இந்து முன்னணி என்பது இந்தியாவின்தமிழ்நாடு மாநிலத்தை அடிப்படையாகக் கொண்ட வலதுசாரி இந்து தேசியவாத அமைப்பாகும். இந்து முன்னணி ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்தால் (RSS) உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு 1980ஆம் ஆண்டில் ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் உறுப்பினரான ராமகோபாலனால் நிறுவப்பட்டது. அதன் உருவாக்கம் முதல் ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம் மற்றும் அதன் துணை அமைப்புகளான சங் பரிவார்களுக்கான தளமாக செயல்பட்டு வருகிறது. இதன் முதல் மாநில தலைவர் பி. தாணுலிங்க நாடார் ஆவார்.
தென்காசி மாவட்டம், செங்கோட்டை ஊராட்சி ஒன்றியம்தேன்பொத்தை ஊராட்சியில்பட்டியல் இன மக்கள் அதிகம் வாழும் தே. மீனாட்சிபுரம்[1] எனும் கிராமத்தில் நடந்த மத மாற்றக் கலவரம் காரணமாக, 1980ல் இந்து முன்னணி துவக்கப்பட்டது. இந்துக்களின் உரிமைகளை மீட்பதற்காகவும், நாத்திக பிரச்சாரத்தை முறியடிப்பதற்காகவும், தீவிரவாத இயக்கங்களுக்கு எதிராகவும், கட்டாய மத மாற்றத்தைத் தடுப்பதற்காகவும், இந்து மதத்தின் பெருமைகளை இந்துக்களிடம் புரிய வைப்பதற்காகவும் ஆரம்பிக்கப்பட்டது.[2][3][4][5][6][7]
தமிழ்நாட்டில் விநாயக சதுர்த்தி ஊர்வலங்களை ஏற்பாடு செய்தது இந்து முன்னணியின் மிக குறிப்பிடத்தக்க சாதனையாகும்.
2006 மே 16 அன்று, வேலூரில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோயிலில் சிவலிங்கம் நிறுவப்பட்டதன் வெள்ளி விழா கொண்டாட்டங்களை இந்து முன்னணி ஏற்பாடு செய்தது.
2007ல், திமுக தலைவரும் முதலமைச்சருமான கருணாநிதி குறித்து பாஜக தலைவர் வேதாந்தி செய்த கருத்துக்கள் தொடர்பாக திமுக தொண்டர்கள் சென்னையில் உள்ள இந்து முன்னணி மாநில தலைமையகத்தை மோட்டார் சைக்கிள்களில் வந்து தாக்கினர்[8][9].
திருக்கோவிலூர் சுந்தரம்: 1981ல், இந்து முன்னணி தலைவர் திருக்கோவிலூர் சுந்தரம், கோயம்புத்தூரின் ஆர்.எஸ். புரத்தில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் கொலை செய்யப்பட்டார்[10].
எஸ். வெள்ளையப்பன்: இவர் வேலூரில் இந்து முன்னணியின் மூத்த தலைவராக இருந்தார். 2013 ஜூலை மாதம் தனது மோட்டார் சைக்கிளில் ராமகிருஷ்ண மடத்தை நோக்கி செல்லும்போது 8 பேர் கொண்ட கும்பலால் கொலை செய்யப்பட்டார்[11].
கே.பி.எஸ். சுரேஷ் குமார்: இவர் திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்தின் இந்து முன்னணி தலைவராக இருந்தார். இவர் கன்னியாகுமரியைச் சேர்ந்தவர். 2014 ஜூன் மாதம் அல் உம்மா என்ற இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களால் கொலை செய்யப்பட்டார்[12][13].
ஜீவராஜ்: இவர் இந்து முன்னணியின் திருநெல்வேலி நகர செயலாளராக இருந்தார். 2014 ஜூலை மாதம் கொலை செய்யப்பட்டார்[14].
சி. சசிகுமார்: கோயம்புத்தூரில் இந்து முன்னணி உறுப்பினராக இருந்தார். பாபுலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (PFI) அமைப்பைச் சேர்ந்த இரண்டு உறுப்பினர்கள் கொண்ட கும்பல் மோட்டார் சைக்கிள்களில் அவரைத் துரத்தி அரிவாள்களால் தாக்கியது. அவர் காயமடைந்து கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் (CMCH) உயிரிழந்தார்[15].
இந்து பெண்களுக்கு தாலி தேவையா என புதிய தலைமுறை நடத்திய இந்துக்களுக்கு எதிரான விவாத நிகழ்ச்சியை ஒளிபரப்ப வேண்டாம் என இந்து முன்னணி நடத்திய போராட்டத்தில், போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் ஒரு ஒளிப்படக்காரர் தாக்கப்பட்டதாகவும், அவரது கருவிகள் உடைக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. விவாத நிகழ்ச்சியை எதிர்த்ததும், இந்தத் தாக்குதலும், இது போன்ற முன்னைய பல நிகழ்வுகளும் இந்தக் கட்சியைக் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்த முனையும் ஒரு அமைப்பாக முன்னிறுத்தி உள்ளது.[19]