இந்திரா பூங்கா | |
---|---|
வகை | பொதுப் பூங்கா |
அமைவிடம் | ஐதராபாத்து, இந்தியா |
ஆள்கூறு | 17°24′53″N 78°28′59″E / 17.414754°N 78.483045°E |
இயக்குபவர் | ஐதராபாத் பெருநகர மேம்பாட்டு ஆணையம் |
நிலை | அனைத்து நாட்களிலும் திறாந்திருக்கும் |
இந்திரா பூங்கா (Indira Park) என்பது இந்தியாவின் தெலங்காணா மாநிலத்தின் ஐதராபாத்தின் மையத்திலுள்ள ஒரு பொது பசுமைப் பூங்காவாகும். 1975 செப்டம்பரில் இந்தப் பூங்காவிற்கு அப்போதைய இந்தியாவின் இந்தியக் குடியரசுத் தலைவராக இருந்த மறைந்து பக்ருதின் அலி அகமது அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது. இது 1978ஆம் ஆண்டில் மக்களுக்கு முழுமையான நிலப்பரப்புடன் திறக்கப்பட்டது. இந்தப் பூங்கா 76 ஏக்கர் (31 ஹெக்டேர்) பரப்பளவில் பரவியுள்ளது. இதனை ஐதராபாத் பெருநகர மேம்பாட்டு ஆணையம் நிர்வகிக்கிறது . இது உசேன் சாகர் ஏரியுடன் அமைந்துள்ள ஒரு குடியிருப்பு வட்டாரமான தோமல்குடாவில் அமைந்துள்ளது. இந்தப் பூங்காவில் விருது பெற்ற ஒரு பாறைத் தோட்டம் அமைந்துள்ளது. அதன் பெரிய அளவு மற்றும் நகர்ப்புறத்தின் நடுவில் ஒரு பெரிய ஏரி இருப்பதால், இந்திரா பூங்கா ஒரு நகர்ப்புறச் சோலையாகும் .
2001ஆம் ஆண்டில், ஐதராபாத்தின் குடிமை அதிகாரிகள் பூங்காவிற்குள் ஒரு பாறைத் தோட்டம் ஒன்றை கட்ட திட்டமிட்டனர். தோட்டத்தைத் தவிர, 2 ஏக்கர் பரப்பளவில் பிற பொழுதுபோக்கு வசதிகள் அமைக்கவும் திட்டமிடப்பட்டது. மனிதனால் உருவாக்கப்படும் பாலைவனம், ஒரு படகு வசதிக்கு ஏதுவாக பூங்காவிற்குள் ஏரியை சுத்திகரித்தல் ஆகியவை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டது. இந்த புதிய திட்டங்கள் பூங்காவை சுற்றுலா தலமாக உயர்த்த உதவியது.[1] அப்போதைய உள்ளூர் சுங்க மற்றும் கலால் வரி ஆணையராக இருந்த சுப்ரதா பாசு, ஐதராபாத்திற்கு அருகிலுள்ள கலை மற்றும் கைவினைப்பொருட்கள் கிராமமான சில்பராமத்தில் இதேபோன்ற பாறைத் தோட்டம் அமைத்து வெற்றி பெற்றிருந்தார். 2002ஆம் ஆண்டில், ஒரு பாறைத் தோட்டத்தை உருவாக்கிய அனுபவத்துடன் இதை வடிவமைத்தார். தோட்டத்தை வடிவமைப்பதில் தனது திட்டத்தை விளக்கும் போது, அசையாச் சொத்து உருவாக்குநர்களிடமிருந்து இயற்கையான பாறைகள்கள் ஆபத்தில் உள்ளன என்று பாசு கூறினார். அவற்றைப் பாதுகாக்க மட்டுமே அவர் விரும்பினார்.[2] அதே ஆண்டில், உள்ளூர் அரசாங்கம் பாசுவின் பங்களிப்பை ஒரு விருதுடன் கௌரவித்தது.[3]
இந்த பூங்காவில் ஒரு பாதை உள்ளது ("சிலை பாதை" என அழைக்கப்படுகிறது) இது சுருக்கமான வார்ப்பிரும்பு சிலைகளை காட்சிப்படுத்துகிறது. இவற்றில் பல்வேறு மனித, விலங்கு மற்றும் சுருக்க வடிவங்கள் அடங்கும்.
பூங்காவின் உட்புறங்களில் சந்தன மரங்கள் பரவியுள்ளன மற்ற பகுதிகளில் வளரும் மரங்களுடன் ஒப்பிடும்போது சந்தனம் அதன் தரத்தில் தாழ்ந்ததாக இருந்தாலும், அதன் பட்டை விறகாகவும், அழகுசாதனப் பொருட்களில் ஒரு மூலப்பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. [4]
இந்தப் பூங்காவில் ஒரு பெரிய ஏரி உள்ளது. இது உசேன் சாகர் ஏரியிலிருந்து வெளிவரும் நீரிணைக் கொண்டுள்ளது. பொழுதுபோக்குக்காக இந்த ஏரியில் படகுச் சவாரிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்த பூங்கா 2000ஆம் ஆண்டின் முற்பகுதியிலிருந்து சமூகத்தின் பல்வேறு பிரிவுகளின் கிளர்ச்சிகளின் மையமாக இருந்து வருகிறது. இந்த தர்ணாக்கள் காரணமாக, இந்த இடத்திற்கு "தர்ணாச்சௌக்" என்ற பெயரும் கிடைத்தது. தலித் உரிமைகள் குழுக்கள், [5] ஆட்டோ ரிக்சா தொழிற்சங்கங்கள், [6] மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், [7][8] அரசியல் தலைவர்கள், [9][10] மற்றும் பலர் இலக்குகளை அடைய பேரணிகள் அல்லது உள்ளிருப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சராசரியாக, இதுபோன்ற மூன்று பேரணிகளுக்கு உள்ளூர் அதிகாரிகளால் அனுமதி வழங்கப்படுகிறது. [11]
இந்த பேரணிகளால், சாதாரண வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. இந்த பேரணிகளுக்காக மக்கள் கூடிவருவதால் ஏற்படும் போக்குவரத்து காரணமாக முக்கியமாக பள்ளி குழந்தைகள், கல்லூரி மாணவர்கள் மற்றும் மருத்துவ அவசரநிலைகள் பாதிக்கப்படுகின்றன. உள்ளூர் காவல்துறை பங்கேற்பாளர்களுக்காக ஒரு திட்டத்தை வடிவமைத்தாலும், அவர்களின் இயக்கத்தை கட்டுப்படுத்த இயலாமை போக்குவரத்து நெரிசலில் விளைகிறது.[11] இதன் காரணமாக, உள்ளூர் ஊடகங்கள் இவ்வாறானப் பேரணிகளுக்கு தோமல்குடாவை முன்மொழிந்தன. [12] நகரின் முக்கிய வழித்தடங்களில் இதுபோன்ற பேரணிகளுக்கு தடை விதிக்கப்பட்ட போதிலும், உள்ளூர் காவல்துறை இதை செயல்படுத்துவதில் பயனற்றதாக இருந்தது. [13]