இனிய இரு மலர்கள்

இனிய இரு மலர்கள்
வகை
உருவாக்கம்ஏக்தா கபூர்
முன்னேற்றம்ஏக்தா கபூர்
எழுத்துகதை
அனில் நாக்பால்
திரைக்கதை
அனில் நாக்பால்
விகாஸ் திவாரி
வசனம்
தீரஜ் சர்னா
இயக்கம்ரவீந்திர கௌதம் சமீர் குல்கர்னி
ஷரத் பாண்டே
படைப்பு இயக்குனர்தயாரிப்பாளர்
தனுஸ்ரி தாஸ்குப்தா
ஷாலு
நிதின் தால்
அன்ஷுமன் ஷர்மா
நடிப்பு
  • ஸ்ரிதி ஜா
  • ஷப்பிர் அலுவாலியா
முகப்பு இசைலலித் சென்
நவாப் ஆர்சூ
நாடுஇந்தியா
மொழிதமிழ்
பருவங்கள்2
அத்தியாயங்கள்2067
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்ஏக்தா கபூர்[1]
ஷோபா கபூர்
படப்பிடிப்பு தளங்கள்மும்பை
ஒளிப்பதிவுசஞ்சய் மெமன்
அனில் கத்கே
ஓட்டம்தோராயமாக 21 நிமிடங்கள்
தயாரிப்பு நிறுவனங்கள்பாலாஜி டெலிபிலிம்ஸ்
ஒளிபரப்பு
அலைவரிசைபாலிமர் தொலைக்காட்சி (2014-2015)
ஜீ தமிழ் (2015-தற்போது வரை)
படவடிவம்480i(SDTV)
1080i(HDTV)
ஒளிபரப்பான காலம்12 திசம்பர் 2014 (2014-12-12) –
ஒளிபரப்பில்
Chronology
தொடர்புடைய தொடர்கள்சின்னபூவே மெல்லபேசு

இனிய இரு மலர்கள் என்பது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி, பின் மாலை 6.00 மணி, மதியம் 12.00 மணி, இரவு 10.30 மணி என மாற்றப்பட்டு தற்போது திங்கள் முதல் சனி வரை இரவு 11.00 மணிக்கு ஒளிபரப்பாகும் காதல் மற்றும் குடும்பம் பின்னணியை கொண்ட தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.

இது ஜீ தொலைக்காட்சி ஒளிபரப்பாகி வரும் 'குங்கும் பாக்யா' என்ற புகழ்பெற்ற இந்தி தொடரின் தமிழாக்கம் ஆகும். இத்தொடர் அபி மற்றும் பிரக்யா ஆகிய இரு தம்பதியின் காதல் கதையை மையமாகக் கொண்டுள்ளது.[2]

கதை

[தொகு]

திருமண மண்டபம் ஒன்றை நடத்தி வரும் சரளா என்ற பெண், பிரக்யா மற்றும் அம்மு என்ற தனது இரு மகள்களுடன் வாழ்ந்து வருகிறார். அபி என்ற புகழ்பெற்ற பாடகர் ஒருவரை தனு என்ற மாடல் பெண் பணத்திற்காக மணந்து கொள்ள நினைத்தார். அபியின் நண்பரான பிரபாவின் அலுவலகத்தில் அம்மு பணியில் சேருகிறார். அவர்கள் இருவரும் கருத்து வேறுபாடுகளைக் கடந்து நாளடைவில் காதலிக்கத் தொடங்கினர். ஆனால் அபியோ, தன் தங்கை ஆலியாவை பிரபாவுக்கு திருமணம் செய்து வைக்க எண்ணினார். இதற்கிடையில் பிரக்யா பிரபாவைக் காதலிப்பதாக ஆலியா தவறாகப் புரிந்து கொள்கிறார். இதை அபியும் உண்மை என்று நம்பிவிடுகிறார். இதனால் பிரக்யாவை பழிவாங்க ஆலியா, தனு மற்றும் அபி ஆகிய மூவரும் இணைந்து திட்டம் தீட்டினர். இதற்கிடையில் பிரக்யாவை சந்தித்த அபியின் பாட்டிக்கு அவரை பிடித்துப்போனது. எனவே பிரக்யாவை அபிக்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுத்தார். அபியும் பிரக்யாவை பழிவாங்கும் நோக்கில் அவரை திருமணம் செய்து கொண்டார்.

ஆலியாவுடனான திருமண நாளன்று பிரபா, அம்முவுடன் தப்பிச்சென்று ஒரு கோவிலில் அவரை திருமணம் செய்துகொள்கிறார். தற்போது உண்மையை அறிந்து கொண்ட ஆலியா, பிரக்யா தன் தங்கையை பிரபாவுடன் சேர்த்து வைக்க திட்டம் போட்டு தன்னை ஏமாற்றி விட்டதாக நினைத்தார். எனவே அவர் பிரக்யாவைப் பழிவாங்க நினைத்தார். ஆனால் அபியும் பிரக்யாவும் நாளடைவில் காதலிக்கத் தொடங்கினர். இதனால் தனுவும் பிரக்யாவை வெறுக்கத் தொடங்கினார்.

இதற்கிடையில் தனு, தான் அபியின் குழந்தைக்கு தாயாகப் போவாதாகக் கூறி பொய்யான மருத்துவ அறிக்கைகளைக் காண்பித்தார். இது அபி-பிரக்யா உறவில் விரிசலை ஏற்படுத்தியது. பிறகு உண்மையை அறி்ந்து கொண்ட பிரக்யா, அபியிடம் ஆதாரத்துடன் நிருபிக்க முயன்றார். ஆனால் எதிர்பாராத விதமாக ஒரு விபத்தில் சிக்கிய பிரக்யா, இறந்துவிட்டதாக அனைவரும் நினைத்தனர்.

இரு மாதங்களுக்குப் பிறகு திரும்பி வந்த பிரக்யா, அபியின் சொத்துகளுக்கு சொந்தக்காரி நான் என்று கூறிக்கொண்டு வீட்டில் இருப்பவர்களை அதிகாரம் செய்வது போல் நடித்தார். பிறகு அவர் தனு பற்றிய உண்மைகளை அனைவரின் முன்பும் நிரூபித்தார். இதனால் கோபமடைந்த அபி, தனுவை வீட்டை விட்டு வெளியேற்றினார்; பிறகு பிரக்யாவை ஏற்றுக்கொண்டார். இதனால் மேலும் கோபமடைந்த தனு மற்றும் ஆலியா, பிரக்யாவைக் கொன்றுவிட திட்டம் தீட்டினர். ஆனால் அவர்களின் திட்டத்தில் சிக்கிக்கொண்ட அபிக்கு விபத்து நேர்கிறது. இதனால் அபி, தனது பழைய நினைவுகள் மறந்து விடுகிறார். இதை பயன்படுத்திக் கொண்டு ஆலியா மற்றும் தனு ஆகிய இருவரும் மீண்டும் வீட்டிற்குள் நுழைகின்றனர். அபிக்கு பழைய நினைவுகள் தானாக வர வேண்டும் என்றும் கட்டாயப்படுத்தி வரவழைத்தால் உடல்நிலை மோசமாகி விடும் என்று மருத்துவர் எச்சரித்திருந்தார். எனவே பிரக்யா அபியை விட்டு மனமின்றி பிரிந்து செல்கிறார்.

ஆனால் விதி அவர்கள் இருவரையும் மீண்டும் சந்திக்க வைக்கிறது. அபியின் அலுவலகத்தில் பிரக்யா தற்செயலாக வேலைக்குச் சேர்கிறார். முதலில் பிரக்யாவுடன் சகஜமாகப் பழகிய அபி, நாளடைவில் அவரைக் காதலிக்கத் தொடங்கினார். ஆனால் பிரக்யா, அவரை விட்டு விலகிச் செல்ல முயன்றார். இதை அறிந்த ஆலியா, அபியை தனுவுடன் திருமணம் முடித்துவிட திட்டம் தீட்டினார். அதன்படி திருமணமும் நிச்சயமானது. திருமண நாளன்று நிகில் பிரக்யாவைக் கடத்திவிட்டார். இதை அறிந்த அபி, உடனே மணமேடையை விட்டு ஓடிச்சென்று பிரக்யாவைத் தேடத் துவங்கினார். பிறகு பிரக்யாவை ரவுடிகளிடம் இருந்து காப்பாற்றி தன் காரில் அழைத்து வந்து கொண்டிருந்தார். அப்போது ஏற்பட்ட ஒரு விபத்தில் அபிக்கு பழைய நினைவுகள் திரும்பி வருகிறது. ஆனால் நிகில் பிரக்யாவை துப்பாக்கியால் சுடுகிறார். இதனால் பிரக்யா நிலைதடுமாறி ஆற்றில் விழுந்து விடுகிறார். அபி எவ்வளவு முயன்றும் பிரக்யாவைக் கண்டுபிடிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினார். மேலும் அவர் கோபத்துடன் தனு மற்றும் ஆலியாவை வீட்டை விட்டு வெளியேற்றினார்.

சில வாரங்களுக்குப் பிறகு அபி அச்சு அசலாக பிரக்.யா போலவே இருந்த பொன்னி என்ற கிராமத்துப் பெண் ஒருவரைக் காண்கிறார். அவரை பிரக்யா என நினைத்த அபி தன் வீட்டிற்கு அழைத்து வந்தார். இதற்கிடையில் பொன்னியைப் பற்றி அறிந்துகொண்ட ஆலியா, அவரைப் பயன்படுத்தி அபியின் வீட்டில் நுழைய முயற்சித்தார். ஆகவே அவர் பொன்னியை தன் சொல்படி கேட்க வேண்டும் என்று மிரட்டத் தொடங்கினார். இவர்மூலம் ஆலியா மற்றும் தனு தாங்கள் திருந்திவிட்டதாக பொய் கூறி வீட்டிற்குள் நுழைகின்றனர். பிறகு பொன்னியை சந்தித்து நடந்தவற்றை அறிந்துகொண்ட பிரக்யா பொன்னியாக அபி வீட்டிற்குள் நுழைகிறார். இதற்கிடையில் திஷா என்ற பெண்ணுக்கும் பிரபாவுக்கும் காதல் ஏற்படுகிறது. இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர். பிறகு பிரக்யா என்ற பெயரில் பொன்னி ஏமாற்றி வருவதாக தனு அனைவரின் முன்பும் ஆதாரத்துடன் கூறுகிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த அபி, பொன்னி என நினைத்து பிரக்யாவை வீட்டை விட்டு வெளியேற்றினார்.

அபியின் செயலாளரான சிமோனிகா என்ற பெண் தன் கணவனின் இறப்புக்காக அபியை பழிவாங்க நினைத்தார். ஆனால் தனு அவரிடம் பிரக்யாவை கொல்லும்படி கூறுகிறார். அதன்படி ஒரு தொழிற்சாலையில் வைத்து பிரக்யாவைக் கொல்ல திட்டம் தீட்டினார். இதையறிந்த அபியின் பாட்டி பிரக்யாவை காப்பாற்ற தனியாகச் சென்றார். அங்கு அவர் சிமோனிகாவால் சுடப்பட்டு இறந்தார்.

அபியின் பாட்டி இறப்பிற்கு பிரக்யா தான் காரணம் என்று நினைத்து அபியும் ஆலியாவும் கோபப்பட்டனர். பாட்டியின் இறப்பு மற்றும் அபியின் வார்த்தைகளால் மனமுடைந்து போன பிரக்யா ஒரு மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொள்வது போல் காண்பிக்கப்பட்டது. ஆனால் அவர் சாகவில்லை.

ஏழு வருடங்களுக்குப் பிறகு

[தொகு]

அபி மற்றும் பிரக்யாவின் வாழ்க்கை முற்றிலும் மாறிப்போய் இருந்தது. அபி, தனுவுடன் விருப்பமின்றி வாழ்ந்து வந்தாலும் பிரக்யாவை மறக்கவில்லை. பிரக்யா, அபியின் மூலம் தனக்குப் பிறந்த மகள் கியாராவிற்கு ஒரு பாதுகாவலர் வேண்டும் என்பதற்காக கிங் என்ற பாடகருடன் லண்டனில் வாழ்ந்து வந்தார். அவரும் அபியை மறக்கவில்லை.

பிறகு விதி மீண்டும் அபி-பிரக்யாவை சந்திக்க வைக்கிறது. தன் பாடல் வெளியீட்டிற்காக பிரக்யா மற்றும் கியாராவுடன் இந்தியா வரும் கிங் அங்கேயே சில காலம் தங்குகிறார். அப்போது அபி-கிங் இடையே மோதல் ஏற்பட்டு இருவரிடையே பகைமை உருவாகிறது. ஆனால் அபி, பிரக்யாவின் கணவர் என்பதை கிங் அறியவில்லை. கியாரா படிக்கும் அதே பள்ளியில் பிரபா-திஷாவின் மகனும் படித்து வருகிறார். இதனால் அபி-கியாரா இருவரும் தற்செயலாக சந்தித்துக் கொள்கின்றனர். நாளடைவில் இருவரும் நல்ல நண்பர்களாயினர். பிறகு பிரக்யா, கிங்கின் மனைவி என்று அறிந்துகொண்ட அபி அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தார். எனினும் பிரக்யா எங்கிருந்தாலும் மகிழ்வுடன் வாழ்ந்தால் தனக்கு போதும் என்று எண்ணினார். ஆனால் கியாரா தன் மகள் என்பதை அபி அறியவில்லை. பிறகு கிங் பிரக்யாவின் பாதுகாவலர் மட்டுமே என்றும், அவர்களுக்கு திருமணம் நடைபெறவில்லை என்ற உண்மையை அறிந்தவுடன் அபி மகிழ்ந்தார்.

அபி-பிரக்யா இருவரும் இணைந்து மறுமணம் செய்து கொள்கின்றனர். அதன்பிறகு பிரக்யா இரட்டை குழந்தைகளுக்கு தாயாகப் போவதாக தெரியவருகிறது. இதனால் பொறாமை அடைந்த தனு, பிரக்யாவைக் கொல்ல திட்டமிடுகிறார். ஆனால் அபி, ஆலியா மற்றும் குடும்பத்தினர் அனைவரும் தனுவை வீட்டை விட்டு வெளியேற்றினர். தன் தவறுகளை உணரந்த கிங், தனுவிடமிருந்து பிரக்யாவைக் காப்பாற்ற முடிவெடுக்கிறார். தனு தன் முன்னாள் நண்பன் நிகிலின் உதவியை நாடுகிறார். பிரக்யாவைக் கொல்லும் நோக்கத்துடன் அபியின் வீட்டிற்குள் நிகில் நுழைந்தார், இது கியாராவுக்கு தெரிந்துவிடவே, தன் உண்மை வெளிவந்துவிடுமோ என்ற அச்சத்தில் நிகில், கியாராவை கடத்துகிறார். பிறகு அவர் அபி, பிரக்யாவிடம் கியாராவை விடுவிக்க பணம் கேட்கிறார். ஆனால் அபியை பழிவாங்க வேண்டும் என்ற தனது எண்ணத்தை நிறைவேற்ற கியாராவைக் கொன்று விடுகிறார். இதனால் அதிர்ந்த பிரக்யாவும் அபியும் ஒருவரையொருவர் குறை சொல்கின்றனர். பிறகு இருவருக்கும் பிறந்த இரட்டை பெண் குழந்தைகளில் ஒன்று பிரக்யாவும் மற்றொன்றை அபியும் தம்முடன் எடுத்துக்கொண்டு பிரிந்து செல்கின்றனர்.

20 வருடங்களுக்குப் பிறகு

[தொகு]

பிரக்யா தனது மகள் பிராச்சியுடன் ஹோஷியார்பூரில் குடியேறி ஒரு கல்லூரி விரிவுரையாளராக பணிபுரிகிறார். பிரக்யா மற்றும் பிராச்சியுடன் வசித்து வரும் பிராச்சியின் தோழியான சஹானா, பிரக்யாவை 'சித்தி' என்று அன்புடன் அழைத்து வந்தார். அபி தனது மகள் ரியாவுடன் டெல்லியில் குடியேறினார். அவருக்கு புதிய இளம் திறமைகளை ஊக்குவிக்கும் ஒரு நிறுவனம் இருந்தது. பிரபா ஆலியாவை மணந்திருந்தாலும், அவர்களது திருமண வாழ்க்கை மகிழ்ச்சியான ஒன்றாக இருக்கவில்லை; இருவருக்கும் ஆர்யன் என்ற மகன் உள்ளார். அபியின் நண்பரான விக்ரம் கோஹ்லிக்கு ரன்பீர் கோஹ்லி என்ற ஒரு மகன் இருக்கிறார். ரியா படிக்கும் அதே கல்லூரியில் ரன்பீர் கோலி படித்து வருகிறார். இதற்கிடையே பிராச்சிக்கு டெல்லியில் படிக்க உதவித்தொகை கிடைக்கிறது, ஆனால் பிரக்யா தனது கடந்த கால நிகழ்வுகளின் காரணமாக முதலில் மறுத்தாலும், இறுதியாக சம்மதித்தார். பிராச்சி மற்றும் சஹானா ஆகிய இருவருக்கும் ரியா படிக்கும் அதே கல்லூரியில் இடம் கிடைத்திருந்தது. ப்ராச்சியுடன் பல பிரச்சனைகளுக்குப் பிறகு, ரியா பிராச்சியை வெறுக்க ஆரம்பித்து, அவளை அவளது வழியிலிருந்து அகற்ற முயற்சிக்கிறாள். இந்த செயலுக்கு, ரன்பீரை பயன்படுத்துகிறார். ரன்பீரும் முதலில் பிராச்சியை வெறுக்கிறார், ஆனால் பின்னர் அவர் அவளது உண்மையான குணங்களை உணர்ந்து அவளை காதலிக்கிறார். மாயாவின் தீய திட்டங்களிலிருந்து ரன்பீரை பிராச்சி காப்பாற்றுகிறார். பிராச்சியும் ரன்பீரை காதலிக்கிறாள். கோபமடைந்த ரியா பிராச்சியைக் கொல்ல முயற்சிக்கிறாள். ஆனால் விஷயங்கள் ஒரு திருப்பத்தை எடுத்து, பிராச்சி மற்றும் ரியா சகோதரிகள் என்பதும், அபி மற்றும் பிரக்யா அவர்களின் பெற்றோர் என்பதும் தெரியவந்துள்ளது. நீண்ட போராட்டத்திற்குப் பிறகு குடும்பம் ஒன்று சேர்ந்ததும், ரியாவிடம் சில தவறான புரிதல்களை உருவாக்கி பிரக்யாவை வெளியேற்ற முயற்சிக்கிறார் ஆலியா. ஆனால் மீராவும் அபியும் பிரக்யாவை மீண்டும் அழைத்து வர திட்டமிட்டு திருமண நாடகம் ஆட ஆரம்பித்தனர். பிரக்யா திருமணத்தை நிறுத்த மீண்டும் வருகிறார், இறுதியாக அபியுடன் மீண்டும் இணைகிறார். ஆனால் விதி அபி மற்றும் பிரக்யாவுடன் விளையாடுகிறது. அபியும் பிரக்யாவும் திருமணத்திற்குப் பிறகு சில ரவுடிகளால் துரத்தப்படுகிறார்கள். ஒரு இடத்தில், அபியின் வணிகப் போட்டியாளர்களான திக்விஜய், அவனது குண்டர்களுக்கு உதவ வந்து அபியை தனது துப்பாக்கியால் சுடுகிறார். அதன் பிறகு அபி தனது நினைவாற்றலை இழந்து ஐந்து வயது குழந்தையைப் போல நடந்து கொள்கிறான். அலியா அவளை அனுமதிக்காததால், அபியை கவனித்துக் கொள்ள பிரக்யா, வேலைக்காரி காயத்ரியாக வீட்டிற்கு வருகிறார். இதற்கிடையில், அபியை திருமணம் செய்வதற்காக அலியாவின் கட்டளையின் கீழ் வந்த தனுவை, வீட்டில் தனது முந்தைய போட்டியாளரான பிரக்யா பார்க்கிறார். ஆலியா, அபியிடம் இருந்து அனைத்து செல்வங்களையும் கைப்பற்றுவதற்காக, தனுவுடன் அபியின் திருமணத்தை ஏற்பாடு செய்கிறாள். ஆனால் காயத்ரி (பிரக்யா) மற்றும் ரன்பீர் திருமணத்தை புத்திசாலித்தனமாக நிறுத்துகிறார்கள்.அபியின் சிகிச்சைக்கு இடையில், பிரக்யாவின் முகப்பை அலியா அகற்றினார், மேலும் அவர் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். ஒரு விபத்தில் அபிக்கு நினைவாற்றல் வந்து, பிரக்யாவுக்காக ஏங்கத் தொடங்குகிறார். பிரக்யாவுக்கு எதிராக அலியா, தனு மற்றும் மிதாலியின் மோசமான செயல்களைப் பற்றி பல்ஜீத் பாட்டி அபியிடம் கூறுகிறார். அபி சரிதாவின் வீட்டிற்கு சென்று, பிரக்யாவை அழைத்து வந்து தனுவை வெளியே எறிந்தான். தனு, ஆத்திரத்தில், பிரக்யாவை ஒழிக்க முயற்சிக்கிறாள், அதற்காக அவள் ஒரு போலி வீடியோவை உருவாக்கி, அபி மீது அவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக வழக்குத் தாக்கல் செய்கிறாள். பிரக்யா அபியை காப்பாற்றுவாரா அல்லது ஆட்டத்தில் தோற்றுவிடுவாரா, தொடர்ந்து பாருங்கள்.

கதாபாத்திரங்கள்

[தொகு]

முக்கிய கதாபாத்திரங்கள்

[தொகு]
  • ஸ்ரிதி ஜா- பிரக்யா அபிஷேக் மேஹ்ரா
  • ஷப்பிர் அலுவாலியா- அபிஷேக் மேஹ்ரா
  • முக்தா சஃபேக்கர்- பிராச்சி மேஹ்ரா, பிரக்யா-அபியின் மகள், ரியாவின் சகோதரி, ரண்பீரின் காதலி
  • நைனா சிங் - ரியா மேஹ்ரா, பிரக்யா-அபியின் மகள், பிராச்சியின் சகோதரி
  • கிருஷ்ணா கவுல்- ரண்வீர் கோலி, பல்லவி-விக்ரமின் மகன், பிராச்சியின் காதலன்

துணை கதாபாத்திரங்கள்

[தொகு]
  • வின் ரானா- பிரபா கண்ணா, அபியின் தோழன்
  • ஷிகா சிங்- ஆலியா மேஹ்ரா, அபியின் தங்கை, பிரபாவின் மனைவி
  • ஜீஷான் கான்- ஆர்யன் கண்ணா, ஆலியா-பிரபாவின் மகன், ரண்வீரின் தோழன், சஹானாவின் காதலன்
  • அஷ்லேஷ சவந்த்- மீரா, ரியாவின் வளர்ப்புத் தாய்

முன்னாள் கதாபாத்திரங்கள்

[தொகு]
  • சுப்ரியா ஷுக்லா- சரளா அரோரா, பிரக்யாவின் தாய்
  • மிருணாள் தாகூர்- அம்மு, பிரக்யாவின் தங்கை
  • ருச்சி சவாம்- திஷா சிங், பிரக்யாவின் தோழி
  • லீலா ஜுமானி- தனு மேஹ்தா, அபியின் முன்னாள் காதலி, ஆலியாவின் தோழி
  • கௌர்வகி வஷிஷ்டா- கியாரா மேஹ்ரா, பிரக்யா-அபியின் மகள் (இறப்பு)
  • மிஷல் ரஹேஜா- கிங் சிங், கியாராவின் வளர்ப்புத் தந்தை

விருதுகள்

[தொகு]

ஜீ ரிஷ்தே விருதுகள்

[தொகு]
ஆண்டு விருது பெற்றவர் முடிவு
2014 பிடித்த குடும்பம் குங்கும் பாக்யா வெற்றி
2014 பிடித்த மகள் ஸ்ரிதி ஜா வெற்றி
2015 பிடித்த பிரபலமான முகம் (ஆண்) ஷப்பிர் அலுவாலியா வெற்றி
2015 பிடித்த கணவன்-மனைவி ஷப்பிர் அலுவாலியா-ஸ்ரிதி ஜா வெற்றி
2015 பிடித்த குடும்பம் குங்கும் பாக்யா வெற்றி
2015 பிடித்த கதை அனில் நக்பல் வெற்றி
2016 பிடித்த மருமகள் ஸ்ரிதி ஜா வெற்றி
2016 பிடித்த ஜோடி ஷப்பிர் அலுவாலியா-ஸ்ரிதி ஜா வெற்றி
2016 பிடித்த தொடர் பாலாஜி டெலிபிலிம்ஸ் வெற்றி
2016 பிடித்த கதாபாத்திரம் (ஆண்) ஷப்பிர் அலுவாலியா வெற்றி
2016 பிடித்த கதாபாத்திரம் (பெண்) ஸ்ரிதி ஜா வெற்றி
2016 பிடித்த இரண்டாம் மனைவி லீனா ஜுமானி வெற்றி

இந்தியன் டெலிவிஷன் அகடமி விருதுகள்

[தொகு]
ஆண்டு விருது பெற்றவர் முடிவு
2016 சிறந்த நட்சத்திர நடிகர் ஷப்பிர் அலுவாலியா வெற்றி

இந்தியன் டெல்லி விருதுகள்

[தொகு]
ஆண்டு விருது பெற்றவர் முடிவு
2015 சிறந்த ஜோடி ஷப்பிர் அலுவாலியா-ஸ்ரிதி ஜா வெற்றி
2015 சிறந்த நடிகை ஸ்ரிதி ஜா வெற்றி

பிக் ஸ்டார் என்டர்டெயின்மெண்ட் விருதுகள்

[தொகு]
ஆண்டு விருது பெற்றவர் முடிவு
2015 சிறந்த பொழுதுபோக்கு தொடர் ஏக்தா கபூர், ஷோபா கபூர் வெற்றி

இவற்றை பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Ekta Kapoor brings back 'K' factor with 'Kumkum Bhagya'". DNA.
  2. "'Kumkum Bhagya' a passionate story of love: Ekta Kapoor". The Times of India.

வெளி இணைப்புகள்

[தொகு]