இரத்த அளவு (volemiya) என்பது ஒரு நபரின் இரத்த ஓட்ட அமைப்பில் இரத்தத்திலுள்ள குருதி உயிரணுக்களின் அளவும் குருதி நீர்மத்தின் அளவும் ஆகும்.
ஒரு சராசரி வயது வந்தவருக்கு தோராயமாக 5 லிட்டர் இரத்த அளவு உள்ளது. பெண்களும், ஆண்களும் அவர்களின் எடையில் தோராயமாக ஒரே இரத்த விகிதத்தைக் கொண்டுள்ளனர்.(7 முதல் 8% வரை) இரத்த அளவு சிறுநீரகங்களால் கட்டுப்படுத்தப்படுகிறது.[1][2]
இரத்தத்தின் அளவு (BV) இரத்தத்தின் ஒரு பகுதியான செங்குருதியணு அணுக்களின் அளவு, குருதி நீர்மத்தின் அளவு (PV) ஆகியவற்றுடன் இரத்த ஆக்சிஜன் உள்ளடக்க ஒழுங்குமுறை வழியாகக் கட்டுப்படுத்தப்படுகிறது.
இதயச் செயலிழப்பு, நாள்பட்ட உயர் இரத்த அழுத்தம், சிறுநீரகச் செயலிழவு, முக்கியமான பராமரிப்பு உள்ளவர்கள் போன்றோருக்கு இரத்த அளவை அளவிட்டு பயன்படுத்தப்படலாம்.
இரத்த சுத்திகரிப்பின் போது இரத்த அளவு மாற்றங்களின் பயன்பாடு கேள்விக்குரிய பயன்பாடாகும் .[3]
விலங்கு | இரத்த அளவு (மில்லி/கிலோ) [4] |
---|---|
பூனை | 55 (47-66) |
மாடு | 55 (52-57) |
நாய் | 86 (79-90) |
மரநாய் | 75 |
வெள்ளெலி | 67 |
ஆடு | 70 |
கினி எலி | 75 (67-92) |
வெள்ளெலி | 78 |
குதிரை | 76 |
மனிதர் (ஆண்) | 75 |
மனிதர் (பெண்) | 65 |
செம்முகக் குரங்கு | 54 |
சுண்டெலி | 79 (78-80) |
வீட்டுப் பன்றி | 65 |
முயல் | 56 (44-70) |
எலி | 64 (50-70) |
செம்மறியாடு | 60 |
சிறு குரங்கு | 60-70 |
வலப்புறத்தில் உள்ள அட்டவணை ஆரோக்கியமான பெரியவர்களுக்கும், சில விலங்குகளுக்கும், ஒரு கிலோகிராம் இரத்த ஓட்ட அளவைக் காட்டுகிறது.[4] இருப்பினும், பருமனான, வயதான விலங்குகளில் இது 15% குறைவாக இருக்கலாம்.[4]