இம்ரான் மகரூப்

இம்ரான் மகரூப்
Imran Maharoof
திருகோணமலை மாவட்ட இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
ஆகத்து 2020
பதவியில்
ஆகத்து 2015 – மார்ச் 2020
திருகோணமலை மாவட்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர்
பதவியில்
2012–2015
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1 செப்டம்பர் 1983 (1983-09-01) (அகவை 41)
தேசியம்இலங்கைச் சோனகர்
அரசியல் கட்சிஐக்கிய மக்கள் சக்தி
பிற அரசியல்
தொடர்புகள்
ஐக்கிய தேசியக் கட்சி
இணையத்தளம்imranmaharoof.com

இம்ரான் மகரூப் (Imran Maharoof, பிறப்பு: 1 செப்டம்பர் 1983)[1] இலங்கை முசுலிம் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

ஆரம்ப வாழ்க்கை

[தொகு]

திருகோணமலை மாவட்டம், கிண்ணியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட இம்ரான் மகரூப் முன்னாள் அமைச்சர் எம். ஈ. எச். மகரூப்பின் மகனும்,[2][3] நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. எம். மகரூப்பின் உறவினரும் ஆவார்.[4] கொழும்பு றோயல் கல்லூரியில் கல்வி பயின்ற இம்ரான் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவம், மற்றும் வங்கியியலில் கற்கை நெறிப் பட்டத்தையும் பெற்றவர்.[5] தனியார் வங்கி ஒன்றில் 2004 முதல் 2010 வரை பணியாற்றினார்.

அரசியலில்

[தொகு]

மகரூப் 2010 நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பாக ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளர்களில் ஒருவராக திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டார். 19,665 விருப்பு வாக்குகள் பெற்றுத் தோல்வியடைந்தார்.[6] பின்னர் அவர் 2012 மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு கிழக்கு மாகாண சபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார்.[7]

மகரூப் நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளராக 2015 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு 32,582 விருப்பு வாக்குகள் பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[8][9][10] 2020 நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து பிரிந்து போட்டியிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[11][12]

தேர்தல் வரலாறு

[தொகு]
தேர்தல் தொகுதி கட்சி வாக்குகள் முடிவு
2010 நாடாளுமன்றம்[6] திருகோணமலை மாவட்டம் ஐக்கிய தேசியக் கட்சி ஐக்கிய தேசிய முன்னணி 19,665 தெரிவு செய்யப்படவில்லை
2012 மாகாணசபை[7] திருகோணமலை மாவட்டம் ஐக்கிய தேசியக் கட்சி 10,048 தெரிவு
2015 நாடாளுமன்றம்[13] திருகோணமலை மாவட்டம் ஐக்கிய தேசியக் கட்சி ஐக்கிய தேசிய முன்னணி 32,582 தெரிவு
2020 நாடாளுமன்றம்[14] திருகோணமலை மாவட்டம் ஐக்கிய மக்கள் சக்தி ஐக்கிய மக்கள் சக்தி 39,029 தெரிவு

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Directory of Members: Imran Maharoof". இலங்கை நாடாளுமன்றம்.
  2. Gurunathan, S. (17 டிசம்பர் 2014). "UPFA is like a sinking ship – Maharoof". சிலோன் டுடே இம் மூலத்தில் இருந்து 2015-09-23 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150923222108/http://www.ceylontoday.lk/51-80105-news-detail-upfa-is-like-a-sinking-ship-maharoof.html. 
  3. டி. பி. எஸ். ஜெயராஜ் (22 செப்டம்பர் 2012). "Najeeb Abdul Majeed makes history as the first muslim CM of Sri Lanka". டெய்லிமிரர். http://www.dailymirror.lk/22121/najeeb-abdul-majeed-makes-history-as-the-first-muslim-cm-of-sri-lanka. 
  4. Santiago, Melanie (18 ஆகத்து 2015). "General Election 2015: Full list of preferential votes". நியூஸ் பெர்ஸ்ட் இம் மூலத்தில் இருந்து 2015-09-23 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150923234641/http://newsfirst.lk/english/2015/08/general-election-2015-full-list-of-preferential-votes/107433. 
  5. "More than 50 new faces in House". சண்டே டைம்சு. 23 ஆகத்து 2015. 
  6. 6.0 6.1 "Parliamentary General Election - 2010 Trincomalee Preferences" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2010-05-13. பார்க்கப்பட்ட நாள் 2015-09-20.
  7. 7.0 7.1 "Preferences" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2014-04-29. பார்க்கப்பட்ட நாள் 2015-09-20.
  8. "PART I : SECTION (I) — GENERAL Government Notifications PARLIAMENTARY ELECTIONS ACT, No. 1 OF 1981". இலங்கை அரச வர்த்தமானி Extraordinary 1928/03. 19 August 2015. http://www.documents.gov.lk/Extgzt/2015/PDF/Aug/1928_03/1928_03%20E.pdf. பார்த்த நாள்: 20 செப்டம்பர் 2015. 
  9. "Ranil tops with over 500,000 votes in Colombo". டெய்லிமிரர். 19 ஆகத்து 2015. http://www.dailymirror.lk/83949/ranil-tops-with-over-500-000-votes-in-colombo. 
  10. "Preferential Votes". டெய்லிநியூசு. 19 ஆகத்து 2015 இம் மூலத்தில் இருந்து 2015-08-20 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20150820025307/http://www.dailynews.lk/?q=political/preferential-votes-2. 
  11. "Part I : Section (I) — General - Government Notifications - Parliamentary Elections Act, No. 1 of 1981" (PDF). இலங்கை அரச வர்த்தமானி Extraordinary. No. 2187/26. Colombo, Sri Lanka. 8 August 2020. p. 7A. பார்க்கப்பட்ட நாள் 9 August 2020.
  12. "General Election 2020: Preferential votes of Trincomalee District". Ceylon Today (Colombo, Sri Lanka). 7 August 2020 இம் மூலத்தில் இருந்து 24 செப்டம்பர் 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200924220408/https://ceylontoday.lk/news/general-election-2020-preferential-votes-of-trincomalee-district. பார்த்த நாள்: 14 September 2020. 
  13. Jayakody, Pradeep (28 August 2015). "The Comparison of Preferential Votes in 2015 & 2010". Daily Mirror (Colombo, Sri Lanka). http://www.dailymirror.lk/85309/the-comparison-of-preferential-votes-in-2015-2010. பார்த்த நாள்: 20 September 2020. 
  14. "General Election Preferential Votes". Daily News (Colombo Sri Lanka, Sri Lanka): p. 2. 8 August 2020. http://www.dailynews.lk/2020/08/08/political/225317/general-election-preferential-votes. பார்த்த நாள்: 20 September 2020. 

வெளி இணைப்புகள்

[தொகு]