இரயில்வே பாதுகாப்புப் படை (சுருக்கமாக: ஆர்.பி.எஃப். ஒன்றாகும். இந்திய இரயில்வேயின் பாதுகாப்பிற்கும், பயணிகளின் பாதுகாப்பிற்கும் உருவாக்கப்பட்ட படையாகும். லக்னௌவில் உள்ள ஜக்ஜீவன் ராம் இரயில்வே பாதுகாப்புப் படைப் பயிற்சிப்பள்ளியில் ஆரம்பப் பயிற்சி, புதுமுகப் பயிற்சி, சிறப்புப் பயிற்சிகள் ஆகியவை அளிக்கப்படுகிறது.[1] இயற்கை விபத்தின் போதோ அல்லது சமூக விரோதிகளுடன் போராடும் போதோ ஏற்படும் பொருள் மற்றும் உயிர் இழப்பிற்கு மத்திய அரசின் உதவித் தொகையான இரயில் சுரக்ஷ்சா கல்யாண் நிதி (RSKN) பயன்படுத்தப்படுகிறது. இரயில்வே பாதுகாப்புப் படையில் மொத்தம் 65,000 வீரர்கள் உள்ளனர்.
- ரயில் பயணிகள், பயணிகள் பகுதி மற்றும் ரயில்வே சொத்து ஆகியவற்றை பாதுகாக்க குற்றவாளிகளுடன் சண்டையிடுதல்.
- சமூக விரோத கூறுகள் அனைத்தையும் நீக்கி இரயில்வே பயணிகளுக்கும், இரயில்வே சொத்துக்களுக்கும் பாதுகாவல் தருதல்.
- மகளிர் மற்றும் குழந்தை கடத்தலைத் தடுக்க விழிப்புணர்வுடன் இருத்தல் மற்றும் ரயில்வே பகுதிகளில் காணப்படும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு உரிய நடவடிக்கை எடுத்து மறுவாழ்வு அளித்தல்.
- இதர இரயில்வே அமைப்புகளுடன் இணைந்து செயலாற்றி இந்திய இரயில்வேயின் மதிப்பை அதிகரித்தல்
- அரசு இரயில்வே காவலர்கள்/ உள்ளூர் காவலர்காளுக்கும் மற்றும் இரயில்வே நிர்வாகத்திற்கும் பாலமாக செயல்படுதல்
- அனைத்து நவீன தொழில்நுட்பத்தை பின்பற்றியும், சிறந்த மனித உரிமை நடைமுறைகளைக் கொண்டும், மேலாண்மை உத்திகளுடன் பயணிகளை பாதுகாத்தல்
- ↑ Railway Protection Force