இரக்சித் ஷெட்டி | |
---|---|
பிறப்பு | இரக்சித் ஷெட்டி 6 சூன் 1983 |
படித்த கல்வி நிறுவனங்கள் | என்எம்ஏஎம் தொழில்நுட்பக்கல்லூரி |
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 2010–தற்போது வரை |
அமைப்பு(கள்) | பரம்வா ஸ்டுடியோஸ் |
வலைத்தளம் | |
paramvah |
இரக்சித் ஷெட்டி (Rakshit Shetty) (பிறப்பு 6 ஜூன் 1983) [1] ஓர் இந்திய நடிகரும் மற்றும் கன்னடத் திரைப்படத்துறையில் பணிபுரியும் திரைப்படத் தயாரிப்பாளரும் ஆவார். இவர் ஒரு தேசியத் திரைப்பட விருது, இரண்டு தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள், இரண்டு கர்நாடக மாநில திரைப்பட விருதுகள் மற்றும் ஐந்து தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருதுகள் பெற்றவர். இவர் நம் ஏரியல் ஒன்ட் தினா (2010) திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். உளிதவரு கண்டந்தை (2014) கன்னடத் திரைப்படம் மூலம் தனது திருப்புமுனையைப் பெற்றார். மேலும் கோதி பண்ணா சாதாரண மைகட்டு (2015), கிரிக் பார்ட்டி ( 2016), அவனே ஸ்ரீமன்நாராயணா (2019), 777 சார்லி (2021), மற்றும் சப்த சாகரதாச்சே எல்லோ - சைட் ஏ (2023) ஆகிய படங்களில் முன்னணி நடிகராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். 777 சார்லி இவரது தொழில் வாழ்க்கையில் அதிக வசூல் செய்த படமாகும்.[2]
ஷெட்டி தனது திரைப்படத் தயாரிப்பு பாணிக்காக "சிம்பிள் ஸ்டார்" என்று பரவலாகக் கருதப்படுகிறார்.[3] பரம்வா ஸ்டுடியோஸ் என்ற தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனத்தை இவர் வைத்திருக்கிறார்.
ஷெட்டி உடுப்பியில் ஜூன் 6, 1983 இல் துளுவம் பேசும் பந்த் குடும்பத்தில் பிறந்தார்.[1][4][5] சொந்த ஊரிலேயே பள்ளிப்படிப்பை முடித்தார். பள்ளிப் பருவத்தில் துளு நாட்டுப்புற நடனமான பிலி நாலிகே நடனக் கலைஞராக இருந்தார்.[6]
இந்த நடனம் இவரது 2014 திரைப்படமான உலிதவரு கண்டந்தேவில் நடனக் கலைஞர்களுக்கு ஒரு முக்கிய பாத்திரத்தை வழங்கியது.[7] தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்குவதற்கு முன், இவர் தனது பொறியியல் இளங்கலைப் பட்டப்படிப்பை கார்காலாவில் முடித்தார். பட்டம் பெற்ற பிறகு, நாடகத்தில் நடிகராக ஆவதற்கு முன்பு இரண்டு ஆண்டுகள் மென்பொருள் நிபுணராகப் பணியாற்றினார்.[8][9]
இயக்குநர்கள் பவன் குமார், அனுப் பண்டாரி, பிரசாந்த் நீல், ஹேமந்த் எம். ராவ், மஞ்சுநாதா சோமசேகர ரெட்டி (மன்சூர்), ரிஷப் ஷெட்டி, மற்றும் இராஜ் பி. ஷெட்டி ஆகியோருடன் சேர்ந்து இவரும் புதிய அலைத் திரைப்படங்களை தொடங்கியதாக ஊடகங்களால் கருதப்படுகின்றனர். தனது வழக்கத்திற்கு மாறான படைப்புகள் மூலம், இவர் கன்னடத் திரையுலகில் முக்கிய திரைப்படத் தயாரிப்பாளர்களில் ஒருவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். [10] [11]
கிரிக் பார்ட்டி படப்பிடிப்பின்போது ஷெட்டி தன்னுடன் நடித்த சக நடிகையான ராஷ்மிகா மந்தண்ணாவுடன் நட்பு கொள்ளத் தொடங்கினார். மேலும் இவர்கள் இருவரும் ஜூலை 3, 2017 அன்று ஷெட்டியின் சொந்த ஊரான விராஜ்பேட்டையில் நடந்த தனிப்பட்ட விழாவில் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.[12] ஆனால் பின்னர், சில சிக்கல்களைக் காரணம் காட்டி செப்டம்பர் 2018 இல் நிச்சயதார்த்தத்தை பரஸ்பரம் முறித்துக் கொண்டனர்.[13]
{{cite web}}
: CS1 maint: multiple names: authors list (link)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)