இந்திய நாடு நீண்ட கடற்கரையைக் கொண்டுள்ள ஒரு நாடு. இது உலகின் பெரிய மூவலந்தீவுகளுள் ஒன்று. இந்தியக் கடற்கரையின் நீளம் 7600 கிலோமீட்டர்கள். இங்கு 13 பெரிய துறைமுகங்களும் 187 சிறிய, நடுத்தர துறைமுகங்களும் உள்ளன. சூன் 2010-இல் போர்ட் பிளேர் நாட்டின் பெரிய துறைமுங்களில் 13-ஆவது துறைமுகமாகச் சேர்க்கப்பட்டது.
2007-ஆம் கணக்கின் படி ஏறத்தாழ 74 சதவீத சரக்கினை பெரிய துறைமுகங்களே கையாண்டன. மேலும் 70% பெட்டகப் போக்குவரத்தினை மும்பைத் துறைமுகமும் சவகர்லால் நேரு துறைமுகக் கழகமுமே கையாண்டன.[1][2][3]