இந்தியாவில் முக்கியமான பிரச்சினைகளில் ஒன்று சுற்றுச்சூழல் மாசுபடுதல் ஆகும்.[1] இந்தியாவில் நீர் மாசுபாட்டின் மிகப்பெரிய ஆதாரமானது சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் ஆகும். மாசுபாட்டின் பிற ஆதாரங்கள் தொழிற்சாலைகளிருந்து வெளியேறும் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் ஆகும். இதுவே இந்தியாவின் பெரும்பாலான ஆறுகள், ஏரிகள் மாசுபட காரணமாகும்.
சுத்திகரிக்கப்படாத கழிவுநீரே நிலத்தடி நீர் மாசுபடுதலுக்கு மிக முக்கியமான காரணமென 2007ல் வெளிவந்த ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.இந்தியாவில் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நிலத்தடி நீர் மாசுபடுதலுக்கு காரணமாகும். மேலும் ஆறுகள், ஏரிகள் மாசுபட இதுவே காரணமாகும்.
முறையான வடிவமைப்பில்லாத கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலைகள், பராமரிப்பு குறை பாட்டாலும் அல்லது மின்சாரம் தட்டுபாடு காரணமாகவும் அரசு பெரும்பாலான கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலைகளை மூடியுள்ளது. இதனால் கழிவுகள் குவிந்து நகர்ப்புற பகுதிகளில் சுகாதாரமற்ற நிலைமைகள் உருவாகிறது .
1992 ஆம் ஆண்டு உலக சுகாதார அமைப்பின் ஆய்வில் இந்தியாவில் 3,119 நகரங்கள் மற்றும், 209 புறநகர் பகுதிகளில் கழிவுநீர் சுத்திகரிப்பு வசதிகளில் 8 மட்டுமே முழு கழிவுநீர் சுத்திகரிப்பு வசதிகள் உள்ளது என தெரிவிக்கிறது. புறநகர் பகுதிகளில் மாசுபட்ட நதி நீரை குடிப்பதற்கும், குளிப்பதற்கும் மற்றும் சலவை செய்யவும் பயன்படுத்தப்படுகிறது.