தனிப்பட்ட தகவல்கள் | |
---|---|
பிறப்பு | 13 ஏப்ரல் 1997 சண்டிகர், இந்தியா |
மட்டையாட்ட நடை | வலக்கை |
பந்துவீச்சு நடை | வலக்கை விரைவு வீச்சு |
பங்கு | மத்தியக் கள வீரர் |
உள்ளூர் அணித் தரவுகள் | |
ஆண்டுகள் | அணி |
2016/17–தற்போதுவரை | பஞ்சாப் |
2022 | மும்பை இந்தியன்ஸ் |
2024 | கொல்கத்தா நைட் ரைடர்ஸ் |
மூலம்: ESPNcricinfo, 9 ஏப்ரல் 2022 |
இரமன்தீப் சிங் (Ramandeep Singh பிறப்பு: 3 ஏப்ரல் 1997) ஓர் இந்தியத் துடுப்பாட்ட வீரர் ஆவார்.[1][2] 29 சனவரி, 2017இல் மாநிலங்களுக்கு இடையிலான இருபது-20 போட்டியில் பஞ்சாப் அணிக்காக அறிமுகமானார்.[3] 5 அக்டோபர் 2019இல் விஜய் அசாரே கோப்பையில் பஞ்சாப் அணிக்காக பட்டியல் அ துடுப்பாட்டத்தில் அறிமுகமானார்.[4] 12 பிப்ரவரி 2020இல், ரஞ்சிக் கோப்பையில் முதல் தரத் துடுப்பாட்டத்தில் அறிமுகமானார்.[5] பிப்ரவரி 2022 இல், 2022 இந்தியன் பிரீமியர் லீக் போட்டிக்கான ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியால் தேர்வு செய்யப்பட்டார்.[6]