகிறது.இந்நிறுவணம் வேதியியல்,உயிர் வேதயியல்,உயிர் தகவலியல், வேதியியல் பொறியியல், ஆகியவற்றில் ஆராய்ச்சி நடத்துகிறது மற்றும் நாட்டின் தொழில்துறை மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப உள்ளீடுகளை வழங்குகிறது.[1] இது அதிகபட்ச சி.எஸ்.ஐ.ஆர் காப்புரிமைகளில் ஒன்றை தாக்கல் செய்ததுள்ளது.[2][3]
ஐ.ஐ.சி.டி யின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடுத் திட்டங்கள் பூச்சிக்கொல்லிகள், மருந்துகள் , கரிம இடைநிலைகள், சிறந்த இரசாயணங்கள், வினையூக்கிகள், பாலிமர்கள், கரிம பூச்சுகள், குறைந்த தர நிலக்கரி பயண்பாடுகள் மற்றும் காய்கறி எண்ணெய்களிலிருந்து மதிப்பு கூட்டப்பட்ட தயாரிப்புகளுக்கான தொழில்நுட்பங்கள் அகியவற்றுடன் தொடர்புடையது. ஐ.ஐ.சி.டி கரிம தொகுப்பு மற்றும் வினையூக்கங்களில் அடிப்படை ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.[4]
மலேரியா,ஜப்பானிய என்செபாலிடிஸ்,டெங்குக் காய்ச்சல் போன்ற திசையன் முலம் பரவும் நோய்களுக்கு பொருத்தமான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை வடிவமைப்மதற்க்கான கிராமப்புற உள்ளுர் பகுதிகளில் முதன்மை கொசு திசையன் துல்லியமாக அடையாளம் காண தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது நிறுவனத்தின் பணிக்கு ஒரு எடுத்துக்காட்டு.[5]
இந்தியா போன்ற வளரும் நாடுகளில், கிராமப்புறங்களில் இருந்து வரும் கொசு இனங்களை வகைப்படுத்துதல் மற்றும் அடையாளம் கிண்பது மிக மூக்கியமானது. உலக சுகாதார அமைப்பு ஒரு உருவகமாக முக்கிய வடிவில் வகைப்பாட்டுக் தரவு விவரிக்கும் தனிக்கட்டுரை வெளியிட்டது இதனை புரிந்து கொள்ள பொதுவாக கடினம்.இந்த சிரமத்தை கருத்தில் கொண்டு,ஒரு புதிய மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.கிராமப்புறங்களில் இந்த தொதகுப்பை வெற்றிகரமாக பயன்படுத்தலாம்.விரைவான அடையாளம் மற்றும் அதிக துல்லியம் தொழில்நுட்பத்தின் முக்கிய அம்சங்கள்.[6]