இரம்சான் கான்

இரம்சான் கான்
தேசியம்இந்தியர்
மற்ற பெயர்கள்முன்னா மாஸ்டர்
குடியுரிமைஇந்தியா
பணிஇந்திய பாடகர், சமூக சேவகர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்சிறீ சியாம் சுரபி வந்தனா
பிள்ளைகள்பெரோசு கான் (மகன்)
விருதுகள்பத்மசிறீ (2020)

முன்னா மாஸ்டர் என்று பிரபலமாக அறியப்படும் இரம்சான் கான் (Ramzan Khan) ஒரு இந்திய பாடகரும் சமூக சேவகருமாவார். இவர் பக்தி பாடல்களை பாடி தனது மாடுகளை கவனித்து வருகிறார். [1] [2] இவர் ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். கலைக்கு இவர் செய்த பங்களிப்புக்காக 2020 ஆம் ஆண்டில் இந்தியாவின் நான்காவது மிக உயர்ந்த குடிமை விருதான பத்மசிறீ விருது இவருக்கு வழங்கப்பட்டது. [3]

2019 நவம்பரில் பனாரசு இந்து பல்கலைக்கழகத்தின் சமசுகிருத வித்யா தர்ம விக்யான் துறையில் உதவி பேராசிரியராக இவரது மகன் பெரோசு கான் என்பவரை நியமித்ததில் சர்ச்சை எழுந்ததையடுத்து, மாடுகள் மற்றும் கிருட்டிண-பக்தி மீதான தனது அர்ப்பணிப்புக்காக இவர் வெளிச்சத்திற்கு வந்தார். சமசுகிருத மொழியில் சாத்திரி பட்டம் பெற்ற இவர், [4] சிறீ சியாம் சுரபி வந்தனா என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.

குறிப்புகள்

[தொகு]
  1. "Credit goes to 'gau mata' for my Padma Shri: Bhajan singer Munna master". https://www.zeebiz.com/india/video-gallery-credit-goes-to-gau-mata-for-my-padma-shri-bhajan-singer-munna-master-118304. 
  2. "जानें- कौन हैं गोसेवा करने वाले मुन्ना मास्टर जिन्हें मिलेगा पद्मश्री". https://aajtak.intoday.in/story/know-about-padma-awardee-munna-master-father-of-feroze-khan-1-1158194.html. 
  3. "I owe the coveted award to gau seva: Padma Shri awardee Ramzan Khan". https://www.outlookindia.com/newsscroll/i-owe-the-coveted-award-to-gau-seva-padma-shri-awardee-ramzan-khan/1718725. 
  4. Bhura, Sneha (30 Nov 2019). "Rights and rituals". The Week. பார்க்கப்பட்ட நாள் 2020-04-14.