இரகோத்தம தீர்த்தர் | |
---|---|
பிறப்பு | 1548 மானூர், பீசப்பூர் மாவட்டம், கருநாடகம், இந்தியா |
இறப்பு | 1596 திருக்கோயிலூர், தமிழ்நாடு, இந்தியா |
இயற்பெயர் | இராமச்சந்திர பட்டா |
சமயம் | இந்து சமயம் |
தலைப்புகள்/விருதுகள் | பாவபோதாச்சார்யா |
தத்துவம் | துவைதம், வைணவ சமயம் |
குரு | இரகுவார்யா தீர்த்தர் |
இரகோத்தம தீர்த்தர் (Raghuttama Tirtha) ( அண். 1548 அண். 1596) இவர் ஓர் இந்திய தத்துவவாதியாகவும், அறிஞராகவும், இறையியல் அறிஞராகவும் துறவியாகவும் இருந்துள்ளார். இவர் பாவபோதாச்சார்யா என்றும் அழைக்கப்பட்டார். மத்துவர் மற்றும் ஜெயதீர்த்தரின் படைப்புகள் பற்றிய வர்ணனைகள் இவரது மாறுபட்ட சாயலில் அடங்கும். இவர் 1557-1595 வரை மத்வாச்சாரியரியன் உத்திராதி மடத்தின் பதினான்காம் தலைவராக இருந்தார். இவர் முப்பதொன்பது ஆண்டுகளாக குறிப்பிடத்தக்க பணிகளைக் கொண்டிருந்தார். [1] துவைத சிந்தனைப் பள்ளியின் வரலாற்றில் மிக முக்கியமான பார்வையாளர்களில் ஒருவராக இவர் கருதப்படுகிறார். [2] தமிழ்நாட்டின் திருக்கோவிலூரிலுள்ள இவரது கோவில் ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை ஈர்க்கிறது. [3]
ஒரு பிரபுத்துவ பிராமணக் குடும்பத்தில் பிறந்த இவர், இரகுவார்ய தீர்த்தரின் வழிகாட்டுதலில் மடத்தில் வளர்க்கப்பட்டார். இவர் 11 படைப்புகளை இயற்றினார். மத்துவர், ஜெயதீர்த்தர் மற்றும் வியாசதீர்த்தர் ஆகியோரின் படைப்புகளை பாவபோதனையின் வடிவத்தில் துவைத சிந்தனையை விரிவாகக் கூறுகிறார். [1]
இவரது வாழ்க்கையைப் பற்றிய பெரும்பாலான தகவல்கள் இவரது மடங்களின் (குரு பரம்பரை) வழியாகவே பெறப்பட்டுள்ளது. [1] இவர் கன்னட மொழி பேசும் தேசஸ்த் பிராமணக் குடும்பத்தில் இராமச்சந்திர பட்டாவாக 1548 இல் சுப்பா பட்டா மற்றும் கங்காபாய் ஆகியோருக்கு பிறந்தார். [4] இவரது தந்தை ஒரு ஜமீந்தார் என அறியப்படுகிறது. இவர் கர்நாடகாவின் பிஜப்பூர் மாவட்டத்தில் மானூர் என்ற பிறந்தார். இவர் தனது ஏழு வயதில் தனது உபநயனத்தை தரித்துக் கொண்டு, சந்நியாச வாழ்க்கையை மேற்கொண்டார். [1] இவர் இரகுவார்ய தீர்த்தரின் வழிகாட்டுதலில் மானூரின் கற்றறிந்த பண்டிதரான ஆத்ய வரதராஜாச்சார்யாவின் கீழ் சில காலம் படித்ததாகக் கூறப்படுகிறது. [3]
இவரது பத்து படைப்புகள் உள்ளன. அவற்றில் 9 படைப்புகள் மத்துவர், பத்மநாப தீர்த்தர் மற்றும் ஜெயதீர்த்தர் ஆகியோரின் படைப்புகள் பற்றிய விளக்கவுரைகளாகும். அவற்றில் ஐந்து படைப்புகள் மட்டுமே இதுவரை வெளியிடப்பட்டுள்ளன. பவபோதனை என்பது இவரது பெரும்பான்மையான படைப்புகளின் பொதுவான தலைப்பாகும். இவர், பொதுவாக "பவபோதகர்" அல்லது "பாவபோதாச்சார்யா" என்று அழைக்கப்படுகிறார். [3] இவரது படைப்புகள் பிருகதாரண்யக பாவபோதனை என்பது மத்துவரின் பிருகதாரண்யக உபநிடத பாஷ்யம் பற்றிய வர்ணனையாகும். இது இவரது மகத்தான பணியாக கருதப்படுகிறது.[5]
ஜெயதீர்த்தருக்குப் பிறகு, திகாச்சார்யர் அதாவது பாவபோதாச்சார்யர் என்று குறிப்பிடப்படுகிறார். [3] வரலாற்றாசிரியர் சர்மா எழுதுகிறார் "இவரது மொழி எளிமையானதாகவும், துல்லியமானதாகவும் உள்ளது. இவர் தனது கருத்துக்களை ஆணித்தரமாகக் கூறுகிறார். வேறு எந்த வர்ணனையாளரால் மேற்கோள் காட்டப்படாத சில அடையாளம் தெரியாத மூலங்களிலிருந்து இவர் அடிக்கடி மேற்கோள் காட்டுகிறார்". [5] இவர் சாதி, மத வேறுபாடின்றி விஷ்ணுவின் வழிபாட்டை பிரசங்கிக்க அறியப்பட்ட ஒரு துறவியாக கருதப்படுகிறார். தமிழ்நாட்டின் திருக்கோவிலூரிலுள்ள இவரது கோவில் ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை ஈர்க்கிறது. [3]
{{citation}}
: Invalid |ref=harv
(help){{citation}}
: Invalid |ref=harv
(help){{citation}}
: Invalid |ref=harv
(help){{cite book}}
: Invalid |ref=harv
(help){{cite book}}
: Invalid |ref=harv
(help){{cite book}}
: Invalid |ref=harv
(help){{cite book}}
: Invalid |ref=harv
(help){{cite book}}
: Invalid |ref=harv
(help){{cite book}}
: Invalid |ref=harv
(help){{cite book}}
: Invalid |ref=harv
(help){{cite book}}
: Invalid |ref=harv
(help){{cite book}}
: Invalid |ref=harv
(help)