அணுக்கரு ஆற்றல் இந்தியாவின் மின்சார உற்பத்தியில் அனல், புனல் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு அடுத்து நான்காமிடத்தில் உள்ளது.[1] 2012 வரை, இந்தியாவில் ஆறு அணு மின் நிலையங்களில் இயங்கும் 20 அணுக்கரு உலைகளில் 4,780 மெவா மின்சாரம் உற்பத்தியாகிறது.[2] மேலும் ஏழு அணுக்கரு உலைகள் கட்டமைக்கப்பட்டு வருகின்றன; இவற்றின் மூலம் கூடுதலாக 5,300 மெகாவாட் கிடைக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.[3]
அக்டோபர் 2010இல் இந்தியாவில் "2032ஆம் ஆண்டுக்குள் 63,000 மெவா அணுமின் ஆற்றலை உற்பத்தி செய்ய திட்டமொன்றை" தீட்டியபோதும்,[4] "திட்டமிடப்பட்ட பகுதி மக்களின் எதிர்ப்புகளாலும் அணுக்கரு உலை குறித்த பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் மாசுபடாதிருத்தல் குறித்து எழுந்த புதிய ஐயங்களாலும்" இது தள்ளிப்போடப்படுள்ளது.[5] மகாராட்டிரத்தில் பிரெஞ்சு நிறுவனம் அமைக்கும் 9900 மெவா கொள்ளளவு கொண்ட ஜெய்தாபூரிலும் தமிழ்நாட்டில் உருசிய கூட்டுறவுடன் நிறுவப்படும் 2000 மெவா கொள்ளளவு கொண்ட கூடன்குளத்திலும் பலத்த எதிர்ப்புப் போராட்டங்கள் நடைபெறுகின்றன. மேற்கு வங்காள அரசும் அரிப்பூரில் நிறுவப்படத் திட்டமிட்டிருந்த 6000 மெவா திறன் கொண்ட ஆறு உருசிய அணு உலைகளுக்கு அனுமதி மறுத்துள்ளது.[5] அரசின் அணுக்கரு ஆற்றல் திட்டதிற்கெதிராக பொது நல வழக்கொன்று உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்டுள்ளது.[5][6] இத்தகையத் தடங்கல்கள் இருப்பினும் 2011-12ஆம் ஆண்டில் இந்திய அணுமின் நிலையங்கள் தங்கள் திறனின் 79% அளவில் உற்பத்தி செய்தன; இந்த ஆண்டில் இருபது உலைகளில் ஒன்பது உலைகள் வரலாற்றுச் சிறப்பாக தங்கள் திறனின் 97% ஐ எட்டின.
இந்தியா வெளிநாட்டை நம்பியிருக்க வேண்டிய யுரேனியத்திற்கு மாற்றாக தோரியம் சார்ந்த அணு எரிபொருள்கள் குறித்தும் குறை செறிவூட்டப்பட்ட யுரேனியம் மற்றும் தோரியத்தைப் பயன்படுத்தும் அணுக்கரு உலை வடிவமைப்பில் ஆய்வு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.[7] குளிர்ந்த அணுப்பிணைவு ஆய்வுகளில் இந்தியா தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது.[8] உலகின் மிகவும் பெரிய, மிகவும் முன்னேறிய ஆய்வு டோகாமாக் அணுக்கரு இணைவு உலையான பன்னாட்டு வெப்ப அணுக்கரு ஆய்வுலை திட்டத்திற்கும் ஆதரவளித்துள்ளது.
1901 ஆம் ஆண்டின் முற்பகுதியில் இந்திய புவியியல் ஆய்வு மையம் இந்தியாவில் பிட்ச்பிளெண்ட்டு, யுரேனியம் மற்றும் தோரியனைட்டு உள்ளிட்ட கதிரியக்கத் தாதுக்கள் கணிசமாக இருப்பில் இருப்பதாக அங்கீகரித்தது. எவ்வாறாயினும் அடுத்த 50 ஆண்டுகளில், அந்த வளங்களை வெட்டியெடுத்து பயன்படுத்துவதற்கான எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை [9]. 1920 மற்றும் 1930 ஆம் ஆண்டுகளில், இந்திய விஞ்ஞானிகள் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் தங்கள் சகாக்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வந்தனர், மேலும் இயற்பியலின் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து நன்கு அறிந்திருந்தனர். பல இந்திய இயற்பியலாளர்கள், குறிப்பாக தவுலத் சிங் கோத்தாரி, மேக்னாத் சாகா, ஓமி யே பாபா ஆர்.எசு. கிருட்டிணன் ஆகியோர் 1930 ஆம் ஆண்டுகளில் ஐரோப்பாவில் அணு இயற்பியலில் முன்னோடி ஆராய்ச்சி நடத்தினர்.
1939 ஆம் ஆண்டு கல்கத்தா பல்கலைக்கழகத்தின் இயற்பியல் பேராசிரியர் மேக்னாத் சாகா அணுக்கரு பிளவு கண்டுபிடிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்தார். மேலும் அணு இயற்பியல் தொடர்பான தனது ஆய்வகத்தில் அணு இயற்பியல் தொடர்பான பல்வேறு சோதனைகளை நடத்தத் தொடங்கினார். 1940 இல் இவர் அணு இயற்பியலை பல்கலைக்கழகத்தின் முதுகலை பாடத்திட்டத்தில் இணைத்தார் [10]. அதே ஆண்டில், சர் டோராப்ச்சி டாடா அறக்கட்டளை கல்கத்தா பல்கலைக்கழகத்தில் அணுவைப் பிளக்கப் பயன்படும் சைக்ளோட்ரானை நிறுவ நிதி அனுமதித்தது, ஆனால் போருடன் தொடர்புடைய பல்வேறு சிக்கல்கள் திட்டத்தை மேலும் தாமதப்படுத்தின [11]. பெங்களூரு இந்திய அறிவியல் கழகத்தில் ஆராய்ச்சிப் பள்ளியை நிறுவிய புகழ்பெற்ற அணு இயற்பியலாளர் ஓமி யே பாபா 1944 ஆம் ஆண்டில், டாடா குழுமத்தின் தலைவரான தனது தொலைதூர உறவினர் யே. ஆர். டி. டாடாவுக்கு ஒரு கடிதம் எழுதினார். அக்கடித்த்தில் அண்ட கதிர்கள் மற்றும் அணு இயற்பியலுக்கான ஆராய்ச்சிகளை மேற்கொள்ளத்தக்க வசதிகள் கொண்ட அடிப்படை இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனத்தை நிறுவ நிதி கோரியிருந்தார். டாடா அடிப்படை ஆய்வுகள் நிறுவனம் அடுத்த ஆண்டு மும்பையில் திறக்கப்பட்டது [12].
ஆகத்து மாதம் 1945 ஆம் ஆண்டில் இரோசிமா நகரத்தின் மீது அணுகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, நார்மன் ஃபெதர் மற்றும் யான் காக்ரோப்ட்டு ஆகியோரின் வழிகாடுதலின் கீழ் படித்த அணு இயற்பியலாளர் ஆர்.எசு.கிருட்டிணன் யுரேனியத்தின் மிகப்பெரிய ஆற்றல் உருவாக்கும் திறனை உணர்ந்தார், அணு வெடிப்பிலிருந்து கிடைக்கும் இத்தகைய மிகப்பெரிய ஆற்றலை இயந்திரங்கள் போன்றவற்றை இயக்கக் கிடைத்தால் அது தொழில்துறையில் ஒரு புரட்சியைக் கொண்டுவரும் என்ற தொலைநோக்கு பார்வை அவரிடம் பிறந்தது. மக்களின் அமைதியான பயன்பாட்டிற்காக அணுசக்தியைப் பயன்படுத்துவதில் உள்ள சிரமங்களையும் அவர் மேலும் உணர்ந்தார். அணுசக்தியை பயனுள்ள தொழில்துறை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு முன்னதாக அதிக ஆராய்ச்சி பணிகள் தேவைப்படுகின்றன என்று முடிவு செய்தார்.
மார்ச் மாதம் 1946 ஆம் ஆண்டு அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி சபை இந்தியாவின் அணுசக்தி வளங்களை ஆராய்வதற்கும், அபிவிருத்தி செய்வதற்கும் பயன்படுத்துவதற்கும் வழிகளை பரிந்துரைக்க பாபாவின் தலைமையில் ஒரு அணு ஆராய்ச்சி குழுவை அமைத்தது. அணுசக்தி வளங்களை ஆராய்வதற்கும், அபிவிருத்தி செய்து பயன்படுத்துவதற்கும் பிற நாடுகளில் இதே போன்ற அமைப்புகளுடன் இக்குழு தொடர்புகளை ஏற்படுத்தியது. அதே நேரத்தில், திருவிதாங்கூர் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி சபை கூடி திருவாங்கூரின் எதிர்கால தொழில்துறை வளர்ச்சி குறித்து விவாதித்தது. மற்ற செய்திகளுக்கு இடையில் அணுசக்திக்குப் பயன்படும் மதிப்புமிக்க தோரியம் தாதுவான மோனாசைட்டு மற்றும் இல்மனைட்டு ஆகியவற்றின் வளங்களை திருவிதாங்கூரில் மேம்படுத்துவதற்கான பரிந்துரைகளை இச்சபை செய்தது. அகில இந்திய திட்டமாக முயன்றால் இந்த திட்டத்தை மேற்கொள்ள முடியும் என்று சபை பரிந்துரைத்தது [13].
இதைத் தொடர்ந்து ஏப்ரல் மாதம் 1947 ஆம் ஆண்டில் திருவாங்கூருக்கு பாபா மற்றும் இயக்குனர் சர் சாந்தி சுவரூப் பட்நாகர் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். மற்றும் இராச்சியத்தின் திவான் சர் சி. பி. ராமசாமி ஐயருடன் பணி உறவை ஏற்படுத்தினர் [14].
இந்தியாவின் உள்நாட்டு யுரேனியம் இருப்புகள் மிகக் குறைவானவை; வெளிநாட்டிலிருந்தே தனது அணு மின் நிலையங்களின் தேவைக்காக இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது. 1990களிலிருந்து இந்தியாவின் முக்கிய அணு எரிபொருள் வழங்குனராக உருசியா இருந்து வருகிறது.[15] யுரேனியத்தின் உள்நாட்டு உற்பத்தி குறைந்த காரணத்தினால் [16] அணு மின் உற்பத்தி 2006ஆம் ஆண்டிலிருந்து 2008ஆம் ஆண்டில் 12.83% குறைந்தது.[17] இந்திய அமெரிக்க குடிசார் அணுவாற்றல் உடன்பாட்டினை அடுத்து செப்டம்பர் 2008இல் அணுவாற்றல் வழங்குவோர் குழுமம் பன்னாட்டு அணுவாற்றல் வணிகத்தை அனுமதித்த பின்னர்[18] இந்தியா இருநாடுகளுக்கிடையேயான அணுவாற்றல் குடிசார் தொழில்நுட்பக் கூட்டுறவு உடன்பாடுகளை பல நாடுகளுடன் கையெழுத்திட்டுள்ளது. பிரான்சு,[19] ஐக்கிய அமெரிக்கா,[20] ஐக்கிய இராச்சியம்,[21] கனடா.[22] மற்றும் தென் கொரியா [23] என்பன இவற்றில் குறிப்பிடத்தக்கன. மேலும் யுரேனியம் தாது பெறுதலுக்காக உருசியா,[24][25] மங்கோலியா,[26] கசக்ஸ்தான்,[27] அர்கெந்தீனா[28] மற்றும் நமீபியாயுடன் உடன்பாடுகள் கொண்டுள்ளது.[29] இந்திய தனியார் நிறுவனமொன்றிற்கு யுரேனியம் படிவுகள் தேடலுக்கு நைஜரில் ஒப்பந்தப் புள்ளி வென்றுள்ளது.[30]
மார்ச்சு 2011இல் ஆந்திரத்தின் கடப்பா மாவட்டத்தின் உள்ள தும்மலப்பள்ளி பகுதியில் இயற்கை யுரேனியப் படிவங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்தியாவில் யுரேனியம் தேடலுக்கான அமைப்பான அணுத் தாது தேடல் மற்றும் ஆய்வு இயக்ககம் இதுவரை 44,000 டன்கள் இயற்கை யுரேனியம் (U3O8) இருப்பை இப்பகுதியில் கண்டறிந்துள்ளது.[31]
தற்போது இருபது அணு மின் உலைகள் 4,780.00 மெவா மின்சாரம் உற்பத்தி செய்கின்றன (மொத்த நிறுவப்பட்ட திறனளவில் 2.9%).[32][33]
மின் நிலையம் | இயக்குனர் | மாநிலம் | வகை | அலகுகள் | மொத்த திறனளவு (மெவா) |
---|---|---|---|---|---|
கைகா | இந்திய அணுமின் கழகம் | கர்நாடகம் | கனநீர் | 220 x 4 | 880 |
கக்ரபார் | இந்திய அணுமின் கழகம் | குசராத் | கனநீர் | 220 x 2 | 440 |
கல்பாக்கம் | இந்திய அணுமின் கழகம் | தமிழ்நாடு | கனநீர் | 220 x 2 | 440 |
நரோரா | இந்திய அணுமின் கழகம் | உத்தரப் பிரதேசம் | கனநீர் | 220 x 2 | 440 |
ரவத்பாட்டா | இந்திய அணுமின் கழகம் | இராசத்தான் | கனநீர் | 100 x 1 200 x 1 220 x 4 |
1180 |
தாராப்பூர் | இந்திய அணுமின் கழகம் | மகாராட்டிரம் | கொதிநீர் (கனநீர்) | 160 x 2 540 x 2 |
1400 |
மொத்தம் | 20 | 4780 |
கீழ்காண்பவை கட்டமைக்கப்பட்டு வருகின்றன:[34]
அணுமின் நிலையம் | இயக்குனர் | மாநிலம் | வகை | அலகுகள் | மொத்த திறனளவு (மெவா) |
---|---|---|---|---|---|
கூடங்குளம் | இந்திய அணுமின் கழகம் | தமிழ்நாடு | விவிஈஆர் | 1000 x 2 | 2000 |
கல்பாக்கம் | பாவினி நிறுவனம் | தமிழ்நாடு | வேக ஈனுலை | 500 x 1 | 500 |
கக்ரபார் | இந்திய அணுமின் கழகம் | குசராத் | கனநீர் | 700 x 2 | 1400 |
ரவத்பாட்டா | இந்திய அணுமின் கழகம் | இராசத்தான் | கனநீர் | 700 x 2 | 1400 |
மொத்தம் | 7 | 5300 |
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help); Unknown parameter |=
ignored (help)
{{cite web}}
: Check date values in: |access-date=
(help)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)