இப்ராகிம்பட்டி (Ibrahimpatti) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தின் பல்லியா மாவட்டத்தில் கோத் அருகே உள்ள ஒரு கிராமம். இது பல்லியாவிலிருந்து 69 கிலோ மீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது. 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்த கிராமத்தின் மக்கள் தொகை 1,674 ஆகும்.[1]
இந்தியாவின் முன்னாள் பிரதமர் சந்திரசேகர், இப்ராகிம்பட்டியைச் சேர்ந்தவர். இப்ராகிம்பட்டியின் அருகிலுள்ள தொடருந்து நிலையம் கிரிகாராபூர் ஆகும்.