இந்து தீவிரவாதம் அல்லது இந்துத்துவா தீவிரவாதம் ('Hindutva terror,[1][2] என்பது அரசியல் நோக்கங்களை அடைவதற்காக மதத்தின் பெயரால் இந்துக்களால் செய்யப்படும் தீவிரவாதச் செயல்கள் ஆகும். இதனை காவித் தீவிரவாதம் (Saffron terror)[3] எனவும் அழைப்பர். இந்து தேசியவாத்தினால் தூண்டப்பட்ட வன்முறைகள் பொதுவாக ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம் போன்ற இந்து தேசியவாத நிறுவன அங்கத்தவர்களால் இவை முன்னெடுக்கப்படுகின்றது.[4][5][6] இந்து தேசியவாத நிறுவனங்களினால் காவி நிறம் அடையாளமாகப் பயன்படுத்தப்படுவதால் காவித் தீவிரவாதம் என்ற பதம் அமையப்பெற்றது.[7][8][9][10]