இயுயுன் இசுமாவதி YuyunIsmawati | |
---|---|
பிறப்பு | 1964 (அகவை 60–61) |
தேசியம் | இந்தோனேசியர் |
பணி | சுற்றுச்சூழல் பொறியாளர் |
விருதுகள் | கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருது (2009) |
இயுயுன் இசுமாவதி (YuyunIsmawati) இந்தோனேசிய நாட்டைச் சேர்ந்த ஒரு சுற்றுச்சூழல் பொறியாளராவார்.1964 ஆம் ஆண்டு இவர் பிறந்தார். நகரம் மற்றும் கிராமப்புற நீர்வழங்கல் அமைப்புகளின் வடிவமைப்பிலும் பாதுகாப்பான கழிவு மேலாண்மைக்கான அமைப்புகளை வடிவமைப்பதிலும் இசுமாவதி பணியாற்றியுள்ளார்.[1]
2009 ஆம் ஆண்டு இவருக்கு கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருது வழங்கப்பட்டது. இந்தோனேசியாவின் பாலி மாகாணத்தை தளமாகக் கொண்ட இலாப நோக்கமற்ற தன்னார்வத் தொண்டு அமைப்பான பாலிபோகசு அறக்கட்டளையின் இணை நிறுவனர் மற்றும் ஆலோசகராக இசுமாவதி இயங்கினார். நகர்ப்புற சுற்றுச்சூழல் மேலாண்மை பிரச்சினைகள், சுற்றுச்சூழல் சுகாதாரம் மற்றும் சுகாதாரம், காலநிலை மற்றும் நச்சு பிரச்சினைகள் ஆகியவற்றை எதிர்கொள்வதில் இயுயுன் இசுமாவதிக்கு பரந்த மற்றும் விரிவான அனுபவங்கள் உள்ளன.[2]
குறைந்த வருமானம் உடையவர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கவும் இந்தோனேசியாவின் சுற்றுச்சூழலை மேம்படுத்தவும் அவர்களுக்கு அதிகாரம் அளிக்கும் நிலையான சமூக அடிப்படையிலான கழிவு மற்றும் சுகாதார மேலாண்மைத் திட்டங்களை இயுயுன் இசுமாவதி செயல்படுத்தினார்.