இந்தியாவில் குடும்ப வன்முறையானது (Domestic violence in India) ஒரு நபர் தங்களது உறவினரால் அனுபவிக்கும் வன்முறைகளை உள்ளடக்கியது , ஆனால் பொதுவாக ஒரு பெண் தனது குடும்பத்தில் உள்ள ஆண்களால் அல்லது ஆண் உறவினர்களால் அனுபவிக்கும் வன்முறையினைக் குறிப்பது ஆகும். [1] [2] 2005 இல் தேசிய குடும்ப மற்றும் சுகாதார கணக்கெடுப்பின்படி, 15-49 வயதுடைய பெண்கள் 33.5% மற்றும் 8.5% தங்கள் வாழ்நாள் முழுவதும் தங்களது ஆண் குடும்ப உறுப்பினர்களால் பாலியல் வன்முறைக்கு ஆளாவதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது. [3] 2014 ஆம் ஆண்டில் தி லேன்செட்டில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், இந்தியாவில் பாலியல் வன்கொடுமை விகிதம் உலகிலேயே மிகக் குறைவானதாக இருந்தாலும், அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவின் 27.5 சதவீத பெண்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் வன்முறைக்கு ஆளாக்கப்படுவதாக அந்த ஆய்வில் தெரியவந்தது.[4] இருப்பினும், தாம்சன் ராய்ட்டர்ஸ் அறக்கட்டளையால் நிபுணர்களிடையே நடத்தப்பட்ட ஒரு கருத்துக் கணிப்பில், பெண்களுக்கு உலகிலேயே மிகவும் ஆபத்தான நாடுகளின் பட்டியலில் இந்தியா தான் முதலிடம் பெற்றது . [5]
2012 ஆம் ஆண்டின் தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கையில், 100,000 க்கு 46 பேர், பலாத்கார விகிதம் 100,000 க்கு 2 பேர், வரதட்சணை கொலை விகிதம் 100,000 க்கு 0.7எனவும் கணவர் அல்லது அவரது உறவினர்களால் ஏற்படும் வன்முறையின் விகிதமானது 100,000 க்கு 5.9 உள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. [6] இந்த அறிக்கை முடிவானது பல சகோதர நாடுகளை விட இந்தியா குறைவாக உள்ளதாகத் தெரிவித்தது. குறிப்பாக குடும்ப வன்முறை விகிதம் அமெரிக்காவில் 100,000 க்கு 590 பேர் எனவும் சர்வதேச அளவில் மரண விகிதமானது 100,000 க்கு 6.2 எனவும் உள்ளது. [7] [8] [9]
இந்தியாவில் பல குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டங்கள் உள்ளன. வரதட்சணை கொடுப்பதும் பெறுவதும் குற்றமாகும் என்பதற்கான வரதட்சணை தடைச் சட்டம் 1961 சட்டம் ஆகும். 1961 சட்டத்தை வலுப்படுத்தும் முயற்சியாக, இரண்டு புதிய பிரிவுகள், பிரிவு 498A மற்றும் பிரிவு 304B ஆகியவை 1983 மற்றும் 1986 இல் இந்திய தண்டனைச் சட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன. சமீபத்தில் குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம் (PWDVA) 2005 உருவாக்கப்பட்டுள்ளது.இந்தச் சட்டம் ஒரு குற்றவியல் சட்டமாகும், இது உடல் ரீதியான, உணர்ச்சி, பாலியல், வாய்மொழி மற்றும் பொருளாதார துஷ்பிரயோகம் ஆகியவ வன்முறைகளை வீட்டு வன்முறையாக அறிவித்தது.
இந்தியாவில் 15-49 வயதுடைய பெண்கள் தங்களது வாழ்நாள் முழுவதும் பாலியல் வன்கொடுமைகளை சந்திப்பதாக 2006 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்திய தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு மதிப்பிட்டுள்ளது. திருமணத்திற்குப் பிறகு தனது கணவரால் ஏற்படும் பாலியல் துன்புறுத்தல்களையும் இது உள்ளடக்கியுள்ளது. மேலும் இந்த ஆய்வானது பெண் திருமணத்திற்குப் பிறகு தான் விரும்பாத சமயத்தில் கணவரால் அவரது பாலியல் இச்சைகளுக்கு உடன்படுமாறு வற்புறுத்தப்படுவது அல்லது பெண் விரும்பாத வகையில் கணவரால் அவரது விருப்பத்திற்கேற்ப பாலியல் செயல்களைச் செய்யச் செல்லி வற்புறுத்தல் ஆகியனவும் "பாலியல் வன்முறை" எனும் வரையறைக்குள் உட்படுத்துகிறது. [10] இந்த ஆய்வு நாடு முழுவதும் 83,703 பெண்களை மாதிரியாகக் கொண்டு நடத்தப்பட்டது, மேலும் 15-49 வயதுக்குட்பட்ட பெண்களில் 8.5% பெண்கள் தங்கள் வாழ்நாள் முழுவதிலும் பாலியல் வன்முறையை அனுபவித்திருக்கிறார்கள் என்றும் இந்த அறிக்கை கூறுகிறது. [11] இந்த எண்ணிக்கையானது கணவன் மனைவியின் திருமண வாழ்க்கையின் போது கட்டாயப்படுத்தப்பட்ட அனைத்து வகையான பாலியல் செயல்பாடுகளையும் உள்ளடக்கியது ஆகும். ஆனால்,இத்தகைய செயல்பாடுகள் இந்திய சட்டத்தால் கற்பழிப்பாக அங்கீகரிக்கப்படவில்லை.
{{cite web}}
: |first=
has generic name (help)