இம்ரானா வன்புணர்வு வழக்கு என்பது இந்தியாவில் 28 வயதான இம்ரானா தனது மாமனாரால் வன்புணர்வு செய்யப்பட்ட வழக்காகும்.[1][2][3]
இந்தியாவின் முசாபர்நகர் மாவட்டம் உத்தரப் பிரதேசத்தில் உள்ள சர்தாவால் கிராமத்தில் இசுலாமியப் பெண்ணான இம்ரானா, 6 ஜூன் 2005 அன்று தன் மாமனாரான 69 வயது அலி முகமதுவால் வன்புணர்வு செய்யப்பட்டார்.
இம்ரானா வன்புணர்வு வழக்கின் காலநிலைகள்:
- 6 ஜூன் 2005: அலி முகமது தனது மருமகளான இம்ரானாவை வன்புணர்வு செய்தார்.
- 13 ஜூன் 2005: முகமது கைதுசெய்யப்பட்டார்.
- 30 ஜூன் 2005: காவல்துறை முகமதுவின் மீது மருத்துவ ஆதாரங்களுடன் வழக்கினை பதிந்தது. நீதிபதியின் முன்பு இம்ரானாவின் வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டது.
- 5 டிசம்பர் 2005: முகமதுவின் பிணை ஆணை கோரி வழக்கு நீதிமன்றத்திற்கு வந்தது.
- 19 அக்டோபர் 2006: 10 ஆண்டு சிறைதண்டனையை முகமதுவிற்கு நீதிமன்றம் வழங்கியது.