தனிப்பட்ட தகவல்கள் | |||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | இரஜத் மனோகர் படிதார் | ||||||||||||||||||||||||||||
பிறப்பு | 1 சூன் 1993 இந்தோர், மத்தியப் பிரதேசம், இந்தியா | ||||||||||||||||||||||||||||
பங்கு | மட்டையாட்டம் | ||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | |||||||||||||||||||||||||||||
நாட்டு அணி |
| ||||||||||||||||||||||||||||
ஒரே தேர்வு (தொப்பி 310) | பெப்ரவரி 2024 எ. இங்கிலாந்து | ||||||||||||||||||||||||||||
ஒரே ஒநாப (தொப்பி 255) | 2 திசம்பர் 2023 எ. தென்னாப்பிரிக்கா | ||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | |||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||
மூலம்: ESPNcricinfo |
இரஜத் மனோகர் படிதார் (பிறப்பு: சூன் 1, 1993) ஓர் இந்தியத் துடுப்பாட்டக்காரர் ஆவார். உள்ளூர் போட்டிகளில் இவர் மத்தியப் பிரதேசத்துக்காகவும், இந்தியன் பிரீமியர் லீக்கில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்காகவும் விளையாடுகிறார்.[1] இவர் வலது கை துவக்க நிலை மட்டையாளரும் எதிர்ச்சுழல்பந்துவீச்சாளரும் ஆவார்.
படிதார் சூன் 1, 1993இல் மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் பிறந்தார்.[2] இவரது தந்தை ஒரு தொழிலதிபர். துடுப்பாட்ட சங்கத்தில் 8ஆம் வயதில் இவரது தந்தையாலும் பின்னர் துடுப்பாட்ட அகாதமியில் இவரது தாத்தாவினாலும் சேர்க்கப்பட்டார்.துவக்கத்தில் பந்துவீச்சாளராக இருந்த இவர் தனது 15ஆம் வயது முதல் மட்டையாடத் தீர்மானித்தார்.[3]
2015-16 ரஞ்சிக் கோப்பையில் 30 அக்டோபர் 2015இல் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார்.[4] சனவரி 8, 2018இல் 2017–18 மண்டல இ20 லீக்கில் மத்தியப் பிரதேசத்திற்காக இருபது20 போட்டிகளில் அறிமுகமானார் [5]
உள்ளூர்ப் போட்டிகள் மற்றும் 2022 ஐபிஎல் பருவத்தில் சிறப்பான திறனை வெளிப்படுத்தியதற்காக, அக்டோபர் மாதத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடருக்கான ஒருநாள் அணியில் இடம் பெற்றார்.[6] பின்னர் பிப்ரவரி 2023 இல் நியூசிலாந்துக்கு எதிரான அணியில் சிரேயாஸ் ஐயருக்குப் பதிலாக இடம் பெற்றார்.[7] இருப்பினும் இரண்டு முறையும் விளையாடும் அணியில் இடம் பெறவில்லை.
திசம்பர் 21, 2023இல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஒருநாள் போட்டியில் அறிமுகமானார், அதில் 16 பந்துகளில் 22 ஓட்டங்கள் எடுத்தார்.
சனவரி 2024 இல், இங்கிலாந்துக்கு எதிரான தேர்வுத் தொடரின் முதல் இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணியில் விராட் கோலிக்கு மாற்றாக இவர் பெயரிடப்பட்டார். 2 பிப்ரவரி 2024 அன்று தொடரின் இரண்டாவது போட்டியில் அறிமுகமானார், முதல் ஆட்டப்பகுதியில் 32 ஓட்டங்கள் எடுத்தார்.[8][9]
{{cite web}}
: Check date values in: |access-date=
(help)
{{cite web}}
: Check date values in: |access-date=
and |date=
(help)