இனிய உறவு பூத்தது | |
---|---|
![]() | |
இயக்கம் | சி. வி. சிறீதர் |
தயாரிப்பு | தரங்கை சண்முகம் மோகன் நடராசன் (இராச காளியம்மன் பிலிம்சு) |
இசை | இளையராஜா |
நடிப்பு | சுரேஷ் நதியா |
ஒளிப்பதிவு | பி. ஆர். விசயலட்சுமி |
வெளியீடு | 1987 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இனிய உறவு பூத்தது (Iniya Uravu Poothathu) என்பது 1987 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 21 ஆம் நாளன்று வெளியான ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும்.[1][2] சி. வி. சிறீதர் இயக்கிய இத்திரைப்படத்தில் சுரேஷ், நதியா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.
இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இத்திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல்களை கவிஞர் வாலி எழுதியிருந்தார்.[3][4]