இந்தியாவில் பாலினப் பாகுபாடு (Gender inequality in India) என்பது இந்தியாவில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் நலவாழ்வு, கல்வி, பொருளியல், அரசியல் சார்ந்த சமனின்மையைக் குறிக்கிறது.[1] இந்தக் காரணிகளின் அடிப்படையிலும் ஒட்டுமொத்த நிலைமையைப் பொறுத்தும் பல்வேறு பன்னாட்டுப் பாலினச் சுட்டிகள் இந்தியாவை பல்வேறு தரவரிசைகளில் பாகுபடுத்துகின்றன. மேலும் இந்தச் சுட்டிகள் ஏற்கப்படாமல் கருத்துமோதலில் உள்ளன.[2][3]
பாலினச் சமனின்மைகளும் அவை உருவாக்கும் சமூகக் காரணிகளும் இந்தியாவில் பாலின விகிதத்தை மாற்றுவதோடு மகளிரின் வாணாள் நலவாழ்வின் தரத்தையும் கல்வி வளர்ச்சியையும் பொருளியல் மேம்பாட்டையும் குறைக்கின்றன. இந்தியாவில் பாலினச் சமனின்மை என்பது ஆண், பெண் அக்கறையைச் சார்ந்த ஒரு பன்முகச் சிக்கல் ஆகும். சிலர் பல்வேறு பாலினச் சமன்மை சார்ந்த சுட்டிகள் ஆண்களை மேம்பாடற்ற நிலையில் இறுத்துவதாக வாதிடுகின்றனர். என்றாலும், இந்தியப் பங்களிப்பை ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது பலவகையில் பெண்கள் தரங்குறைந்த நிலையிலேயே உள்ளனர். இந்தியாவில் தலைமுறை தலைமுறையாக பாகுபாட்டுப் போக்கு இருபாலாருக்கும் இடையில் நிலவி வருவதால் இருபாலாருமே தம் வாழ்வில் தாக்கமுற்று வந்துள்ளனர். இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் ஆணும் பெண்ணும் சமமென வகுத்தாலும் நடைமுறையில் இன்னமும் பாலினப் பாகுபாடு தொடர்ந்து நிலவிவருகிறது.
பணியிடம் உட்பட, பல களங்களில் பெண்களோடு ஒப்பிடும்போது பாலினப் பாகுபாடு பெரும்பாலும் ஆண்களுக்குச் சாதகமாகவே உள்ளது என ஆராய்ச்சிகள் காட்டுகின்றன.[4][5]> பாலினப் பாகுபாடு பெண்களின் வாழ்க்கைப்பணி வளர்ச்சி முதல் மனநல ஒழுங்கின்மை மேம்பாடு வரை பலவகைகளில் பெண்களுக்கு ஊறு விளைவிக்கின்றது. கற்பழிப்பு, வரதட்சினைக் கொடுமை, வன்கலவி சார்ந்த இந்தியச் சட்டங்கள் பெண்களின் பாதுகாப்பை வற்புறுத்தினாலும் நடைமுறையில் அஞ்சத்தகுமுறையிலும் வேகத்திலும் இக்கொடுமைகள் பல பெண்களைத் தாக்கிவருகின்றன.
2012 ஆம் ஆண்டின் உலக வங்கியின் பாலினப் புள்ளியியல் தரவுத்தளத்தில் இருந்து இந்தியாவின் இருபாலினத் தகவல்கள் பல்வேறு சமனின்மைகள் வாரியாக கீழ்வரும் பட்டியல் தொகுத்து தருகிறது.[6]
பாலினப் புள்ளியியல் அளவுகள்[6] | பெண்கள் (இந்தியா) |
ஆண்கள் (இந்தியா) |
பெண்கள் (உலக அளவில்) |
ஆண்கள் (உலக அளவில் ) |
---|---|---|---|---|
குழந்தைகள் இறப்பு வீதம் (1,000 பிறப்புகளுக்கு) | 44.3 | 43.5 | 32.6 | 37 |
பிறப்பு நிலையில் உயிர்தரிப்பு, (ஆண்டுகளில்) | 68 | 64.5 | 72.9 | 68.7 |
11.3 | 11.8 | 11.7 | 12.0 | |
தொடக்கப் பள்ளி முடிக்கும் வீதம், (%) | 96.6 | 96.3 | [7] | |
76.0 | 77.9 | 70.2 | 70.5 | |
மேனிலைப் பள்ளி முடிக்கும் வீதம், மாணவர்கள் (%) | 46 | 54 | 47.6 | 52.4 |
ஆண்களின் தொடக்க, உயர்நிலைப் பள்ளியுடன் ஒப்பிட்ட விகிதம் (%) | 0.98 | 1.0 | 0.97 | 1.0 |
மேனிலைப் பள்ளிக் கல்வி, ஆசிரியர் பாலினம் (% ) | 41.1 | 58.9 | 51.9 | 48.1 |
நிதி நிறுவன முறையான கணக்குவைப்பு, ஒவ்வொரு பாலின % , அகவை 15+ இல்) | 26.5 | 43.7 | 46.6 | 54.5 |
மாத வைப்புகள், (ஒரு கணக்கில் உள்ள % , அகவை 15+ இல்) | 11.2 | 13.4 | 13.0 | 12.8 |
மாத பணம் எடுப்பு, (ஒரு கணக்கில் உள்ள % , அகவை 15+ இல் ) | 18.6 | 12.7 | 15.5 | 12.8 |
நிதி நிறுவனத்தில் இருந்து கடந்த ஆண்டுக் கடன், (% , அகவை 15+ இல்) | 6.7 | 8.6 | 8.1 | 10.0 |
வங்கியில் நிலுவையில் உள்ள கடன், நலவாழ்வு அல்லது பிற நெருக்கடிகளுக்காக, (சகவை 15+ இல்) | 12.6 | 15.7 | 10.3 | 11.6 |
வங்கியில் நிலுவையில் உள்ள கடன், வீடுவாங்க, (%காகவை 15+ இல்) | 2.26 | 2.35 | 6.6 | 7.4 |
வேலையில்லாமை, (% தொழிலாளர், பன்னாட்டுத் தொழிலாளர் நிறுவன முறைப்படி) | 4 | 3.1 | [7] | |
வேலையில்லாமை, இளைஞர் (% தொழிலாளர், அகவை 15–24,பதொநி முறைப்படி) | 10.6 | 9.4 | 15.1 | 13.0 |
ஆண் இளைஞர் வேலையில்லாமையுடன் ஒப்பிட்ட விகிதம் (% அகவை 15–24 அகவைகளில், பதொநி முறைப்படி) | 1.13 | 1.0 | 1.14 | 1.0 |
வேளாண்மைப் பணியாளர், (% , மொத்தப் பணியாளரில்) | 59.8 | 43 | [7] | |
தொழிலகப் பணியாளர், (% , மொத்தப் பணியாளரில்) | 20.7 | 26 | [7] | |
தற்பணி மேற்கொள்வோர், (%, மொத்தப் பணியாளரில்) | 85.5 | 80.6 | [7] | |
தொற்றில்லா நோய்வழி இறப்பு, 15–34 அகவைகளில், (%) | 32.3 | 33.0 | 29.5 | 27.5 |
60 ஆம் அகவையில் வாணாள் எதிர்பார்ப்பு (ஆண்டுகளில்) | 18.0 | 15.9 | [7] |