இரமேஷ் சுந்தர் தத் (Romesh Chunder Dutt) (1848 ஆகத்து 13 - 1909 நவம்பர் 30) இவர் ஓர் இந்திய ஆட்சிப்பணியாளரும், பொருளாதார வரலாற்றாளரும், எழுத்தாளரும் ஆவார். மேலும் இவர் இராமாயணம் மற்றும் மகாபாரதம் போன்ற காவியங்களை மொழிப்பெயர்த்துள்ளார்.
1973 ஆம் ஆண்டு இந்தியாவின் அஞ்சல் முத்திரையில் தத்
இலக்கிய மற்றும் கல்வி சாதனைகளுக்கு நன்கு அறியப்பட்ட ஒரு புகழ்பெற்ற பெங்காலி கயஸ்த குடும்பத்தில் வங்காளத்தின் துணை ஆட்சியரான இசம் சுந்தர் தத் மற்றும் தாகமணி ஆகியோருக்கு பிறந்தார். பல்வேறு வங்காள மாவட்ட பள்ளிகளில், பின்னர் கொல்கத்தாவின் அரே பள்ளியில் கல்வி பயின்றார். கிழக்கு வங்காளத்தில் ஏற்பட படகு விபத்தில் இவரது தந்தை இறந்த பிறகு, ஒரு திறமையான எழுத்தாளரான இவரது மாமா,சோசி சுந்தர் தத், 1861 இல் இவரது பாதுகாவலரானார். [1] இவர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் வங்காளத்தின் மிக முக்கியமான கவிஞர்களில் ஒருவரான தோரு தத்தின் உறவினராவார்.
இவர் கொல்கத்தா பல்கலைக்கழகத்திலும், மாநிலப் பலகலைக் கழகத்திலும் 1864 இல் நுழைந்தார். இவர் 1866 ஆம் ஆண்டில் கலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றார். தகுதியின் அடிப்படையில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். மேலும் உதவித்தொகையும் பெற்றார். இளங்க்லை வகுப்பில் ஒரு மாணவராக இருந்தபோது, இவரது குடும்பத்தின் அனுமதியின்றி, இவரும் பெகரி லால் குப்தா மற்றும் சுரேந்திரநாத் பானர்ஜி ஆகிய இரு மூவரும் 1868 இல் இங்கிலாந்துக்கு புறப்பட்டனர். [2]
அந்த நேரத்தில், சத்தியேந்திர நாத் தாகூர் என்ற இந்தியர் மட்டுமே இந்திய ஆட்சிப்பணிக்குத் தகுதி பெற்றிருந்தார். தாகூரின் சாதனையை பின்பற்றுவதை தத் நோக்கமாகக் கொண்டிருந்தார். நீண்ட காலமாக, 1853க்கு முன்னும் பின்னும், இங்கிலாந்தில் இந்திய ஆட்சிப்பணித் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டுகளில், இதுபோன்ற பதவிகளுக்கு பிரிட்டிசு அதிகாரிகள் மட்டுமே நியமிக்கப்பட்டு வந்தனர். [3]
இலண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியில், தத் தொடர்ந்து பிரிட்டிசு எழுத்தாளர்களைப் படித்தார். இவர் 1869 இல் நடந்த தேர்வில் இந்திய குடிமைப்பணிக்கு தகுதி பெற்றார். [4] அதில் மூன்றாம் இடத்தைப் பிடித்தார். [5] 1871 சூன் 16 அன்று இந்திய குடிமைப்பணி பட்டியலில் இடம்பெற்றார். [6]
இவர் 1871 இல் அலிப்பூர் உதவி நீதிபதியாக இந்திய ஆட்சிப் பணியில் நுழைந்தார். 1874 இல் நாடியாவின் மெகர்பூர் மாவட்டத்திலும், இதைத் தொடர்ந்து 1876 இல் போலா மாவட்டத்திலும் பணியாற்றினார். அங்கு ஏற்பட்ட ஒரு பஞ்சமும், அதைத் தொடர்ந்து பேரழிவு தரும் சூறாவளியும், அவசர நிவாரணம் மற்றும் பொருளாதார மீட்பு நடவடிக்கைகளும் தத் வெற்றிகரமாக நிர்வகித்தார். அவர் பேர்கர்கஞ்ச், மைமன்சிங், வர்த்தமான், தானாபூர் மற்றும் மிட்னாபூர் ஆகியவற்றின் நிர்வாகியாக பணியாற்றினார். 1893ஆம் ஆண்டு வர்த்தமான் கோட்ட அதிகாரி ஆனார். 1894 இல் ஒடிசா பிரதேச ஆணையாளர் பதவியை அடைந்த முதல் இந்தியர் தத் ஆவார். [5]
தத் 1897 இல் இந்திய ஆட்சிப்பணியிலிருந்து ஓய்வு பெற்றார். 1898 ஆம் ஆண்டில் இலண்டன் பல்கலைக்கழக கல்லூரியில் இந்திய வரலாற்றில் விரிவுரையாளராக இங்கிலாந்து சென்றார். அங்கு பொருளாதார தேசியவாதம் குறித்த தனது பிரபலமான ஆய்வறிக்கையை முடித்தார். இவர் பரோடா மாநிலத்தின்திவானாக பணிபுரிய இந்தியா திரும்பினார். இவர் பிரிட்டனுக்கு புறப்படுவதற்கு முன்பே இவருக்கு இப்பதவி வழங்கப்பட்டது. பரோடாவில் இவர் மிகவும் பிரபலமாக இருந்தார். அங்கு மன்னர் மகாராஜா மூன்றாம் சாயாஜிராவ் கெய்க்வாட் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிற அனைத்து ஊழியர்களும் தனிப்பட்ட மரியாதைக்குரிய அடையாளமாக இவரை 'பாபு திவான்' என்று அழைத்தனர். 1907 ஆம் ஆண்டில், இவர் இந்தியாவின் பஞ்சாயத்து இராஜ் குறித்த குழுவில் உறுப்பினரானார். [7][4]
இவர் 1894 இல் பங்கியா சாகித்ய பரிசத்தின் முதல் தலைவராக பணியாற்றினார், அதே நேரத்தில் இரவீந்திரநாத் தாகூர் மற்றும் நவீஞ்சந்திர சென் ஆகியோர் சமூகத்தின் துணைத் தலைவர்களாக இருந்தனர். [8]
இவரது வங்காள இலக்கியம் என்ற நூல் எட்டு நூற்றாண்டுகளுக்கு மேலாக "வங்காளத்தில் இலக்கிய மற்றும் அறிவுசார் முன்னேற்றத்தின் இணைக்கப்பட்ட கதையை" முன்வைத்தது. இது ஜெயதேவரின் ஆரம்பகால சமசுகிருத கவிதைகளுடன் தொடங்கியது. இது பதினாறாம் நூற்றாண்டின் சைதன்யரின் மத சீர்திருத்தங்கள், ரகுநாத சிரோமனியின் முறையான தர்க்க பள்ளி, மற்றும் ஈஸ்வர் சந்திர வித்யாசாகரின் புத்திசாலித்தனம், பத்தொன்பதாம் நூற்றாண்டின் வங்காளத்தின் அறிவுசார் முன்னேற்றத்திற்கு வந்துள்ளது. [9] இந்த புத்தகத்தை கொல்கத்தாவில் உள்ள தாக்கர், ஸ்பிங்க் அண்ட் கோ மற்றும் 1895 இல் லண்டனில் உள்ள ஆர்க்கிபால்ட் கான்ஸ்டபிள் ஆகிய நிறுவனங்கள் வெளியிட்டது.
இவர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இந்தியாவின் முக்கிய பொருளாதார வரலாற்றாசிரியராக இருந்தார். பிரிட்டிசு ஆட்சியின் கீழ் இந்தியாவின் தொழில்மயமாக்கல் குறித்த இவரது ஆய்வறிக்கை இந்திய வரலாற்றில் பலமான வாதமாகவே உள்ளது .
Romesh Chunder Dutt (1874). The Peasantry of Bengal. Thacker, Spink & Co. the peasantry of bengal.; ed. Narahari Kaviraj, Calcutta, Manisha (1980)
Romesh Chunder Dutt (1895). The Literature of Bengal. T. Spink & co. the literature of bengal.; 3rd ed., Cultural Heritage of Bengal Calcutta, Punthi Pustak (1962).
Mādhabī kaṅkaṇa in Bengali (1879)
Rajput jivan sandhya (1879); Pratap Singh: The Last of the Rajputs, A Tale of Rajput Courage and Chivalry, tr. Ajoy Chandra Dutt. Calcutta: Elm Press (1943); Allahabad, Kitabistan, (1963)
Rig Veda translation into Bengali (1885): R̥gveda saṃhitā / Rameśacandra Dattera anubāda abalambane ; bhūmikā, Hiraṇmaẏa Bandyopādhyāẏa, Kalakātā, Harapha (1976).
A History of Civilization in Ancient India, Based on Sanscrit Literature. 3 vols. Thacker, Spink and Co.; Trübner and Co., Calcutta-London (1890) Reprinted, Elibron Classics (2001).
The Ramayana: the epic of Rama rendered into English verse, London: J.M. Dent and Co., 1899.
The Ramayana and the Mahabharata: the great epics of ancient India condensed into English verse, London: J.M. Dent and Co., 1900. Everyman's Library reprint (London: J.M. Dent and Sons; New York: E.P. Dutton, 1910). xii, 335p. Internet Sacred Texts Archive.
Shivaji; or the morning of Maratha life, tr. by Krishnalal Mohanlal Jhaveri. Ahmedabad, M. N. Banavatty (1899). Also: tr. by Ajoy C. Dutt. Allahabad, Kitabistan (1944).
The lake of palms. A story of Indian domestic life, translated by the author. London, T.F. Unwin (1902); abridged by P.V. Kulkarni, Bombay, n.p. (1931).
↑R. C. Dutt (1968) Romesh Chunder Dutt, Internet Archive, Million Books Project. p. 10.
↑Jnanendranath Gupta, Life and Works of Romesh Chandra Dutt, CIE, (London: J.M.Dent and Sons Ltd., 1911); while young Romesh came out unnoticed, Beharilal, possibly his closest friend ever, was chased all the way down to the Calcutta docks by his "poor" father, who could not, however, successfully persuade his son to return to the safety of his parental home. Later, in England, both the friends took the civil service examination successfully, becoming the 2nd and 3rd Indians to join the ICS. The third person in the group, Surendranath Banerjee, also cleared the test, but was incorrectly disqualified, as being over-age.
↑Romesh Chunder Dutt (1895). The Literature of Bengal. T. Spink & Co. (London); Constable (Calcutta). the literature of bengal.; 3rd ed., Cultural Heritage of Bengal Calcutta, Punthi Pustak (1962).
S. K. Ratcliffe, A Note on the Late Romesh C. Dutt, The Ramayana and the Mahabharata condensed into English Verse (1899) at Internet Sacred Texts Archive
Islam, M Mofakharul (2012). "Dutt, Romesh Chunder". In Islam, Sirajul; Jamal, Ahmed A. (eds.). Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ed.). Asiatic Society of Bangladesh.