திட்ட வகை | செய்மதி இடஞ்சுட்டல் |
---|---|
இயக்குபவர் | இந்திய விண்வெளி ஆய்வு மையம் |
திட்டக் காலம் | 10 ஆண்டுகள் |
விண்கலத்தின் பண்புகள் | |
செயற்கைக்கோள் பேருந்து | ஐ-1கே |
தயாரிப்பு | இந்திய விண்வெளி ஆய்வு மைய செய்மதி நடுவம் விண்வெளிப் பயன்பாடுகள் மையம் |
ஏவல் திணிவு | 1,425 கிலோகிராம்கள் (3,142 lb) |
திறன் | 1,660 வாட்டு |
திட்ட ஆரம்பம் | |
ஏவப்பட்ட நாள் | மார்ச் 28, 2015 [1] |
ஏவுகலன் | பிஎஸ்எல்வி-சி-27[2] |
ஏவலிடம் | சதீஸ் தவான் விண்வெளி மையம் சதீஸ் தவான் முதல் ஏவுதளம்[சான்று தேவை] |
ஒப்பந்தக்காரர் | இந்திய விண்வெளி ஆய்வு மையம்-இஸ்ரோ |
சுற்றுப்பாதை அளபுருக்கள் | |
Reference system | புவி மைய வட்டப்பாதை |
சுற்றுவெளி | புவிநிலைச் சுற்றுப்பாதை |
ஐஆர்என்எஸ்எஸ் 1-டி (IRNSS-1D) [3] என்பது இந்திய பிராந்திய ஊடுருவல் துணைக்கோள் வரிசையில் நான்காவதாக ஏவப்படுவதாகும். இதற்கு முன்னர் இதேபோல் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1ஏ, ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1பி, ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1சி, என்று மூன்று வகைகள் ஏவப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. 2015 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 9 ஆம் திகதியில் ஏவப்பட வேண்டிய இது தொழில் நுட்பக்காரணங்களினால் மார்ச் 28[4] ஆம் திகதி மாலை 5 மணி 19 நிமிடங்களுக்கு விண்ணில் செலுத்தப்பட்டது. அதன் பின்னர் இக்கோள் புவிநிலைச் சுற்றுப்பாதையில்[5] நிறுத்தப்படும். இச்செயற்கைக்கோள் ஆந்திர மாநிலத்தின் கடலோரப் பகுதியான ஸ்ரீஹரிக்கோட்டாவிலிருந்து பி.எஸ்.எல்.வி.-சி27 மூலம் விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது.[6]
இந்த திட்டத்திற்காக மொத்த செலவு 1,400 கோடிகள்.[7]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)