இரண்டாம் செயேந்திரவர்மன்

இரண்டாம் செயேந்திரவர்மன்
இராஜாதி ராஜா
சம்பாவின் அரசன்
ஆட்சி1080-1081
முடிசூட்டு விழா1080
முன்னிருந்தவர்நான்காம் அரிவர்மன்
பின்வந்தவர்பரமபோதிசத்துவன்
சம்பாவின் அரசன் (இரண்டாம் தடவை)
அரசுப்பிரதிநிதி1086-1113
முன்னிருந்தவர்பரமபோதிசத்துவன்
பின்வந்தவர்ஐந்தாம் அரிவர்மன்
முழுப்பெயர்
இளவரசன் வாக் யான் தேவதாமூர்த்தி
யான் பொம் கு சிறீ செயேந்திரவர்மன் தேவதாமூர்த்தி
மறைவுக்குப் பின் சூட்டப்பட்ட பெயர்
பரமபுத்தலோகன்
அரச குலம்அரிவர்மனித் வம்சம்
தந்தைநான்காம் அரிவர்மன்
தாய்?
பிறப்பு1071
இந்திரபுரம், சம்பா இராச்சியம்
இறப்பு1113 (வயது 42)
இந்திரபுரம்
சமயம்இந்து சமயம்

இரண்டாம் செயேந்திரவர்மன் (Jaya Indravarman II) அல்லது இளவரசர் வாக் (1071-1113), சம்பாவின் அரசராக இருந்தார். 1080 முதல் 1081 வரையிலும், 1086 முதல் 1113 இல் தான் இறக்கும் வரையிலும் இரண்டு காலகட்டங்களில் இராச்சியத்தை ஆண்டார் [1]

இளம் இளவரசர் வாக் 1080 இல் அவரது தந்தை ஹரிவர்மன் IV ஆல் ஒன்பது வயது சிறுவனாக அரியணை ஏறினார். "இராச்சியத்தை ஒழுங்காக ஆளத் தெரியாத இவர் அரசாங்கத்தின் விதிகளுக்கு மாறாக எல்லாவற்றையும் செய்தார்". இவர் ஆட்சி செய்ய தகுதியற்றவராக கருதப்பட்டார். இவரது மாமா, இளவரசர் பாங், ஆட்சியாளராக அதிகாரத்தைப் பயன்படுத்தினார். பின்னர் 1081 இல் சம்பாவின் மன்னராக பரமபோதிசத்வர் என்ற பெயரில் முடிசூட்டப்பட்டார் [1]

ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, தனது மாமாவை ஆட்சிஆட்சியிலிருந்து அகற்றி மீண்டும் அரியணையில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். இரண்டாம் இந்திரவர்மன் சொங்வம்சத்துடனான உறவை மீண்டும் தொடங்கினார். 1103 ஆம் ஆண்டில், சம்பாவிற்கு தப்பி ஓடிய வியட்நாமிய அகதி, முந்தைய தசாப்தங்களில் தாய் வியட்டிடம் இழந்ததாக நம்பப்படும் மூன்று வடக்கு மாகாணங்களை மீண்டும் கைப்பற்றும்படி ராஜாவை வற்புறுத்தினார். இவரது போர் முதலில் வெற்றிகரமாக இருந்தது. ஒரு சில மாதங்கள் மட்டுமே இவரிடமிருந்த அப்பகுதி மீண்டும் தாய் வியட் கைப்பற்றியது .[1] [2]

இரண்டாம் இந்திரவர்மனின் ஆட்சி 1113 இல் இறக்கும் வரை அமைதியாக தொடர்ந்தது. [3] அந்த நேரத்தில், இவர் மீ சன் நகரில் கோயில்களையும், உள்கட்டமைப்புகளையும் மீட்டெடுத்தார். மேலும், தப் மாம் பாணியின் விரிவாக்கத்தைத் தொடங்கினார். இவருக்குப் பிறகு இவரது மருமகன்களில் ஒருவரான ஐந்தாம் அரிவர்மன் ஆட்சிக்கு வந்தார். [4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 Coedès 1975, ப. 154.
  2. Lafont 2007, ப. 160.
  3. Coedès 1975, ப. 155.
  4. Coedès 1975, ப. 164.
  • Coedès, George (1975), Vella, Walter F. (ed.), The Indianized States of Southeast Asia, University of Hawaii Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-824-80368-1
  • Lafont, Pierre-Bernard (2007), Le Campā: Géographie, population, histoire, Indes savantes, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-2-84654-162-6