இந்தியாவில் கள்ளக் குடியேறிகள் (Illegal immigrants in India) என்பது எந்தவித முறையான சட்டபூர்வ ஆவணங்களும் இல்லாமல் பிற நாட்டிலிருந்து இந்தியாவிற்குள் ஊடுருவி வாழும் மனிதர்களைக் குறிப்பதாகும். ஆனால் இவை அகதிகளைக் குறிப்பது அல்ல. இத்தகைய சட்டவிரோதக் குடியேறிகளைப் பற்றிய துல்லியமான எண்ணிக்கைபூர்வ ஆவணங்கள் எதுவும் இல்லை. 2001 ஆம் ஆண்டின் மக்கட்தொகைக் கணக்கெடுப்பில் வங்காள தேசத்திலிருந்து அதிக அளவு கள்ளக் குடியேறிகள் இந்தியாவில் வசிப்பதாக கணக்கிடப்பட்டது.[1] மேலும் பாக்கிஸ்தானிலிருந்து இந்துகளும், சீக்கியர்களும் இந்தியாவில் சட்டவிரோதமாகக் குடியேறியுள்ளனர்.[1]
2001 ஆம் ஆண்டின் மக்கட்தொகைக் கணக்கெடுப்பின் படி 30,84,826 பேர் சட்டவிரோதக் கள்ளக் குடியேறிகளாக வங்காளதேசத்திலிருந்து இந்தியாவில் குடியேறியுள்ளனர்.[1] மேலும் 20,00,000 பேர் வங்கதேசத்திலிருந்து அசாம் மாநிலத்தில் சட்டவிரோதக் கள்ளக் குடியேறிகளாக குடியிருப்பதாக அசாம் மாநில அறிக்கை கூறுகிறது.[2][3][4][5] இத்தகைய வங்காளதேச சட்டவிரோதக் கள்ளக் குடியேறிகள் இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பார்கள் என உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.[6]
2001 ஆம் ஆண்டின் மக்கட்தொகைக் கணக்கெடுப்பின் படி 7,700 ற்கும் அதிகமான சட்டவிரோதக் கள்ளக் குடியேறிகள் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கு வந்து குடியேறியுள்ளனர். இவர்கள் சீக்கியம் மற்றும் இந்து சமயத்தைச் சார்ந்தவர்கள்.[7]
இந்தியாவின் மிசோரம் மாநிலத்தில் 50,000 முதல் 1,00,00 பேர் சட்டவிரோதக் கள்ளக் குடியேறிகளாக பர்மாவிலிருந்து இந்தியாவிற்கு வந்து குடியேறியுள்ளனர். இவர்கள் தில்லியிலும் காணப்படுகின்றனர்.[8][9][10]
2009 ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு 19,000 ற்கும் அதிகமான சட்டவிரோதக் கள்ளக் குடியேறிகள் ஆப்கானிஸ்தானிலிருந்து குடியேறியுள்ளனர்.[7]