இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
இந்தியாவில் பல சுற்றுச்சூழல் பிரச்சினைகள் உள்ளன. காற்று மாசுபாடு, நீர் மாசுபாடு, குப்பை, மற்றும் இயற்கை சூழலுக்கு மாசுபாடு அனைத்தும் இந்தியா எதிர்கொள்ளும் சிக்கல்களாகும். 1947 முதல் 1995 வரை சுற்றுச்சூழல் மோசமாக இருந்தது. தரவு சேகரிப்பு மற்றும் உலக வங்கி நிபுணர்களின் சூழல் மதிப்பீட்டு ஆய்வுகள் படி, 1995 முதல் 2010 வரை இந்தியா அதன் சுற்றுச் சூழல் தரத்தை மேம்படுத்தும் முயற்சியில் உலகளவில் மிக வேகமான முன்னேற்றம் அடைந்துள்ளது. இன்னும், இந்தியா வளர்ந்த நாடுகளில் அனுபவித்து வரும் சுற்றுச்சூழல் தரத்தை எட்ட நீண்ட வழி உள்ளது.
சிலர் பொருளாதார வளர்ச்சி, சுற்றுச்சூழல் பிரச்சினைகள் காரணமாக உள்ளது என்றும் வேறுசிலர் பொருளாதார வளர்ச்சி இந்திய சுற்றுச்சூழல் மேலாண்மையை மேம்படுத்தவும் மாசுபாட்டை தடுக்கவும் முக்கியம் என்றும் கருத்து தெருவிக்கின்றனர். இந்தியாவின் வளர்ந்து வரும் மக்கள் தொகை இந்திய சுற்றுச்சூழல் சீரழிவு முதன்மை காரணம் என்றும் கூறப்படுகிறது. முறையான ஆய்வுகள் இந்த கோட்பாட்டிற்கு எதிராகவுள்ளன[1]
இந்தியாவில் மாசுபாட்டிற்கு முக்கிய காரணம் ஆற்றலுக்காக எரி விறகு மற்றும் குப்பை மற்றும் கழிவு அகற்றும் சேவைகளில் ஒருங்கிணைப்பு இல்லாதலும் ஆகும்.[2] கழிவுநீர் சுத்திகரிப்பு நடவடிக்கைகள் இல்லாதலும், வெள்ள கட்டுப்பாடு மற்றும் மழை நீர் வடிகால் இல்லாதலும் நுகர்வோர் கழிவுகளை முக்கிய ஆறுகளுக்குள் திசை திருப்புவதும் ஆறுகளுக்கு அருகில் தகன நடைமுறைகள் மேற்கொள்ளுவதும், நீர் மாசுபாட்டிற்கு காரணம். அதிக மாசு ஏற்படுத்தும் பழைய பொது போக்குவரத்து, மற்றும் 1950 முதல் 1980க்கு இடையில் கட்டப்பட்ட அரசுக்கு சொந்தமான, உயர் உமிழ்வு தொழிற்சாலைகளினாலும் மாசுபாடு ஏற்படுகிறது.[3][4][5][6]
இந்தியாவில் நீர் மற்றும் சுகாதார பிரச்சினைகள் பல சுற்று சூழல் பிரச்சினைகளுடன் தொடர்புடையன.
சுற்றுச்சூழல் பிரச்சினைகள் நோய்களுக்கு முதன்மை காரணமாவதோடு, சுகாதார பிரச்சினைகள் இந்தியர்களின் நீண்ட ஆயுட்காலத்தை பாதிக்கிறது.
யஜ்னவல்க்ய ஸ்மிருதி என்பது நிலை வரைவு மற்றும் நீதி பரிபாலனம் பற்றிய ஒரு வரலாற்று இந்திய உரை. கி.பி. 5 ஆம் நூற்றாண்டில் முன் எழுதப்பட்டது. இந்நூலில் மரங்களை வெட்டுதல் போன்ற செயல்களை தடை செய்ததோடு மட்டுமில்லாமல் அதற்கான தண்டனை பரிந்துரைக்கப்படுகிறது. மவுரிய காலத்தில் எழுதப்பட்ட கௌடல்யரின் அர்த்தசாஸ்திரம், வன நிர்வாகத்தின் தேவையை வலியுறுத்துகிறது. அசோகர்,தனது தூண் பிரகடனங்கள் மூலம் சூழல் மற்றும் பல்லுயிர் நலன் பற்றி தனது பார்வையை வெளிப்படுத்தினார்.
பிரித்தானியரின் இந்திய ஆட்சி சூழல் தொடர்பான பல சட்டங்களை இயற்றியது. இவற்றுள் கடற்கரை தொல்லை சட்டம் 1853 (மும்பை மற்றும் கோலாப) மற்றும் 1857 ஓரியண்டல் எரிவாயு நிறுவனத்தின் சட்டம் அடங்கும். 1860 இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம், தானாக முன்வந்து எந்தவொரு பொது நீரூற்று, மற்றும் ஏரி நீரை முறைகேடுகள் செய்பவருக்கு அபராதம் விதித்தது. பிரித்தானிய இந்தியா காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சட்டங்களை இயற்றியது. இவற்றுள் முக்கியமானவை 1905 வங்க ஸ்மோக் தொல்லை சட்டம் மற்றும் 1912 பம்பாய் ஸ்மோக் தொல்லை சட்டம். இந்த சட்டங்களீன் நோக்கம் தோல்வியடைந்த போதும், இத்தகைய சட்டங்கள் இந்தியாவில் சுற்று சூழல் விதிகளின் வளர்ச்சிக்கு முன்னோடியாக இருந்தது.
பிரிட்டனில் இருந்து சுதந்திரம் பெற்றதும் இந்தியாவின் அரசியலமைப்பு பிரித்தானியரால் இயற்றப்பட்ட பல சட்டங்களை பின்பற்றியது. சுற்றுசுழலை பாதுகாக்கும் எந்த ஒரு குறிப்பிட்ட சட்டமும், அப்போதைய அரசியல் சாசனத்தில் இல்லை. இந்தியா 1976ல் அதன் அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்தது. திருத்தப்பட்ட அரசியலமைப்பின் பகுதி IV விதி 48 (ஏ) படி, சூழலை பாதுகாக்கவும், மேம்படுத்தவும் மற்றும் நாட்டின் காடுகள் மற்றும் வனப்பகுதியை பாதுகாக்கவும் அரசு முயற்சி செய்ய வேண்டும். விதி 51 படி இந்திய அரசு கூடுதல் சுற்றுச்சூழல் ஆணைகள் அமல்படுத்தியது.
அண்மைய வரலாற்றில் இந்திய சட்டங்கள், நீர் (தடுப்பு மற்றும் மாசு கட்டுப்பாடு) 1974 சட்டம், வன (பாதுகாப்பு) 1980 சட்டம், மற்றும் காற்று (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) 1981 சட்டம் ஆகியவை அடங்கும். காற்று சட்டம் ஸ்டாக்ஹோம் மாநாட்டில் செய்யப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது போபால் விஷ வாயுக் கசிவு சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டத்தை இந்திய அரசு இயற்ற காரணமாய் இருந்தது. இந்தியாவில் 2000 ஆம் ஆண்டில் ஒலி மாசு (ஒழுங்குமுறை மற்றும் கட்டுப்பாடு) விதிகளின் தொகுப்பு இயற்றப்பட்டது.
1985 ஆம் ஆண்டு, இந்திய அரசாங்கத்தின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் உருவாக்கப்பட்டது. இந்த அமைச்சகம் சுற்றுச்சூழல் பாதுகாப்பை கட்டுப்படுத்தவும் உறுதிப்படுத்தவும் பொறுப்பேற்கும்.
இந்திய நடுவண் அரசாங்கம் சட்டங்களை தீவிரமாக அமல்படுத்தியபோதிலும் சுற்றுச்சூழலின் தரம் உண்மையில் 1947 லிருந்து 1990க்கு இடையே மோசமடைந்தது. இந்திய பொருளாதாரம் தேசியமயமாக்கப்பட்டது. இந்தியவிற்கு சொந்தமான, மற்றும் அரசு நடத்தும் நிறுவனங்கள் விதிமுறைகளை பெரும்பாலும் புறக்கணித்தனர். ஊர்ப்புற ஏழைகள் வேறு வழி இல்லாமல் வாழ்க்கைக்கு ஆதாரமாக என்ன வழி சாத்தியமோ அதைத் தேர்ந்தெடுக்க வேண்டிருந்தது. இந்திய மாநில அரசுகள் பெரும்பாலும் மத்திய அரசு இயற்றிய சுற்றுச்சூழல் சட்டங்களை வெறும் காகிதமாக கருதின. காடுகள் குறைந்து காற்று, நீர் மாசுபாடு அதிகரித்தது.
1990களில் தொடங்கி சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. 1990 ஆண்டு முதல் இந்திய வரலாற்றில் முதல் முறையாக,காற்று மாசுபடுத்திகளின் செறிவு ஒவ்வொரு 5 ஆண்டு காலகட்டத்திலும் குறைய தொடங்கியது. 1992 ஆம் ஆண்டு முதல் 2010, வரை, செயற்கைக்கோளின் தகவல்களின் படி இந்திய வனப்பகுதி 4 மில்லியனுக்கும் மேற்பட்ட ஹெக்டேராக அதாவது 7 சதவிகிதமாக் அதிகரித்துள்ளது .[7]
காற்று மாசுபாடு, கழிவுகளின் மோசமான நிர்வாகம், வளர்ந்து வரும் தண்ணீர் பற்றாக்குறை, நிலத்தடிநீரின் வீழ்ச்சி, நீர் மாசுபாடு, காடுகள் தரம் மற்றும் பாதுகாப்பு, பல்லுயிர் இழப்பு, மற்றும் நிலம் அழிப்பு முதலிய முக்கிய சுற்றுச்சூழல் பிரச்சினைகளை இந்தியா இன்று சந்திக்கிறது. இந்திய மக்கடதொகை வளர்ச்சி, சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கும் மற்றும் அதன் வளங்களுக்கும் அழுத்தம் சேர்க்கிறது.
மக்கள் தொகை வளர்ச்சி மற்றும் சூழ்நிலைக்கு இடையேயான செயலெதிர் பற்றிய ஆய்வு மற்றும் விவாதத்திற்கு ஒரு நீண்ட வரலாறு உள்ளது. பிரித்தானிய சிந்தனையாளர் மால்தூஸ் படி, வளர்ந்து வரும் மக்கள் தொகையினால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீரழிவு காரணமாக, குறைந்த தரம் வாய்ந்த நிலத்தில் சாகுபடி செய்யும் கட்டாயம் ஏற்படுகிறது. இந்த சுற்றுச்சூழல் சீரழிவு இறுதியில், விவசாய விளைச்சல் மற்றும் உணவின் அளவை குறைக்கிறது. இதனால் பஞ்சம் நோய்கள், மற்றும் மரணம் ஏற்படுகிறது. மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் குறைகிறது.
1798 மற்றும் 1826க்கு இடையே வெளியிடப்பட்ட மால்தூஸ் கோட்பாடு, பகுத்தாய்வு செய்யப்பட்டு விமர்சிக்கப்பட்டது. அமெரிக்க சிந்தனையாளர் ஹென்றி ஜார்ஜும் அமெரிக்க பொருளாதார வல்லுனர் ஜூலியன் லிங்கனும் மால்தூஸ் கோட்பாட்டை விமர்சித்துள்ளார்கள். அவர் மனித வரலாற்றில் மால்தூஸின் கணிப்புகளை தவறு என்று நிரூபிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். 20 ஆம் நூற்றாண்டின் மகத்தான மக்கள் தொகை வளர்ச்சி ஒரு மால்தூசிய பேராபத்தை விளைவிக்கவில்லை. இதற்கான காரணங்கள் பின்வருமாறு: மனித அறிவு அதிகரிப்பு, உற்பத்தி, கண்டுபிடிப்பு மற்றும் பயன்பாடுகளின் அதிகரிப்பு, விவசாய முறைகளில் மேம்பாடுகள் (தொழில்துறை விவசாயம்), இயந்திரமயமாக்குதல் (டிராக்டர்கள்), (3 உயர் மகசூல் வகை)கோதுமைகள் மற்றும் பிற தாவரங்களின் அறிமுகம்(பசுமை புரட்சி), பயிர் பூச்சிகளை கட்டுப்படுத்த பூச்சிக்கொல்லிகள் முதலியனவாகும்.[8]
மேலும் அண்மையில் அறிவார்ந்த கட்டுரைகள் மக்கள் வளர்ச்சி, சுற்றுச்சூழல் சீரழிவுக்கு காரணமாக இருக்கலாம் என்பதில் ஐயம் இல்லை எனினும், அதன் விளைவுகளை பொருளாதார வளர்ச்சி மற்றும் நவீன தொழில்நுட்பம் மூலம் மாற்ற முடியும் என்று ஒப்பு கொண்டுள்ளன. சுற்றுச்சூழல் பொருளாதார ஆராய்ச்சி, சுற்றுச்சூழல் தரத்திற்கும் சுற்றுப்புற காற்று மாசுபடுத்திகளின் செறிவிற்கும், மற்றும் தனிநபர் வருமானதிற்கும் இடையே உள்ள உறவை வெளிப்படுத்துகிறது. இந்த குஸ்நெட்ஸ் என்று அழைக்கப்படும் சுற்றுச்சூழல் வளைவு சுற்றுச்சூழலின் தரம், பொருள் வாங்கும் அடிப்படையில் தனிநபர் வருமானம் சுமார் $ 5,000 வரை மோசமாகி, பின்னர் மேம்படுவதை காட்டுகிறது. தொழில்நுட்பம் மற்றும் வளங்களை உபயோகிப்பதில் அறிவியல் மேலாண்மையை தொடர்ந்து தழுவல், ஒவ்வொரு பொருளாதார துறையிலும் உற்பத்தியை தொடர்ந்து அதிகரித்தல், தொழில் முனைவோர் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் பொருளாதார விரிவாக்கம் முதலியவை இந்தகூற்று உண்மையாக முக்கிய தேவை ஆகும்.
இந்தியாவில் சுத்தபடுத்தப்படாத கழிவுநீர் காரணமாக ஏற்படும் நீர் மாசுபாடு பெரும் சிக்கலாக கருதப்படுகிறது. கங்கை,யமுனை போன்ற மக்கள்தொகை அதிகம் உள்ள பகுதிகளில் பாயும் ஆறுகள் அனைத்தும் மிகவும் அதிகமாக மாசுபட்டு இருக்கின்றன. நீர் வழங்கள் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்த அரசு மற்றும் சமூகத்தின் பல்வேறு மட்டங்களில் முயற்சிகள், மேற்கொண்டபோதும் அவை போதுமானதாக இல்லை. தற்போது கங்கை நதி மாசு அடைந்துள்ளது அதனை சுத்தப்படுத்த மத்திய அமைச்சரகம் சில நல்ல நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டுள்ளது ......
இந்தியாவில் காற்று மாசுபாடு ஒரு தீவிர பிரச்சினையாகும். விறகு மற்றும் உயிரி பொருள் எரிப்பு , எரிபொருள் கலப்படம், வாகன மாசு மற்றும் போக்குவரத்து நெரிசல் முதலியவை முக்கிய காரணங்கள். இந்தியா உலகிலேயே அதிகமாக ஆற்றலுக்காக விறகு, விவசாய கழிவு மற்றும் உயிரிபொருள்களை நுகர்கிறது. பாரம்பரிய எரிபொருள் (விறகு , பயிர் எச்சம் மற்றும் சாணம் ) மொத்ம்த சுமார் 90% இந்திய கிராமப்புறத்தில் ஆற்றலுக்காக பயன்படுத்தபடுகிறது. நகர்ப்புற பகுதிகளில், இந்த பாரம்பரிய எரிபொருள் மொத்தம் 24% பயன்படுத்தபடுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் மரம், வேளாண் கழிவுகள் மற்றும் உயிரி எரிப்பு பொருட்கள் மூலம் 165 மில்லியன் டன்கள் எரிபொருள் வெளியீடுகளில் உட்புற மற்றும் வெளிப்புற காற்றில் கலக்கின்றன. வாகன மாசு காற்று மாசுபாட்டிற்கு மற்றொரு காரணமாக இருக்கிறது. வாகனபுகையினால் ஏற்படும் மாசு, போக்குவரத்து நெரிசல் எரிபொருள் கலப்படம் மற்றும், தரம் குறைந்த எரிபொருள் எரிப்பு செயல்திறன், அதிவேக சாலை நெட்வொர்க் ஆகியவற்றால் மோசமடையலாம்.[2][9][10][11][12][13]
காற்று(தடுப்பு மற்றும் மாசு கட்டுப்பாடு) சட்டம் காற்று மாசுபாடு 1981 இல் நிறைவேற்றப்பட்டது. இதற்கு பிறகு சில அளவிடக்கூடிய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. எனினும், 2012 சூழல் செயற்பாட்டுச் சுட்டெண் 132 நாடுகளில் மிக குறைந்த காற்று தரம் கொண்டநாடாக இந்தியவை மதிப்பிட்டுள்ளது.
வார்ப்புரு:காண்க குப்பை கூளங்கள் இந்திய நகர்ப்புற, கிராமப்புற பகுதிகளில் ஒரு பொதுவான காட்சியாகும். அது மாசுபாட்டிற்கு ஒரு முக்கிய காரணமாக உள்ளது. இந்திய நகரங்கள் 100 மில்லியன் டன்களுக்கு மேற்பட்ட திடக் கழிவை ஒரு ஆண்டில் உருவாக்குகிறது. தெரு முனைகளில் குப்பை மலை போல குவிந்துள்ளது. பொது இடங்களில் மற்றும் தெருவோரங்களில் குப்பை குவிக்கப் பட்டிருப்பத்துடன் ஆறுகள் மற்றும் கால்வாய்களில் குப்பை கொட்டப்படுகின்றது இந்தியவில் குப்பை நெருக்கடி அதிகரித்து வருவதற்கு நுகர்தலே காரணம். இந்திய கழிவு பிரச்சனை கூட ஆட்சி முறையின் ஒரு தோல்வியாக கருதப்படுகிறது.
2000 ஆம் ஆண்டில், இந்தியாவின் உச்ச நீதிமன்றம் அனைத்து இந்திய நகரங்களில் மறுசுழற்சி மற்றும் உரமாக்கல், வீட்டு கழிவு சேகரிப்பு உள்ளிட்ட ஒரு விரிவான கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று அறிவுறித்தியது. இவை புறக்கணிக்கப்பட்டன. உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலுக்கு இணங்க எந்த பெரிய நகரத்திலும் ஒரு விரிவான திட்டம் இயங்கவில்லை.
நகரங்களில் வாகனங்களின் தேவையற்ற ஒலிபானின் ஓசை அதிக இறைச்சல் ஏற்படுத்துகிறது, அரசியல் நோக்கங்களுக்காகவும், கோயில்கள் மற்றும் மசூதிகளில் போதனைகளுக்காகவும் ஒலிபெருக்கி பயன்பாடு குடியிருப்பு பகுதிகளில் மோசமான ஒலி மாசு ஏற்படுத்துகிறது. ஜனவரி 2010ல், இந்திய அரசு நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளில், அனுமதிக்கப்பட்ட இரைச்சல் அளவு விதிகளை வெளியிட்டது.
இந்திய உச்ச நீதிமன்றம் 1980களின் பிற்பகுதியிலிருந்து இந்திய சுற்றுச்சூழல் பிரச்சினைகளைப் போக்குவதில் கவனம் செலுத்துகிறது.. பெரும்பாலான நாடுகளில் சுற்றுச்சூழல் பிரச்சினைகளை அரசாங்கத்தின் சட்டத்துறை மற்றும் செயற்குழுக்கள் திட்டமிட்டு செயல்படுத்துகின்றன. ஆனால் இந்தியாவின் அனுபவம் வித்தியாசமானது. இந்திய உச்ச நீதிமன்றம் நேரடியாக சுற்றுச்சூழல் சட்டங்களை இயற்றி விளக்கங்கள் அளிப்பதோடு புதிய மாற்றங்களை அறிமுகம் செய்து வருகிறது. நீதிமன்றம் சூழலை பாதுகாக்க புதிய கொள்கைகள் கொண்டு வந்ததோடு, சுற்றுச்சூழல் சட்டங்களுக்கு புதிய விளக்கம் அளித்துள்ளது. புதிய நிறுவனங்கள் மற்றும் கட்டமைப்புகளை உருவாக்கியதோடு, ஏற்கனவே உள்ள அமைப்புகளுக்கு தீர்ப்புகள் மற்றும் தொடர் அறிவுறுத்தல்கள் மூலம் கூடுதல் அதிகாரங்களை வழங்கியது. தனது ஆணையில் சுற்றுச்சூழல் நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்துவதற்கான செயல்முறைகள் மற்றும், நிர்வாக நடவடிக்கைகள் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை வழங்கும். சில விமர்சகர்கள், இந்திய உச்ச நீதிமன்றத்தை பசுமை பென்ச் அல்லது குப்பை மேற்பார்வையாளர்களின் பிரபு என விவரிக்கிறார்கள். ஆதரவாளர்கள் இந்திய உச்ச நீதிமன்றம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தில் புதிய கொள்கைகள் கொண்டு வருவதோடு நீதி வழங்குவதிலும் முன்னோடியாக திகழ்வதாக போற்றுகிறார்கள்.[14]
இந்திய உச்ச நீதிமன்றம் நிர்வாகங்களின் செயற்பாடுகளுக்கு விதிக்கும் தடைகளுக்கான காரணங்கள், சிக்கலானவை என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அரசு நிறுவனங்களும் அரசுக்கு சொந்தமான அமைப்புகளும் தங்கள் சட்டப்படியான கடமைகளை சரிவர செய்யாததே இதற்கு முக்கிய காரணமாகும். இதுவே மக்கள் நலனுக்காக சமூக குழுக்கள் நீதிமன்றங்களில், குறிப்பாக உச்ச நீதிமன்றங்களில் புகார்கள் பதிவு செய்ய தூண்டியிருக்கிறது.
சுற்றுச்சூழல் பிரச்சினைகள் பற்றிய பொது நலவழக்குகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள், இந்திய உச்ச நீதிமன்றத்திற்கு மட்டுமின்றி உயர் நீதி மன்றங்களுக்கு சென்றுள்ளன. மாநிலங்களின் உயர் நீதிமன்றங்களிலும் வழக்குகள் பதிவாகியுள்ளன.
சுற்றுச்சூழல் பிரச்சினைகள் மீது இந்திய நீதிமன்றத்தின் நடவடிக்கைகளும், ஆலோசனைகளும், இந்தியாவின் அனுபவத்தில் நேர்மறை விளைவுகளையே அளித்துள்ளது. உச்ச நீதிமன்றம், தீவிர நீதிமன்ற நடவடிக்கைகள் மூலம், இந்திய மக்களின் நம்பிக்கை சின்னமாக மாறியுள்ளது என்று ஆதரவாளர்கள் கூறுகின்றனர். நீதிமன்ற நடவடிக்கை விளைவாக, இந்திய உச்ச நீதிமன்றம் ஒரு புதிய ஒழுங்குமுறை மற்றும் உரிமைகளை கொண்டு வந்துள்ளது. இந்திய அரசு தன்னிச்சையாக செயல்பட முடியாது என்றும் நியாயமான மற்றும் பொது நலன்கருதி செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது, மீறினால் நீதிமன்றம் தலையீட்டு அந்த செய்கை செல்லுபடியாகாததாக செய்துவிடும்.
இந்தியாவில் சூழல்தொகுப்பின் பிரச்சினைகள் சுற்றுச்சூழல் பிரச்சினைகளின் ஒவ்வொரு அங்கமும் முக்கியமான பகுதியுமாகும். காற்றின் குறைந்த தரம் நீர் மாசுபாடு, மற்றும் குப்பை மாசுபாடு ஆகிய அனைத்தும் சூழல்தொகுப்பிற்கு தேவையான உணவு மற்றும் சுற்றுச்சூழலின் தரத்தை பாதிக்கும்.
இந்தியா ஒரு பெரிய பன்முகப்பட்ட நாடு. அதன் நிலப்பரப்பு மிகவும் வறண்ட பாலைவனங்களையும் உலகின் மிக உயர்ந்த மழை பெய்யும் பகுதிகளையும் கடற்கரை மற்றும் ஆல்பைன் மலை பகுதிகளையும், வெப்ப மண்டல தீவுகளையும் ஆற்றங்கரைகளையும் கொண்டது. இந்தியா மிக அதிகமான காட்டு தாவர வகைகளை கொண்டது. இந்தியா உலகின் பன்னிரண்டாவது உயிரினவளச் செறிவு மிக்க நாடாகும்.
இந்திய காடுகளின் வகைகள் வெப்ப மண்டல பசுமைமாறாக் காடுகள், வெப்ப மண்டல இலையுதிர் காடுகள், தாழ்நிலக் காடுகலள், சதுப்புநில காடுகள், துணை வெப்பமண்டல காடுகள், மலை காடுகள், புதர்க் காடுகள், துணை ஊசி இலை மற்றும் ஊசி இலை காடுகள் முதலியனவாகும் . இந்த காடுகள் பல்வேறு தாவரங்கள் மற்றும் விலங்கினங்களை கொண்ட சூழல் தொகுப்பாகும்.
{{cite web}}
: Explicit use of et al. in: |author=
(help)
{{cite web}}
: Explicit use of et al. in: |author=
(help)