இரண்டாம் ஈசானவர்மன் | |
---|---|
பின்னையவர் | நான்காம் செயவர்மன் |
இறப்பு | கி.பி. 928 |
தந்தை | முதலாம் யசோவர்மன் |
தாய் | நான்காம் செயவர்மனின் சகோதரி |
இரண்டாம் ஈசனவர்மன் ( Ishanavarman II) கி.பி. 923 முதல் 928 வரை ஆட்சி செய்ததாக நம்பப்படும் அங்கோரிய மன்னனாவான். இவனது அரசு அங்கோர், மேற்கில் பட்டாம்பாங்கைச் சுற்றியுள்ள பகுதிகளுக்குள் மட்டுமே இருந்திருக்கலாம்.[1]
ஈசானவர்மன் யசோவர்மனுக்கும் அவனது மனைவியும் நான்காம் செயவர்மனின் சகோதரிக்குப் பிறந்தான்.[2] முதலாம் இந்திரவர்மனும், அவனது மனைவி இந்திராதேவியும் இவனது தாத்தாவும் பாட்டியுமாவார்கள்.[3][4][5] இவனுக்கு முதலாம் ஹர்ஷ்வர்மன் என்ற மூத்த சகோதரன் இருந்தான் .
கி.பி. 923இல் இறந்த தனது சகோதரருக்குப் பிறகு ஈசானவர்மன் பதவியேற்றான். இவனது ஆட்சிக் காலம் மிகவும் கொந்தளிப்பாகவும் குழப்பமாகவும் இருந்திருக்கலாம். கி.பி. 921 இல், இவனரது மாமா, நான்காம் செயவர்மன் , ஏற்கனவே அங்கோரிலிருந்து வடகிழக்கே 100 கி.மீ. தொலைவில் ஒரு போட்டி நகரத்தை அமைத்திருந்தான். இவனது ஆட்சிக் காலத்தில் பிரசாத் கிரவான் என்ற ஒரு கோயில் கட்டப்பட்டது.
இவனைப் பற்றிய வேறு தகவல்கள் தெரியவில்லை. இவன், கி.பி. 928 இல் இறந்தான். மேலும், பரமருத்ரலோகம் என்ற பெயரைப் பெற்றான்.[6] :114
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link)