இந்தியப் பொறியியல் பணி சுருக்கமாக ஐஇஎஸ் (Indian Engineering Services) சுருக்கமாக IES) என்பது இந்திய அரசின் தொழில் நுட்ப மற்றும் நிர்வாகச் செயல்பாடுகளும் இணந்த ஆட்சிப்பணியாகும். பெரும்பாலான நாடுகளைப் போலவே, இந்திய அரசும் அதன் ஆட்சிப்பணி ஊழியர்களையும், அதிகாரிகளையும் தகுதி அடிப்படையில் நியமனம் செய்கிறது, அதிகாரத்தில் நடுத்தர நிர்வாக நிலைகள் போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்பப்படுகின்றன. குறைந்த எண்ணிக்கையிலான பதவிகளுக்கு, அதிகப்படியானவர்கள் போட்டியிடுகின்றனர். சிவில் சர்வீசஸ் தேர்வை நடத்தும் ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம்தான் (யூ.பி.எஸ்.சி.) ஐ.இ.எஸ். தேர்வையும் நடத்துகிறது. இந்தியப் பொறியியல் தேர்வானது, இந்திய ஆட்சிப்பணி தேர்வைப் போல, முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என அடுத்தடுத்து 3 விதமான தேர்வுகள் (ஐந்து சோதனைகள் கொண்டது) கொண்டது.[1]
ஐஈஎஸ் பணியானது இந்திய பொறியியல் பட்டதாரிகளால் மிகவும் விரும்பப்படும் பணியாகும்.[2][3][4] 2015 ஆம் ஆண்டில், மொத்தம் 434 பேர் ஈ.எஸ்.இ. மூலம் தெரிவு செய்ய பரிந்துரைக்கப்பட்டனர். 2010 ஆம் ஆண்டில், மொத்தம் 157,649 பேர் 434 காலியிடங்களுக்கு விண்ணப்பித்தனர்.[5][6] 2011 இல், நியமனம் செய்யப் பரிந்துரைக்கப்பட்டவர்களான 693 பேரில் 317 பொது பிரிவினர், 209 பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், 113 பட்டியல் வகுப்பினர், 54 பழங்குடியினர் ஆவர் (உடல் ஊனமுற்றவர்கள் 44 பேர் உட்பட).[7] இந்திய பொறியியல் பணி 2012 தேர்வில் 560 பதவிகளுக்கு (உடல் ஊனமுற்றோர் 47 பேர் உட்பட) ஆள்சேர்ப்பு நடத்தப்பட்டது.[8] 2013 ஆம் ஆண்டில் 763 பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு செய்யப்பட்டது (உடல் ஊனமுற்றோர் 19 பேர் உட்பட).[9]
இந்திய பொறியியல் பணிக்கான தேர்வானது, உலகின் கடினமான தேர்வுகளில் ஒன்று என கருதப்படுகிறது. மிகுதியான நபர்கள் குறைவான பதவிகளுக்கு போட்டியிடுவதால் தேர்வு விகிதமானது 0.00275 (2010 புள்ளியியல் அடிப்படையில்) உள்ளது. இது உலகில் மிகவும் கடினமான தேர்வுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இத்தேர்வில் வெற்றி பெறுபவர்களில் உயர் மதிப்பெண்களைப் பெறுபவர்கள் இந்திய தொழில்நுட்பக் கழகங்கள்[10][11] மற்றும் இந்திய அறிவியல் கழகம்.[12] போன்ற கல்வி நிறுவனங்களில் இருந்து வந்தவர்களாவர். இந்த கடினமான தேர்வு முறை காரணமாக, இந்த பொறியியல் அதிகாரிகள் சமூகத்தில் உயர்ந்த மரியாதை கொண்டவர்களாக உள்ளனர். மேலும் பல்வேறு பகுதிகளில் பணிகளை நிர்வகிப்பவர்களாக உள்ளனர். இந்திய அரசாங்க செலவினத்தில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15 சதவிகிதத்திற்கும் அதிகமானதாக, பொதுத்துறை நிர்வகப் பணிகள், தொடர்வண்டித் துறை, சாலைகள், பாதுகாப்பு, உற்பத்தி, ஆய்வு, பகிர்மானம், கட்டுமானம், பொதுப் பணிகள், மின்சாரம், தொலை தொடர்பு, முதலியவற்றிற்கு செலவிடப்படுகிறது.[13][14] குரூப் ஏ பணிகளுக்கான அனைத்து நியமங்களும் இந்திய ஜனாதிபதியால் செய்யப்படுகின்றன.[15]
ஐ.இ.எஸ். தேர்வில் இந்தியன் ரெயில்வே சர்வீஸ், மிலிட்டரி இன்ஜினியரிங் சர்வீஸ், இந்தியன் டெலிகாம் சர்வீஸ், இந்தியன் நேவல் ஆர்மாமென்ட் சர்வீஸ், இந்தியன் ரயில்வே ஸ்டோர் சர்வீஸ், இந்தியன் ஆர்டினன்ஸ் பேக்டரி சர்வீஸ், இந்தியன் சப்ளை சர்வீஸ், சென்ட்ரல் பவர் இன்ஜினியரிங் சர்வீஸ் என்று பல்வேறு வகையான பணிகள் இருக்கின்றன. எனவே, பிடித்தமான பணியைத் தேர்வுசெய்துகொள்ள முடியும். தேர்வில் எடுக்கும் மதிப்பெண், விருப்பம், இடஒதுக்கீடு ஆகியவற்றின் அடிப்படையில் பணிகள் ஒதுக்கப்படுகின்றன.[16]
தேர்வுக்கு வருபவர் பின்வரும் ஒன்றைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்:
அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்திலிருந்து குறைந்தபட்சம் பொறியியல் (பி.ஈ. / பி. டெக்) பட்டம். எம்.எஸ்.சி. பட்டம் அல்லது அதற்கு இணையான வயர்லெஸ் கம்யூனிகேஷன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ், ரேடியோ பிசிக்ஸ் அல்லது ரேடியோ இன்ஜினியரிங் ஆகியவற்றுடன் சில குறிப்பிட்ட சேவைகளுக்கு மட்டுமே ஏற்றுக்கொள்ளக்கூடிய சிறப்பு பாடங்களைக் கொண்டுள்ளன.[17]
ஆண்டின் துவக்கமான சனவரி அன்றைய கணக்கில் வயது 21–30 க்குள் இருக்கவேண்டும்.[17]
பின்வருமாறு வயது வரம்பில் தளர்வு உள்ளது:
யுபிஎஸ்சியின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
பொதுப் பிரிவில் ஆண் விண்ணப்பதார்ர் ஆன்லைன் படிவத்தின் விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 200, பெண்கள் மற்றும் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு எந்தவொரு கட்டணமும் இல்லை.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் இந்தியா முழுவதும் பின்வரும் மையங்களில் இந்த்த் தேர்வு நடத்தப்படுகிறது அவை: அகர்தலா, அகமதாபாத், அய்சால், அலிகர், அலகாபாத், பெங்களூர், பரேலி, போபால், சண்டிகர், சென்னை, கட்டக், தேராதூன், தில்லி, தார்வாடு, திஸ்பூர், கேங்டாக், ஐதராபாத், இம்பால், இட்டாநகர், செய்ப்பூர், சம்மு, ஜோரத், கொச்சி, கோகிமா, கொல்கத்தா, இலக்னோ, மதுரை, மும்பை, நாக்பூர், பானஜி (கோவா), பட்னா, போர்ட் பிளேர், ராய்பூர், ராஞ்சி, சம்பல்பூர், சில்லாங், சிம்லா, சிறிநகர், திருவனந்தபுரம், திருப்பதி, உதயப்பூர் விசாகப்பட்டினம் போன்றவை ஆகும்.
{{cite web}}
: Unknown parameter |=
ignored (help)
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link)