இப்னு-இ-சபி

இப்னு-சஃபி (Ibn-e-Safi (மேலும் இப்னே சஃபி Ibne Safi என்றும் இவரின் பெயர் உச்சரிக்கப்படுகிறது) உருது: ابنِ صفی‎ ) என்பது அஸ்ரர் அகமது (உருது: اسرار احمد‎ என்பவரின் புனைப் பெயர் ஆகும். இவர் அதிகம் விற்பனையாகும் புனைகதை எழுத்தாளர், நாவலாசிரியர் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த உருது மொழியின் கவிஞர் ஆவார். இப்னு-இ-சஃபி என்ற சொல்லின் பொருள் சஃபியின் மகன் என்பது ஆகும். சஃபி என்ற சொல்லுக்கு தூய்மையான அல்லது நீதியுள்ளவர் என்று பொருள்.[1] 1940 ஆம் ஆண்டுகளில் இவர் இந்தியாவில் வசித்த போது அங்கு இருந்து கொண்டு தனது படைப்புகளை எழுதினார், பின்னர் 1947 இல் பிரித்தானியாவின் இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் பாகிஸ்தான் சென்றார் [2]

சுயசரிதை

[தொகு]

இப்னே சஃபி 1928 ஜூலை 26 அன்று இந்தியாவின் அலகாபாத் மாவட்டத்தின் 'நாரா' நகரில் பிறந்தார். இவரது தந்தை சஃபியுல்லா மற்றும் தாய் நசிரான் பிபி ஆகியோர் ஆவர்.

இவர் ஆக்ரா பல்கலைக்கழகத்தில் கலை இளங்கலைப் பிரிவில் பட்டம் பெற்றார். 1948 ஆம் ஆண்டில், நிகாத் பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்தில் கவிதைத் துறையில் ஆசிரியராக தனது முதல் பணியினைத் தொடங்கினார். இவர் இந்தியாவில் இருந்த சமயத்தில் 1940 ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் தனது எழுதுப் பனியினைத் துவங்கினார். அவர் அலகாபாத் பல்கலைக்கழகத்திலும் பட்டம் பயின்றார். அங்கு அவரின் நண்பரான முகமதூ சைர் மற்றும் தனது கல்லூரியின் மூத்த மாணவரான முஸ்தபா ஜைதி ஆகியோரே அங்கு பேராசிரியராகப் பணிபுரிந்தனர்.[1] . 1947 இல் இந்திய மற்றும் பாகிஸ்தானுக்கு சுதந்திரம் கிடைத்த பின்னர், 1950 களின் முற்பகுதியில் மேல்நிலைப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். அதே சமயத்தில் பகுதிநேர படிப்பைத் தொடர்ந்து கொண்டிருந்த வேளையில் நாவல்களை எழுதத் தொடங்கினார். ஆகஸ்ட் 1952 இல் பாகிஸ்தானின் சிந்து, கராச்சிக்கு குடிபெயர்ந்தார். இஸ்ரார் பப்ளிகேஷன்ஸ் எனும் பெயரில் தனது சொந்த பதிப்பக நிறுவனத்தைத் தொடங்கினார்.[3]

அவர் 1953 இல் உமே சல்மா கட்டூன் என்பவரை மணந்தார். 1960 - 1963 ஆம் ஆண்டுகளுக்கு இடையிலான காலகட்டங்களில் இவர் கடுமையான மனச்சோர்வினால் பாதிக்கப்பட்டார், ஆனால் குணமடைந்த பிறகு இவர் டெய்ரர் மத்வாலே எனும் நாவலை எழுதி வெளியிட்டார். அது அதிகம் விற்பனையாகி சாதனை படைத்தது. அந்த மனச் சோர்வில் இருந்து மீண்ட பிறகு ஜசூசி துனியாவின் 36 நாவல்களையும், இம்ரான் தொடரின் 79 நாவல்களையும் எழுதினார். 1970 களில், பாகிஸ்தானின் இன்டர்-சர்வீசஸ் இன்டலிஜென்ஸை கண்டறியும் முறைகள் குறித்து இவர் அறிவுறுத்தினார். அவர் ஜூலை 26, 1980 அன்று கராச்சியில் கணைய புற்றுநோயால் இறந்தார். அன்று இவரின் 52 வது பிறந்த நாள் ஆகும்.

இவரின் மகன்கள் மற்றும் மகள்கள் அனைவரும் 1954 இல் பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் நடைபெற்ற அவரது முதல் திருமனத்தின் மனைவிக்குப் பிறந்தவர்கள் ஆவர். பின்னர், அவர் வடக்கு நாஜிமாபாத்தில் வசித்து வந்த ஃபர்ஹத் அரா என்ற இளம் பெண்ணை மணந்தார். கராச்சி. 2011 இல் அவர் இறக்கும் வரை அவர் மறதி நோய் கொண்டவராக இருந்தார்.

குறிப்புகள்

[தொகு]
  1. "Ibne Safi". Archived from the original on 28 June 2012. பார்க்கப்பட்ட நாள் 4 June 2014.
  2. "Ibn-e-Safi's Imran Series: An English Translation : ALL THINGS PAKISTAN". Pakistaniat.com. 23 October 2008. பார்க்கப்பட்ட நாள் 4 June 2014.
  3. "Ibne Safi". Compast.com. 4 July 2010. பார்க்கப்பட்ட நாள் 4 June 2014.