இந்தோனேசிய போக்குவரத்துப் பதிவெண்கள் (ஆங்கிலம்: Vehicle registration plates of Indonesia; இந்தோனேசியம்: Tanda Nomor Kendaraan Bermotor Indonesia) என்பது இந்தோனேசியாவின் போக்குவரத்து வாகன பதிவெண்களைக் குறிப்பதாகும்.
இந்தோனேசியாவில் விசை இயக்கி (Motorized vehicles) பொருத்தப்பட்ட வாகனங்கள், பதிவுத் தகடுகளைக் கொண்டிருக்க வேண்டும், அவை வாகனங்களின் முன் மற்றும் பின்புறம் காட்டப்பட வேண்டும்.
சாம்சாட் (SAMSAT) (இந்தோனேசியம்: Sistem Administrasi Manunggal Satu Atap) (ஆங்கிலம்: One-stop Administration Services Office) எனும் நிறுவனத்தின் மூலம் போக்குவரத்து வாகனப் பதிவெண்கள் முறைமை, ஒழுங்குபடுத்தப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது.
இந்த நிறுவனத்தின் அலுவலகம், இந்தோனேசிய தேசிய காவல்துறை; பிராந்திய வருவாய்க்கான மாநில அலுவலகங்கள்; மற்றும் தேசிய கட்டாய வாகன காப்பீட்டு நிறுவனம் ஜசா ரகார்ஜா (Jasa Raharja); ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் நிர்வகிக்கிறது
போக்குவரத்து வாகனப் பதிவெண்கள் முறைமை டச்சு காலனித்துவ காலத்தில் இருந்து வந்தது. இந்த முறைமை 1920-களில் ஏற்றுக்கொள்ளப்பட்ட டச்சு கரேசிடான் எழுத்து முறையின் (Dutch Karesidenan lettering system) பழைய முறையாகும்.[1]
இடங்களின் விவரங்கள்:[2]
இந்தோனேசியாவில் எந்த இடத்தில் எந்த மாதிரியான வாகன எண்கள் பயன்படுத்தப்படுகின்றன எனும் விவரங்கள் மேலே உள்ள படத்தில் வழங்கப்பட்டு உள்ளன.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link)
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link)