Fromia indica | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | அசுடெரோயிடே
|
வரிசை: | வால்வாதிடே
|
குடும்பம்: | கோனோஇசுடெரிடே
|
பேரினம்: | புரோமியா
|
இனம்: | 'பு. இண்டிகா
|
இருசொற் பெயரீடு | |
புரோமியா இண்டிகா (Perrier, 1869) | |
வேறு பெயர்கள் [1][2][3] | |
|
புரோமியா இண்டிகா (Fromia indica), பொதுவாக இந்தியக் கடல் விண்மீன் அல்லது சிவப்பு நட்சத்திர மீன் என்று அழைக்கப்படுகிறது. இது கோனியாசுடரிடே குடும்பத்தைச் சேர்ந்த கடல் விண்மீன்களின் ஒரு சிற்றினமாகும்.
புரோமியா இண்டிகா 7.5 சென்டிமீட்டர்கள் (3.0 அங்) முதல் 10 சென்டிமீட்டர்கள் (3.9 அங்) விட்டம் வரை வளரலாம். இளமையாக இருக்கும்போது, இது கருப்பு நுனியுடன் பிரகாசமான சிவப்பு நிறத்தில் இருக்கும்.[4] மேலும் முதிர்ச்சியடையும் போது சிவப்பு நிற உடலில் கருப்பு நிறமான வலை போன்ற மெல்லிய கோடுகளுடன் காணப்படலாம்.[5]இது சிறப்பு வடிவமாகும். இது கறுப்பு-புள்ளி கொண்ட சகோதர சிற்றினமானபுரோமியா மில்லெபொரெல்லாவிலிருந்து வேறுபடுகிறது . இந்த கடல் நட்சத்திரத்தில் பொதுவாக ஐந்து ஆரங்கள் உள்ளன. மீளுருவாக்கம் காலங்களில் சிலவற்றில் ஆறு ஆரங்களும் கண்டறியப்பட்டுள்ளன.[6]
இந்த இனத்தை இந்தியப் பெருங்கடல் மற்றும் மேற்கு பசிபிக் பகுதிகளில், அந்தமான் தீவுகளிலிருந்து மேற்கி இலங்கை வரையிலும், கிழக்கே பிஜி தீவுகள் வரையிலும் காணலாம். இது ஜப்பானின் வடக்கேயும், தெற்கே ஆஸ்திரேலியாவிலும் காணப்படுகிறது . இது அட்சரேகை -23.5 முதல் 18.85 பாகை வரையும் தீர்க்கரேகை -162 முதல் 178.53 பாகை வரையும் காணப்படும்.[4][7][8][9] இது இலங்கை வழியாக மீன் வர்த்தகத்திற்காக அடிக்கடி இறக்குமதி செய்யப்படுகிறது.
இது 75 °F (24 °C)க்கும் 83 °F (28 °C) இடையிலான வெப்பநிலையில் அனைத்து வகையான தடாகங்கள் மற்றும் வெளிப்புற திட்டுகளில் வாழ்கிறது.[4] இது 1.5 மீட்டர்கள் (4 அடி 11 அங்) வரையிலான ஆழத்தில் காணப்படுகிறது அல்லது 10 மீட்டர்கள் (33 அடி) அல்லது 25 மீட்டர்கள் (82 அடி) ஆழத்திலும் காணப்படலாம்[4] The animal is found at depths ranging from 1.5 மீட்டர்கள் (4 அடி 11 அங்) or less to 10 மீட்டர்கள் (33 அடி) or even 25 மீட்டர்கள் (82 அடி).[7][8][9]
இது மட்குண்ணி வகையினைச் சார்ந்தது. நுண்பாசி, சிறிய கடலடி முதுகெலும்பிலிகள் மற்றும் பிற கரிமப் பொருட்களை உணவாக உட்கொள்கிறது. இது "இறக்கும் தறுவாயில் பலவீனமான மீன்களை" சாப்பிடுவதாகக் கூறப்படுகிறது.[4] The animal is found at depths ranging from 1.5 மீட்டர்கள் (4 அடி 11 அங்) or less to 10 மீட்டர்கள் (33 அடி) or even 25 மீட்டர்கள் (82 அடி).
இந்த இனங்கள் பவளப்பாறை கொண்ட மீன் காட்சியகத்தில் பாதுகாப்பாக உள்ளது. இந்த கடல் நட்சத்திரத்திற்கு இறால் அல்லது ஸ்காலப் போன்ற சிறிய துண்டுகள் அல்லது கடல் உணவுகளின் துகள்களை உணவாகக் கொடுக்கலாம்.[4][5] இது பெரும்பாலான பொழுதுபோக்கிற்கா வளர்க்கலாம் எனத் தெரிந்திருந்தாலும், இதைப் பராமரிப்பது எளிதல்ல. ஏனென்றால் இது நீரில் ஏற்படும் வேதியியலில் ஏற்படும் மாற்றங்களுக்கு மிகவும் உணர்திறன் வாய்ந்தது. பட்டினியால் பெரும்பாலும் பாக்டீரியா தொற்றுக்கு விரைவாக ஆளாகிறது.[10]