இயோ சூ காங் விளையாட்டரங்கம்

இயோ சூ காங் விளையாட்டரங்கம் (Yio Chu Kang Stadium) என்பது சிங்கப்பூரின் ஆங் மோ கியோ நகரத்தில் அமைந்துள்ள ஒரு பல்நோக்கு விளையாட்டரங்கமாகும். [1] [2]

இந்த விளையாட்டரங்கு 2,000 பேர் அமரும் வசதி கொண்டது.

சிங்கப்பூர் அரசாங்கத்தின் சட்டப்பூர்வ வாரியமான சிங்கப்பூர் விளையாட்டு அமைப்பால் நடத்தப்படுகிறது. 1985 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தேதியன்று பொதுமக்களுக்கு விளையாட்டரங்கம் திறக்கப்பட்டது. ரக்பி விளையாட்டுக்கு இவ்வரங்கம் குறிப்பிட்ட ஒரு விளையாட்டரங்கமாகும். 8-ஓடுபாதைகள் கொண்ட ஓடும் பந்தயத் தடம் இவ்வரங்கத்தில் உள்ளது. [2]

வரலாறு

[தொகு]

2015 ஆம் ஆண்டு திசம்பர் மாதத்தில் ஆங்காங்கு சிங்கப்பூரை எதிர்த்து விளையாடிய 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய ரக்பி வெற்றியாளர் போட்டி இங்கு நடைபெற்றது. இப்போட்டியில் சிங்கப்பூர் அணி 10–61 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியடைந்தது. [3]

2019 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 7 ஆம் தேதியன்று சிறப்பு ஒலிம்பிக் தென்கிழக்கு ஆசியா ஒருங்கிணைந்த பக்கத்திற்கு ஐவர் கால்பந்து போட்டி இங்கு நடைபெற்றது. விளையாட்டரங்கத்தின் தொடக்கத்திற்குப் பிறகு ஏழு ஆண்டுகள் முடிந்த நிலையில் இவ்வரங்கத்தில் இப்போட்டி தொடங்கியது. [4]

போக்குவரத்து

[தொகு]

இயோ சூ காங் விளையாட்டரங்கம் எம்ஆர்டி, பேருந்து மற்றும் வாடகை வாகனம் மூலம் அணுகலாம்.இயோ சூ காங் விளையாட்டரங்கிற்கு எம்ஆர்டி பேருந்து நிலையத்திலிருந்து சிறிது தூரம் நடந்தும் செல்லலாம்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Yio Chu Kang Stadium - ActiveSG" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 20 March 2021.
  2. 2.0 2.1 "Yio Chu Kang Stadium (Sports) - 210 Ang Mo Kio Avenue 9 (S)569777". பார்க்கப்பட்ட நாள் 20 March 2021.
  3. "Singapore rugby relegated after loss to Hong Kong". https://tnp.straitstimes.com/sports/team-singapore/singapore-rugby-relegated-after-loss-hong-kong. 
  4. "Football for all at Special Olympics South-east Asian Unified 5-a-side tournament". https://www.straitstimes.com/sport/football-for-all-at-special-olympics-southeast-asian-unified-5-a-side-tournament.