இரண்டாம் திம்மராச உடையார் என்பவர் மைசூரின் மன்னராக 1553 முதல் 1572 வரை இருந்தவர்.[1] இவர் மைசூர் மன்னர் மூன்றாம் சாமராச உடையாரின் மூத்த மகனாவார். இவரின் தந்தையின் மரணத்திற்கு பின் பெப்ரவரி 1553 இல் பட்டத்திற்கு வந்தார். இவர் 1572 இல் இறந்தார்.