இரமண ரெட்டி

இரமண ரெட்டி
பிறப்புதிக்கவரபு வெங்கட ரமண ரெட்டி
(1921-10-01)1 அக்டோபர் 1921
ஜகதேவ் பேட்டை, சிறீ பொட்டி சிறீ ராமுலு நெல்லூர் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
இறப்பு11 நவம்பர் 1974(1974-11-11) (அகவை 53)
பணிநகைச்சுவை நடிகர், குணச்சித்திர நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1951 – 1974
உறவினர்கள்பட்டாபிராம ரெட்டி
டி. சுப்பராமி ரெட்டி
விருதுகள்நந்தி விருது

திக்கவரபு வெங்கட ரமண ரெட்டி (Tikkavarapu Venkata Ramana Reddy) (1 அக்டோபர் 1921 - 11 நவம்பர் 1974) ஒரு இந்தியத் திரைப்படத்துறையுலகில் குணச்சித்திர நடிகராகவும், நகைச்சுவை நடிகராகவும் தயாரிப்பாளராகவும் குறிப்பாக தெலுங்குத் திரையுலகில் தனது படைப்புகளுக்கு பெயர் பெற்றவர். இவர், இந்தியாவின் மிகச்சிறந்த நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக கருதப்படுகிறார். குறிப்பாக இவரது நகைச்சுவை வெளிப்பாடுகளாலும், தெலுங்குப் படங்களின் பொற்காலத்தில் உரையாடல்களாலும் குறிப்பிடத்தக்கவர். ஆரம்பகாலத்தில் இவரும் இரேலங்கி வெங்கட ராமையாவும் நகைச்சுவை இரட்டையர்களாக இருந்தனர்.[1]

மிஸ்ஸியம்மாவில் டேவிட், ரோஜுலு மாராயியில் கரணம், மாயாபஜாரில் சின்னமயா, குண்டம்மா கதாவில் காஞ்சு கண்டைய்யா போன்ற பல கதாபாத்திரங்கள் இவரது மறக்கமுடியாத பாத்திரங்கள் ஆகும். 24 ஆண்டு தனது தொழில் வாழ்க்கையில் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்திய அரசியல்வாதியும்,திரைப்பட தயாரிப்பாளருமான டி. சுப்பராமி ரெட்டி என்பவரின் தந்தைவழி மாமா ஆவார் .[2]

தொழில்

[தொகு]

இவர், 1951ஆம் ஆண்டில் ஒய். வி. ராவ் இயக்கிய மைனாவதி படத்துடன் அறிமுகமானார். இவரது சொந்த மாவட்டமான நெல்லூரைச் சேர்ந்த இவரது நண்பர் ஏ. சங்கர ரெட்டி படத்தைத் தயாரித்திருந்தர். இருப்பினும் கே.எஸ்.பிரகாச ராவ் தயாரித்து இயக்கிய தீக்சா என்ற படமே முதலில் வெளியான படம். (சில திரைப்பட வரலாற்றாசிரியர்களால் இவர் மாயபிள்ளாவில் நடித்ததாக தவறாக குறிப்பிடுகின்றனர்). என். டி. ராமராவ், அக்கினேனி நாகேஸ்வர ராவ் ஆகியோருடன் பல படங்களில் நடித்துள்ளார். அக்கா செல்லலு (1957) திரைப்படத்தில் ஒரு மந்திரவாதியின் பாத்திரத்தில் நடிக்கும் போது, இவர் உண்மையில் மாய வித்தையை ஒரு பொழுதுபோக்காகக் கற்றுக்கொண்டார். இவர் 100க்கும் மேற்பட்ட மாயவித்தை நிகழ்ச்சிகளை வழங்கினார். பெரும்பாலும் கல்வி நிறுவனங்களிலும்,தன்னார்வ அமைப்புகளுக்கும் உதவினார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. M.L. NARASIMHAM. "Blast from the past: Illarikam (1959)". The Hindu.
  2. "TV Ramana Reddy – Famous Telugu cinema comedian from Nellore". 1nellore.com. Archived from the original on 2014-10-22. பார்க்கப்பட்ட நாள் 2021-02-11.

வெளி இணைப்புகள்

[தொகு]