இரமண கோகுலா Ramana Gogula | |
---|---|
இயற்பெயர் | இரமணா கோகுலா |
பிறப்பு | 13 ஜூன் |
பிறப்பிடம் | இந்தியா |
தொழில்(கள்) | விபி இன்னவோசன், இசுடான்லி பிளாக் & டெக்கர், இசை இசையமைப்பாளர், பாடகர்/பாடலாசிரியர், இசைத் தயாரிப்பாளர், தொழில்முனைவோர், துணிகர முதலீட்டாளர் |
இசைத்துறையில் | 1995 முதல் தற்போது வரை |
இரமண கோகுலா (Ramana Gogula) ஓர் இந்திய-அமெரிக்க இசையமைப்பாளரும் மற்றும் திரைப்பட இசைப் பாடகர் மற்றும் இந்திய பாப் பாடகரும், தொழில்முனைவோரும் மற்றும் துணிகர முதலீட்டாளரும் ஆவார்.[1] பிரேமண்டே இதேரா (1998), தம்முடு (1999), பத்ரி (2000) , ஜானி (2003) , லட்சுமி (2006), அன்னவரம் (2006) , யோகி (2007) ஆகியவை இவரது இசையில் வெளியான குறிப்பிடத்தக்க திரைப்படங்களாகும்.[2][3] இவர் தொடர்ச்சியாக பவன் கல்யாணுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.
1996 ஆம் ஆண்டில், மிஸ்டி ரிதம்ஸ் என்ற இவரது இசைக்குழு ஆயி லைலா என்ற இந்திய பாப் இசைத் தொகுப்பை வெளியிட்டது. இது இந்தியாவிலுள்ள முக்கிய இசைத் தொலைக்காட்சி நிறுவங்களான எம்டிவி மற்றும் சேனல் [வி] ஆகியவற்றில் தரவரிசையில் முத்லிடம் பிடித்தது.[4] பின்னர் இவர் தெலுங்குத் திரைப்படத்துறையில் நுழைந்தார். மேலும் கன்னடம் மற்றும் தமிழ் மொழிகளில் ஒரு சில படங்களுடன் சேர்த்து சுமார் 25 படங்களுக்கு பாடல்கள் மற்றும் பின்னணி இசையை வழங்கியுள்ளார்.
ஒரு தொழில்முனைவோராக, ரமணா கோகுலா கல்வித் துறையில் லிக்விட் கிரிஸ்டல் போன்ற தொடக்க நிறுவனங்களையும், கிராமங்களுக்கு சூரிய விளக்குகளை வழங்கும் நிறுவனத்தையும் நிறுவினார். இவர் ஸ்டான்லி பிளாக் & டெக்கர், இன்க் நிறுவனத்தில் துணைத் தலைவராகவும், ஆன்தில் வென்ச்சர்ஸில் ஒரு துணிகர முதலீட்டாராகவும் உள்ளார்.[1] சைபேஸ் என்ற பன்னாட்டு வ்விருவனத்தில் தெற்காசியாவின் நிர்வாக இயக்குநராகவும் இருந்தார்.[4][5][6]