சுவர்ப்பந்து (Squash) இந்தியாவில் பிரபலமான பொழுதுபோக்கு விளையாட்டாகும், மேலும் இது ஒரு போட்டி விளையாட்டாக பிரபலமடைந்து வருகிறது.[1] இது இந்திய சுவர்ப்பந்து ராக்கெட்சு கூட்டமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது. இந்திய ஆண்கள் தேசிய சுவர்ப்பந்து அணி 1967 முதல் உலக அணி சுவர்ப்பந்து தொடரில் கலந்து கொண்டது.
இந்திய சுவர்ப்பந்து வீரர்களில் முதலிடத்தில் தீபிகா பள்ளிக்கல், ஜோஷ்னா சின்னப்பா, சவுரவ் கோசல் ஆகியோர் உள்ளனர். 2012 ஆம் ஆண்டில் முதல் 10 அதிகாரப்பூர்வ பெண்கள் சுவர்ப்பந்து உலக தரவரிசையில் நுழைந்த முதல் இந்திய பெண்மணி தீபிகா ஆவார்.[2] சவுரவ் கோசல், 2013 ஆம் ஆண்டில் மிக உயர்ந்த தரவரிசை பெற்ற முதல் இந்திய ஆண் வீரராவார்.[3][4]
சுவர்ப்பந்து இந்தியாவில் ஆங்கிலேய ஆயுதப்படை வீரர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆங்கிலேய ஆட்சி காலத்தில் இந்த விளையாட்டு பெரும்பாலான ஆங்கிலேய காலனித்துவ நாடுகளில் விளையாடப்பட்டது.[5][6] இந்தியாவில் சில இராணுவ முகாம்களில் இன்றும் காணலாம்.
இந்தியாவில் சுவர்ப்பந்து விளையாட்டை மேற்பார்வையிட சுவர்ப்பந்து ராக்கெட்ஸ் கூட்டமைப்பு (எஸ்.ஆர்.எஃப்.ஐ) உருவாக்கப்பட்டது. இது பயிற்சி முகாம்கள், மாநில மற்றும் தேசிய போட்டிகள் மற்றும் தேசிய சுவர்ப்பந்து சாம்பியன்ஷிப்பை நடத்துகிறது. இந்திய தேசிய அணிக்கான அணியையும் பயிற்சியாளர்களையும் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு வகிக்கிறது. 1990 இல், இது இந்தியச் சுவர்ப்பந்து அகாதமியை நிறுவியது. எஸ்.ஆர்.எஃப்.ஐ படி, சுவர்ப்பந்து 19 மாநிலங்கள் மற்றும் 4 ஒன்றியப் பகுதிகளில் மட்டுமே நிறுவப்பட்டுள்ளது.[1]
மே 2020 நிலவரப்படி, உலக சுவர்ப்பந்து தரவரிசையில் இந்திய வீரர்கள்.
வீரர்களின் பெயர் | பாலினம் | சிறந்த தரவரிசை |
---|---|---|
தீபிகா கார்த்திக் | பெண்கள் | 10 |
ஜோஷ்னா சின்னப்பா | 10 | |
சவுரவ் கோசல் | ஆண்கள் | 11 |
மகேஷ் மங்கோன்கர் | 44 | |
ரமித் டாண்டன் | 46 | |
ஹரிந்தர் பால் சந்து | 47 | |
விக்ரம் மல்ஹோத்ரா | 47 | |
ஆதாரங்கள்:[7][8] |