எஸ்.டி.டி கோடு எனப்படும் தொலைபேசி எண்கள் ஒவ்வொரு நகரத்துக்கும், கிராமத்துக்கும் நிலையாக வழங்கப்பட்டிருக்கும். பெரிய நகரங்களுக்கு இரண்டு இலக்க எண்களும், பேரூர்களுக்கு மூன்று இலக்க எண்களும், சிற்றூர்களுக்கு நான்கு இலக்க எண்களும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.[1]
லேண்டுலைன் எனப்படும் நிலவழித் தொலைபேசி எண்கள் பத்து இலக்கங்களை கொண்டவை.
நிலவழித் தொலைபேசி எண்களின் முதல் பாகம் அந்த ஊருக்கான எண்ணாகவும், இரண்டாம் பாகம் அந்த தொலைபேசிக்கான எண்ணாகவும் இருக்கும். தொலைபேசிக்கான முதல் இலக்கம் நிறுவனத்தை அடையாளம் காண உதவும்.
020-30303030 என்ற எண்ணில், 020 என்பது புனேவையும், 3 என்பது ரிலையன்ஸ் நிறுவனத்தையும், மற்ற எண்கள் தொலைபேசியையும் குறிக்கின்றன.
ஒரே ஊரில் இருந்து அவ்வூரில் உள்ள மற்றொரு எண்ணை அழைக்க முன்னொட்டு எண் தேவையில்லை. மற்றொரு ஊரில் உள்ள தொலைபேசியில் இருந்து அழைக்கும்பொழுது, ஊரின் முன்னொட்டு எண்ணையும் சேர்க்க வேண்டும். கைபேசிகளில் இருந்து பேசினால், எண்களுக்கு முன்னர் 0 இட்டு அழைக்க வேண்டும்.