உஸ்தாத் இரயிசு கான் | |
---|---|
2013இல் ஒரு நிகழ்ச்சியில் இரயிசு கான் | |
பின்னணித் தகவல்கள் | |
பிறப்பு | இந்தோர், மத்தியப் பிரதேசம், பிரித்தானிய இந்தியா | 25 நவம்பர் 1939
இறப்பு | 6 மே 2017 கராச்சி, பாக்கித்தான் | (அகவை 77)
இசை வடிவங்கள் | இந்துஸ்தானி இசை |
தொழில்(கள்) | கருவியிசை |
இசைக்கருவி(கள்) | சித்தார் |
இசைத்துறையில் | 1948 – 2017 |
இரயிசு கான் | |
---|---|
தேதி | 2005 |
நாடு | பாக்கித்தான் |
வழங்குபவர் | பெர்வேஸ் முஷாரஃப், பாக்கித்தானின் அதிபர் |
உஸ்தாத் இரயிசு கான் (Rais Khan) (25 நவம்பர் 1939 – 6 மே 2017) இவர் ஒரு பாக்கிதானின் சித்தார் கலைஞராவாவர். இவர் 'எல்லா காலத்திலும் மிகச் சிறந்த சித்தார் கலைஞர்களில் ஒருவராக' கருதப்பட்டார். இவர் தனது வாழ்க்கையின் இறுதி வரை தொடர்ந்து நிகழ்த்தினார்.[1] இவர் 1986இல் இந்தியாவிலிருந்து பாக்கித்தானுக்கு குடிபெயர்ந்தார். 2017 ஆம் ஆண்டில், கான் பாக்கித்தானின் மூன்றாவது மிக உயர்ந்த குடிமை கௌரவமான சீதாரா-இ-இம்தியா விருதினை பெற்றார் .
கான் நவம்பர் 25, 1939 அன்று பிரித்தானிய இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் பிறந்து,[2] பின்னர், மும்பையில் வளர்ந்தார். இவரது பயிற்சி மிகச் சிறிய வயதிலேயே, ஒரு சிறிய தேங்காய் ஓடு சித்தாரில் தொடங்கியது.[3] 1986 ஆம் ஆண்டில் பாக்கித்தான் பாடகர் பில்கீசு கானும் என்பவரை தனது நான்காவது மனைவியாக்கிக் கொண்டு பாக்கித்தானுக்கு குடிபெயர்ந்தார். இவர்களுக்கு இரு மகன்களும்,[4] நான்கு மகன்களும் உள்ளனர்.[5][6]
இவரது தாயார் ஒரு பாடகியாவார். இவரது தந்தை ஒரு வீணைக் கலைஞராவார்.[4][7]
இவர் ஒரு பாடகராகவும் இருந்தார், மேலும் 1978 ஆம் ஆண்டில் பிபிசி இலண்டனுக்காக 'குங்ரூ டூட் கெய்' என்ற பாடலை சித்தாருடன் ஒரு கருவியாகப் பதிவு செய்த முதல் சித்தார் கலைஞராவார்.[8] இவரது மாமா விலாயத் கானைப் போலவே, அவர் அடிக்கடி சித்தாருடன் பாடல்களைப் பாடினார். இவரும், செனாய் கலைஞர் பிசுமில்லா கானும் நவம்பர் 23, 2001 அன்று புதுதில்லியில் உள்ள இந்தியாவின் வாயிலில் ஒரு நிகழ்ச்சியின வழங்கினார்கள். .[9]
நீண்டகால நோய்க்குப் பிறகு, இவர் 6 மே 2017 அன்று கராச்சியில் தனது 77 வயதில் இறந்தார்.[10][11]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)