இந்தியாவில் காபி உற்பத்தி என்பது தென் இந்திய மாநிலங்களின் மலைத் தொடர்ப் பகுதிகளிலேயே மிகுதியாக உற்பத்தி செய்யப்படுகிறது.இந்தியாவின் மொத்த 8200 டன் காபி உற்பத்தியில் கர்நாடகம் 71%, கேரளம் 21%, தமிழகத்தில் 5% உற்பத்தி செய்யப்படுகிறது.[1] இந்திய மலை சாரல்களில் நிழலில் விளையும் இந்திய காபி கொட்டைகளின் தரமானது உலகின் வேறு பகுதிகளில் நேரடி சூரிய ஒளியில் விளையும் காபி கொட்டைகளின் தரத்தை விட சிறந்ததாக கருதப்படுகிறது.[1]. இந்தியாவில் சுமார் 2,50,000 காபி விவசாயிகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் 98 % சிறு விவசாயிகள் ஆவர்.[2]. 2009 ஆண்டின் கணக்கீட்டின்படி உலக காபி உற்பத்தியில் இந்தியாவின் பங்கு 4.5 % மட்டுமே. நாட்டின் காபி உற்பத்தியில் கிட்டத்தட்ட 80% ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்தியாவில் காபி உற்பத்தி என்பது ஒரு இசுலாமிய துறவியான பாபா புடனுடன் மூலம் துவங்குகின்றது. கி பி 875 வாக்கில் எத்தோப்பியாவில் இருந்து அரேபியாவிற்கு காபி தாவரம் அரேபிய வர்த்தகர்களால் கொண்டு வரப்பட்டது. அரேபியாவில் அப்போது முளைக்கக்கூடிய காபி விதைகளை நாட்டை விட்டு வெளியே எடுத்து செல்ல தடை இருந்ததது. 1670 ஆண்டு வாக்கில் பாபா புதன் என்பவர் மெக்காவிற்கு புனித பயணம் மேற்கொண்டு திரும்பும் போது ஏமன் நாட்டில் இருந்து ஏழு காபி கொட்டை விதைகளைக் யாருக்கும் தெரியாமல் (தாடியில் மறைத்து) கொண்டு வந்து விட்டார்.[2][3]. ஏழு என்ற எண் இசுலாமிய மார்க்கத்தில் புனிதமாக கருதப்பட்டதால் அது ஆன்மிகச் செயலாக கருதப்படும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் ஏழு விதைகளை கொண்டு வந்தார்[4][5]. பின் கர்காடாகவில் உள்ள சந்திரகிரி மலைத்தொடர்களில் அதைப் பயிரிட்டார். தற்போது இம்மலைப் பகுதிகள் அவரின் நினைவாக பாபா புடின் மலை என்று அழைக்கப்படுகிறது.
பாபா புதினின் முதல் நடவிற்கு பின் 1670 ல் முறையான பயிரிடுதலானது இந்தியாவில் துவங்கியது. பின்னர் காபி பயிரிடுதல் கேரளாவின் வயநாடு மற்றும் தமிழ்நாட்டின் சேர்வராயன், நீலகிரி மலைகளில் பரவியது. பிரித்தானிய அரசாங்கம் பெருமளவு காப்பியை இங்கிலாந்திற்கு ஏற்றுமதி செய்ததின் விளைவால் காப்பி உற்பத்தி பெருமளவில் வளர்ந்தது.
1898 ல் ப்ரோடி என்ற பிரித்தானியரின் முயற்சியால் ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் அரக்கு சமவெளிப் பகுதிகளில் பரவியது.
இந்தியாவின் காபி உற்பத்தியில் கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் 98% உற்பத்தியினை செய்கின்றன. 2005-2006 ல் இந்தியா 2 லட்சம் கிலோ கிராம் காப்பி விதைகளை ஏற்றுமதி செய்துள்ளது. அராபிக்கா என்ற காபி விதையே இந்தியாவின் அபிமான வகையாக இருந்து கடந்த பத்தாண்டுகளாக ரோபஸ்டா என்ற வகை பிரபலமடைந்ததுள்ளது.
தமிழ்நாட்டில் ஒரு லட்சம் ஏக்கர் வரை காபி பயிரிடப்பட்டுள்ளது. 17880 விவசாயிகள் காபி பயிரிட்டுள்ளனர். காபி விவசாயிகளில் 98 சதவீதம் பேர் சிறு விவசாயிகள். ஐந்து ஏக்கர் வரை காப்பி தோட்டம் உள்ளவர்கள் 14112 விவ சாயிகள், 5 முதல் 10 ஏக்கர் வரை காப்பி தோட்டம் வைத்துள்ளவர்கள் 2336 விவ சாயிகள் உள்ளனர். தமிழ்நாட்டில் 2017-18ல் 21400 டன்கள் காபி உற்பத்தியாகி உள்ளது. இது நாட்டின் மொத்த உற்பத்தி யில் 5.8 சதவீதம் மட்டுமே.[6][7]
இடம் | ஹெக்டேர் |
---|---|
திண்டுக்கல் மாவட்டம் , கொடைக்கானல் | 13436 |
நீலகிரி மாவட்டம் | 8330 |
சேலம் மாவட்டம் ஏற்காடு, கருமந்துறை | 6600 |
தேனி மாவட்டம் போடி, பெரியகுளம் | 3758 |
திருப்பூர் வால்பாறை | 2808 |
நாமக்கல் கொல்லிமலை | 4935 |
மொத்தம் | 39867 |
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)