இந்தோனேசிய அமைச்சரவை

இந்தோனேசிய அமைச்சரவை
Cabinet of Indonesia
Kabinet Indonesia

தற்போது: சிகப்பு வெள்ளை அமைச்சரவை
அரசு மேலோட்டம்
அமைப்பு2 செப்டம்பர் 1945
(79 ஆண்டுகள் முன்னர்)
 (1945-09-02)
ஆட்சி எல்லைஇந்தோனேசிய அரசாங்கம்
தலைமையகம்அமைச்சரவை செயலகம், ஜகார்த்தா
அரசு தலைமை
முக்கிய ஆவணம்
வலைத்தளம்setkab.go.id

இந்தோனேசிய அமைச்சரவை (ஆங்கிலம்: Cabinet of Indonesia; இந்தோனேசியம்: Kabinet Republik Indonesia) என்பது இந்தோனேசிய அரசாங்கத்தின்; நிர்வாகப் பிரிவின் ஒரு பகுதியாகும். இந்த அமைச்சரவை அரசாங்கத்தின் நிர்வாக அமைப்பில் நியமிக்கப்பட்ட மிக மூத்த அதிகாரிகளைக் கொண்டது.

அமைச்சரவையின் உறுப்பினர்கள் அல்லது அமைச்சர்கள், குடியரசுத் தலைவரின் கீழ் பணியாற்றுகின்றனர். குடியரசின் துணைத் தலைவரைத் தவிர, மற்ற அமைச்சர்கள் குடியரசுத் தலைவரின் அதிகாரத்திற்கு இணங்கப் பணியாற்றுகின்றனர். எந்தக் காரணமும் இல்லாமல் குடியரசுத் தலைவர், அவர் விருப்பப்படி அமைச்சரவையின் உறுப்பினர்களைப் பணிநீக்கம் செய்யலாம். இதற்கு இந்தோனேசிய அரசமைப்புச் சட்டம் அனுமதி அளிக்கிறது.

பொது

[தொகு]
இந்தோனேசியாவின் விடுதலைப் பொது அறிவிப்பு; 17 ஆகத்து 1945

1945-ஆம் ஆண்டில், இந்தோனேசியா விடுதலை பெற்றதில் இருந்து பல அமைச்சரவைகளைக் கண்டுள்ளது. புதிய கட்டளை (ஆங்கிலம்: New Order; இந்தோனேசியம்: Orde Baru) நடைமுறையில் இருந்த காலக்கட்டத்தில், பெரும்பாலான அமைச்சரவைகள் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக மாற்றம் அடையாமல் இருந்துள்ளன.

பெரும்பாலான அமைச்சரவைகள், அவை உருவாக்கும் போது கொடுக்கப்பட்ட பெயர்களால் குறிப்பிடப்படுகின்றன. தற்போதைய குடியரசுத் தலைவரின் அமைச்சரவை பிரபோவோ சுபியாந்தோவின் சிவப்பு வெள்ளை அமைச்சரவை என அழைக்கப்படுகிறது.

வரலாறு

[தொகு]

இந்தோனேசிய அமைச்சரவையின் அமைப்பு விதிமுறைகள், 1945-ஆம் ஆண்டு இந்தோனேசிய அரசமைப்புச் சட்டத்தில் வெளிப்படையாகக் குறிப்பிடப்படவில்லை. எனவே 14 நவம்பர் 1945 முதல், இந்தோனேசியாவின் அமைச்சரவைகள் என்பது நிர்வாக வசதிக்காக உருவாக்கப்பட்ட அமைப்பு என அறியப்படுகிறது.

இந்தோனேசிய வரலாற்றில் இரு வகையான அமைச்சரவைகள் செயல்பாட்டில் இருந்துள்ளன.

குடியரசுத் தலைவர் அமைச்சரவைகளில், குடியரசுத் தலைவர் மட்டுமே அரசாங்கக் கொள்கைகளுக்கு, அரசாங்கத் தலைவராகப் பொறுப்பு வகிப்பார்.அதே வேளையில் நாடாளுமன்ற அமைச்சரவைகளில், ஒட்டுமொத்த அமைச்சரவையுமே அரசாங்கக் கொள்கைக்கு பொறுப்பு வகிக்கும்.[1]

இந்தோனேசிய தேசியப் புரட்சி

[தொகு]
டச்சு கிழக்கிந்திய தீவுகளில், டச்சு குடியேற்றவாத ஆட்சியின் முடிவு
இந்தோனேசியா ஐக்கிய மாநிலங்களின் உருவாக்கம்

1945 முதல் 1949 வரை இந்தோனேசிய விடுதலை போரின் போது, ​​அமைச்சரவையானது குடியரசுத் தலைவர் அமைச்சரவையில் இருந்து நாடாளுமன்ற அமைச்சரவை அமைப்பாக மாறியது.

இவ்வாறான மாற்றுக் கொள்கை, இந்தோனேசிய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்களின் நோக்கம் அல்ல; எவ்வாறாயினும், பல முக்கியமான காலக்கட்டங்களில், நாடாளுமன்ற அமைச்சரவை முறையை குடியரசுத் தலைவர் அமைச்சரவை முறைக்கு மாற்ற வேண்டியிருந்தது. அந்த காலக்கட்டத்தில், அந்த அமைச்சரவை 12-15 அமைச்சுகளுடன் 16 முதல் 37 அமைச்சர்களைக் கொண்டிருந்தது.[2]

1949-ஆம் ஆண்டு இந்தோனேசிய கூட்டரசு அரசியலமைப்பு

[தொகு]

27 டிசம்பர் 1949 அன்று, நெதர்லாந்து, இந்தோனேசியாவின் இறையாண்மையை அங்கீகரித்தது. 1949-ஆம் ஆண்டு இந்தோனேசிய கூட்டரசு அரசியலமைப்பின் கீழ் (Federal Constitution of 1949), அரசாங்கக் கொள்கைகளுக்கு அமைச்சர்கள் பொறுப்பு என்பதால், இந்தோனேசிய ஐக்கிய மாநிலங்கள் (United States of Indonesia) நாடாளுமன்ற அமைச்சரவையைக் கொண்டிருந்தன.

ஆகத்து 1950-ஆம் ஆண்டு, இந்தோனேசிய அரசு ஒற்றையாட்சிக்கு திரும்பியவுடன், 1950-இன் தற்காலிக அரசியலமைப்பின் 83-ஆவது பிரிவின்படி (Article 83 of the Provisional Constitution of 1950), அரசாங்கக் கொள்கைகளில், நாடாளுமன்ற அமைச்சரவையின் அமைச்சர்களுக்கு முழுப் பொறுப்பு உள்ளது என்று கூறியது. அடுத்த ஒன்பது ஆண்டுகளில் 18 முதல் 25 உறுப்பினர்களைக் கொண்ட ஏழு அமைச்சரவைகள் செயல்பாட்டில் இருந்துள்ளன.[3]

சுகார்னோவின் அமைச்சரவை

[தொகு]
முதல் இந்தோனேசியக் கொடி, 17 ஆகத்து 1945 அன்று உயர்த்தப் படுகிறது.

5 சூலை 1959-இல், அதிபர் சுகார்னோ 1950-ஆம் ஆண்டு இந்தோனேசிய அரசியலமைப்பை நீக்கம் செய்து, 1945-ஆம் ஆண்டு இந்தோனேசிய அரசியலமைப்பிற்குத் திரும்புவதற்கான ஆணையை (President Sukarno's 1959 Decree) வெளியிட்டார். அமைச்சரவையும் கலைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து புதிய அதிபர் அமைச்சரவை உருவாக்கப்பட்டது.

ஆனால் இந்தப் புதிய அமைச்சரவை 1945-ஆம் ஆண்டு அரசியலமைப்பைப் பின்பற்றவில்லை. அதிபர் சுகார்னோவின் இறுதி ஆண்டுகளில், சுகார்னோவின் அமைச்சரவைகள் 111 அமைச்சர்களுடன், மிகப் பெரிய அமைச்சரவைகளாக இருந்தன.

சுகார்த்தோவின் அமைச்சரவை

[தொகு]

1968-ஆம் ஆண்டு, அதிபர் சுகார்த்தோவின் புதிய கட்டளை (New Order) ஆட்சியின் போது, ​​அமைச்சரவைகள் சிறியதாக இருந்தன. அதிபர் சுகார்த்தோ, 1968 முதல் 1998 வரை, ஐந்தாண்டு அதிபர் பதவிக் காலத்தில், ஆறு தடவைகள் இந்தோனேசியாவை ஆட்சி செய்தார்.

அவருடைய ஆட்சிக் காலத்தில், 1945-ஆம் ஆண்டு இந்தோனேசிய அரசமைப்புச் சட்டம்|இந்தோனேசிய அரசமைப்புச் சட்டத்தின்]] கீழ் அனுமதிக்கப்படாத அமைச்சுகள் அகற்றப்பட்டன. சுகார்த்தோவின் வீழ்ச்சியைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் அமைச்சரவை (Presidential Cabinet) முறைமை தக்க வைக்கப்பட்டது.[4]

தற்போதைய நிலை

[தொகு]

2010-ஆம் ஆண்டு வரை, இந்தோனேசிய அமைச்சரவையின் அமைச்சுகள் என்பது 'துறைகள்' (இந்தோனேசியம்: Departemen) என்று அழைக்கப்பட்டன. அது ஐக்கிய அமெரிக்காவின் மாதிரியாக இருந்தது.

2010-ஆம் ஆண்டுக்குப் பிறகு, அனைத்துத் துறைகளும் 'அமைச்சுகள்' (இந்தோனேசியம்: Kementerian) என மறுபெயரிடப்பட்டன. அந்த வகையில், அவை நெதர்லாந்து மாதிரிக்கு ஏற்ப கொண்டு வரப்பட்டன.

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Simanjuntak (2003) p1
  2. Simanjuntak (2003) p2
  3. Simanjuntak (2003) pp. 3-4
  4. Simanjuntak (2003) pp. 5-6
  • Daniel Dhaidae & H. Witdarmono (Eds) (2000)Wajah Dewan Perwakilan Rakyat Republic Indonesia Pemilihan Umum 1999 (Faces of the Republic of Indonesia People's Representative Council 1999 General Election) Harian Kompas, Jakarta, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 979-9251-43-5
  • Feith, Herbert (2007) The Decline of Constitutional Democracy in Indonesia Equinox Publishing (Asia) Pte Ltd, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9793780452
  • Finch, Susan; Lev, Daniel S. (1965). Republic of Indonesia Cabinets, 1945-1965. Cornell University. Modern Indonesia Project. Interim reports series. Ithaca, N.Y.: Modern Indonesia Project, Cornell University.
  • Simanjuntak, P. N. H. (2003). Kabinet-Kabinet Republik Indonesia: Dari Awal Kemerdekaan Sampai Reformasi (in இந்தோனேஷியன்). Jakarta: Djambatan. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 979-428-499-8.
  • Yayasan API (2001),Panduan Parlemen Indonesia (Indonesian Parliamentary Guide), பன்னாட்டுத் தரப்புத்தக எண் 979-96532-1-5

வெளி இணைப்புகள்

[தொகு]