இரமா காந்தா தேவ்ரி (Rama Kanta Dewri) இந்தியாவின் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பாரதிய சனதா கட்சி அரசியல்வாதி ஆவார். 2016 ஆம் ஆண்டில் நடந்த அசாம் சட்டப் பேரவைத் தேர்தலில் மரிகான் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]
2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18 ஆம் தேதியன்று மரிகான் தொகுதியில் தேவ்ரி இடம்பெற்ற பாலியல் தொடர்பான காணொளி நாடா பரபரப்பாகப் பேசப்பட்டது. கானொளிக்கும் தனக்கும் தொடர்பு இல்லை என்று இவர் மறுத்தார்.[4] ஒருவேளை தடயவியல் சோதனைகள் தனது பங்கேற்பை உறுதிசெய்தால் தான் பதவி விலகுவதாகவும் கூறினார்.