இயங்காமை இனிமேல் இல்லை (ஐடில் நோ மோர் (Idle No More)) என்பது கனடாவில் 2012 டிசம்பர் காலப் பகுதியில் தொடங்கிய ஓரு முதற்குடிமக்கள் எதிர்ப்புப் போராட்ட இயக்கம் ஆகும்.[1][2] பெரும்பாலும் இளையோரால், சமூக வலைப்பின்னல்களை திறனாகப் பயன்படுத்தி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. கனடாவில் மிகவும் மோசமான முதற்குடிமக்கள் வாழ்நிலையை மேம்படுத்துவது, அவர்களின் உரிமைகளை நடைமுறைப்படுத்துவது, அண்மையில் கொண்டுவரப்பட்ட சட்டங்களை எதிர்ப்பது உட்பட்ட காரணங்களுக்காக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.