இந்திரா காந்தி வனவிலங்கு உய்வகம் மற்றும் தேசியப்பூங்கா ஆனைமலை புலிகள் காப்பகம் | |
— தேசிய வனம் — | |
அமைவிடம்: இந்திரா காந்தி வனவிலங்கு உய்வகம் மற்றும் தேசியப்பூங்கா, தமிழ் நாடு , இந்தியா
| |
ஆள்கூறு | 10°25′01″N 77°03′24″E / 10.4170°N 77.0567°E |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ் நாடு |
மாவட்டம் | கோவை |
நிறுவப்பட்டது | 1976[1][2] |
அருகாமை நகரம் | பொள்ளாச்சி |
ஆளுநர் | ஆர். என். ரவி |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின் |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
958 சதுர கிலோமீட்டர்கள் (370 sq mi) • 2,513 மீட்டர்கள் (8,245 அடி) |
தட்பவெப்பம் • மழைவீழ்ச்சி |
• 4,500 mm (180 அங்) |
நிர்வாகப் பொறுப்பு | சுற்றுச்சூழல் மற்றும் வனங்கள் அமைச்சகம் (இந்தியா) மற்றும் தமிழ்நாடு வனத்துறை |
குறிப்புகள் |
இந்திரா காந்தி வனவிலங்கு உய்வகம் மற்றும் தேசியப்பூங்கா அல்லது ஆனைமலை புலிகள் காப்பகம் (IGWLS&NP) ஓர் பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். 1961ஆம் ஆண்டு அக்டோபர் 7 அன்று இங்கு வருகை புரிந்த முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி அம்மையார் நினைவையொட்டி இப்பெயர் இடப்பட்டுள்ளது.
இப்பூங்காவின் வடகிழக்கில் அமைந்துள்ள டாப் ஸ்லிப் என்ற கிராமத்தின் பெயராலேயே இது பரவலாக அறியப்படுகிறது. இப்பெயர் பதினொன்பதாம் நூற்றாண்டில் தேக்கு மரங்களை மலைமுகட்டிலிருந்து சறுக்கி விடுவதை ஒட்டி அமைந்தது.
இப்பகுதி தென்னிந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி, வால்பாறை, உடுமலை வட்டங்களில் அமைந்துள்ள ஆனைமலை மலைத்தொடரில் பரந்துள்ளது. முன்பு ஆனைமலை வனவிலங்கு உய்வகம் என்றறியப்பட்ட 958 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட இந்திரா காந்தி வனவிலங்கு உய்வகத்தின் ஆழ்பகுதியாக 108 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட தேசியப்பூங்கா விளங்குகிறது. 1974ஆம் ஆண்டு உய்வகமாக அறிவிக்கப்பட்டது. கரியன் சோலா, கிராஸ் மலைகள், மஞ்சம்பட்டி பகுதிகள் தேசியப்பூங்காவாக 1989ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டன. [1][2]
பூங்காவும் உய்வகமும் யுனெஸ்கோவினால் மேற்குத் தொடர்ச்சிமலை உலக பாரம்பரியக் களமாக அறிவிக்க ஆய்வில் உள்ளது. [3]. இந்த உய்வகமும் திண்டுக்கல் மாவட்டம்|திண்டுக்கல்லைச் சேர்ந்த பழனி மலைகளும் சேர்ந்ததே ஆனமலை சேமிப்புப் பகுதியாகும்.[4].
இப்பூங்கா வனச்சரக அலுவலர் (வனச்சரக வார்டன் அலுவலகம், 178 மீன்கரை சாலை, பொள்ளாச்சி) அவர்களால் நிர்வகிக்கப்பட்டு கோயம்புத்தூர் வட்ட வன பாதுகாவலர் மேற்பார்வையில் அமைந்துள்ளது.
கோவையிலிருந்து 40 கி.மீ தொலைவிலுள்ள பொள்ளாச்சியில் வனவிலங்கு வார்டன் அலுவலகத்தில் வருநர் அனுமதி பெற்று அங்கிருந்து 35 கி. மீ தொலைவில் உள்ள டாப் ஸ்லிப் அல்லது 40 கி. மீ தொலைவில் உள்ள உடுமலைப்பேட்டை (அமராவதி கானகம்) அல்லது 65 கி.மீ தொலைவில் உள்ள வால்பாறை செல்லலாம்.
செல்லத்தக்க மாதங்கள் மே முதல் சனவரி வரையாகும். காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையே செல்லலாம். டாப் ஸ்லிப்பில் சுற்றுலாப் பயணிகளுக்காக பல சிறுகுடில்கள், அறைகள் மற்றும் கூடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தேசியப் பூங்காவினை கால்நடையாகவோ சபாரி வண்டிகளிலோ சுற்றிப் பார்க்கலாம்.[1][5].
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)