இந்தியாவின் தன்னாட்சி நிர்வாகப் பகுதிகள்வடகிழக்கு இந்தியாவின் தன்னாட்சி நிர்வாகப் பகுதிகள்
இந்தியாவின் தன்னாட்சி நிர்வாகப் பகுதிகள் (Autonomous Administrative of India) இந்திய அரசியலமைப்பின் ஆறாம் அட்டவணைஇந்திய மலைவாழ் பழங்குடி மக்களின் பண்பாடு, நாகரீகம், மொழி மற்றும் பொருளாதார அமைப்புகளைக் காத்திட வேண்டி, பழங்குடி மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில், மாநிலத்திற்குள், மாவட்டத் தன்னாட்சி நிர்வாகக் குழுக்களை அமைக்கும் அதிகாரம் இந்திய நாடாளுமன்றத்திற்கு வழங்கியுள்ளது. பத்துக்கும் மேற்பட்ட தன்னாட்சி மாவட்ட நிர்வாகப் பகுதிகள், வடகிழக்கு மாநிலங்களானஅசாம், மேகாலயா, திரிபுரா, மிசோரம், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களிலும் மற்றும் லடாக் ஒன்றியப் பிரதேசத்தில் இரண்டும் உள்ளது.
தன்னாட்சிப் பிரதேசத்தின் அதிகாரங்கள் மற்றும் திறன்கள்
மாவட்ட தன்னாட்சிக் குழுக்களுக்கு மலைவாழ் பழங்குடி மக்களுக்கிடையே ஏற்படும் பிணக்குகளை தீர்த்து வைப்பதற்கு தனி நீதிமன்றங்கள் அமைக்க அதிகாரம் உள்ளது. இந்த நீதிமன்றத்திற்கு அதிகபட்சமாக 5 ஆண்டுக்கு கீழ் சிறைதண்டணை வழங்க அதிகாரம் உள்ளது.
மாட்டத் தன்னாட்சிக் குழுக்கள் பள்ளி மற்றும் சாலைகளை பராமரிக்க சுங்கக் கட்டணம், சந்தைக் கட்டணம், மாவட்ட நுழைவுக் கட்டணம், படகுச் சவாரிக் கட்டணம், சாலைக் கட்டணம் தொழில்வரி, சொத்து வரி போன்ற வரிகளும், கட்டணங்களும் விதிக்க அதிகாரம் கொண்டுள்ளது.