இரண்டாம் பிஜ்ஜலன் | |
---|---|
சாம்ராட் | |
![]() பிஜ்ஜலன் காலத்தில் வெளியிடப்பட்ட கல்யாணி காலச்சூரிகளின் நாணயங்கள் | |
தெற்கு காலசூரிகள் | |
ஆட்சிக்காலம் | அண். 1130 – அண். 1167 CE |
இரண்டாம் பிஜ்ஜலன் ( Bijjala II) (1130–1167 CE) மேலைச் சாளுக்கியர்களின் மகாமண்டலேசுவரராக இருந்தார். சாளுக்கிய ஆறாம் விக்ரமாதித்தனின் ஆட்சியாளராக ஆரம்பத்தில் ஆட்சி செய்த தெற்கு காலச்சூரி மன்னர்களில் இவர் மிகவும் பிரபலமானவர். இவர் கர்ஹாடா-4000 மற்றும் தர்தாவடி-1000 மாகாணங்களில் மகாமண்டலேசுவரராக (தலைமை அல்லது ஆளுநர்) ஆட்சி செய்தார்.
இவர் மேலைச் சாளுக்கிய சாம்ராச்சியத்திற்கு எதிராக கிளர்ச்சி செய்தார். 1157-இல் ஏகாதிபத்திய பட்டங்களை பெற்றார். மேலும் தனது வாரிசுகளுடன் தக்காணப் பீடபூமியில் கால் நூற்றாண்டு காலம் ஆட்சி செய்தார்.[1]
ஆறாம் விக்ரமாதித்தனின் மரணத்திற்குப் பிறகு, பலவீனமான பேரரசைக் கண்டு, பிஜ்ஜலன் சுதந்திரம் அறிவித்தார். சிக்கலகி கல்வெட்டு பிஜ்ஜலனை 'மகாபுஜபலச்சக்கரவர்த்தி' என்று குறிப்பிடுகிறது. சாளுக்கிய மூன்றாம் தைலப்பனின் காலத்தில், பிஜ்ஜலனின் சுதந்திரத்திற்கான முயற்சிகள் மற்ற நிலப்பிரபுக்களுக்கும் பரவியதாகத் தெரிகிறது. 12 ஆம் நூற்றாண்டின் மத்தியில் சாளுக்கிய ஆட்சியிலிருந்து காக்கத்திய இரண்டாம் புரோலன் விடுபட்டார். கிபி 1162 வாக்கில். பிஜ்ஜலன் சாளுக்கிய தலைநகரான கல்யாணியிலிருந்து மூன்றாம் தலைப்பனை விரட்ட முடிந்தது. இவர் 'ஸ்ரீபிருத்விவல்லபன்,' 'பரமேசுவரர்' போன்ற சாளுக்கிய பட்டங்களை பெற்றார். இவர் தனது தலைநகரை மங்களவாடாவிலிருந்து பசவகல்யாண் என்று அழைக்கப்படும் கல்யாணிக்கு மாற்றினார்.
இவரது ஆட்சி உள்நாட்டிலும் சமூகத்திலும் கொந்தளிப்புடன் இருந்தது. வரலாற்றாசிரியர் முனைவர். பி.பி. தேசாய் கருத்துப்படி, பிஜ்ஜலன் பசவரின் சீடர்களிடம் மிகவும் விரும்பத்தகாதவராகி, அவர்களால் படுகொலை செய்யப்பட்டார். இருப்பினும் இந்த சம்பவத்திற்கு பசவண்ணா தான் காரணமில்லை என்பதை தேசாய் உறுதிப்படுத்துகிறார்.