இரஜத் டோகஸ் | |
---|---|
பிறப்பு | 19-07-1991 முனிர்கா, புது தில்லி |
வேறு பெயர் | அனூஜ் |
தொழில் | நடிகர் |
நடிப்புக் காலம் | 2006 – அறிமுகம் |
இணையத்தளம் | http://rajattokasworld.com |
இரஜத் டோகஸ் (இந்தி: रजत टोकस, ஆங்கிலம்: Rajat Tokas) ஓர் இந்திய தொலைகாட்சி நடிகர் ஆவார். தர்தி கா வீர் யோதா ப்ரித்விராஜ் சௌஹான் என்ற தொலைக்காட்சித் தொடரில் பிரிதிவிராஜ் சவுகான் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்[1]. அந்தத் தொடருக்குப் பிறகு இவர் எல்லோருக்கும் மிகவும் பரிச்சியமான நடிகரானார். அதன் பிறகு தரம் வீர் போன்ற பல தொடர்களில் நடித்து பல விருதுகளையும் பெற்றார்.
தற்பொழுது ஜீ தொலைகாட்சியில் ஜோதா அக்பர் என்ற ஒரு வரலாற்றுத் தொடரில் அக்பர் என்ற வேடத்தில் நடிக்கின்றார்[2].
இவர் முனிர்கா, புது தில்லியில் பிறந்தார். ஆர். கே. புரம், தில்லியில் ஹோப் ஹால் அறக்கட்டளைப் பள்ளியில் கல்வி பயின்றார்[3].