இரவிசங்கர் மகாராஜ் | |
---|---|
![]() | |
பிறப்பு | இரவிசங்கர் வியாசு 25 பெப்ரவரி 1884 இராது கிராமம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் (தற்போது கேதா மாவட்டம், குசராத்து, இந்தியா) |
இறப்பு | 1 சூலை 1984 போர்சத், குசராத்து, இந்தியா | (அகவை 100)
தேசியம் | இந்தியன் |
பணி | ஆர்வலர், சமூக சேவகர் |
பெற்றோர் | பீதாம்பர் சிவராம் வியாசு, நாதிபா |
வாழ்க்கைத் துணை | சூரஜ்பா |
கையொப்பம் | ![]() |
இரவிசங்கர் மகாராஜ் என்று நன்கு அறியப்பட்ட இரவிசங்கர் வியாசு (Ravishankar Vyas) இவர் ஓர் இந்திய சுதந்திர ஆர்வலரும், சமூக சேவகரும் மற்றும் குசராத்தைச் சேர்ந்த காந்திவாதியுமாவார்.
இரவிசங்கர் வியாசு, 1884 பெப்ரவரி 25, அன்று, மகாசிவராத்திரியில், இராது கிராமத்தில் (இப்போது இந்தியாவின் குசராத்தின் கேதா மாவட்டம் ) பீதாம்பர் சிவராம் வியாசு மற்றும் நதிபா ஆகியோருக்கு வதாரா பிராமண விவசாய குடும்பத்தில் பிறந்தார். இவரது குடும்பம் மகேம்தாவாத் அருகே உள்ள சரசவானி கிராமத்தைச் சேர்ந்தவர்கள். ஆறாம் வகுப்புக்குப் பிறகு இவர் தனது பெற்றோருக்கு விவசாய வேலைகளில் உதவியாக இருந்தார். இவர் சூரஜ்பா என்பவரை மணந்தார். இவரது தந்தை இவரது 19 வயதில் இறந்தார் மேலும் இவரது தாயார் இவரது 22 வயதில் இறந்தார்.[1]
இவர் ஆர்ய சமாஜ தத்துவத்தால் ஈடுபாடு கொண்டிருந்தார். இவர் 1915இல் மகாத்மா காந்தியைச் சந்தித்து அவரது சுதந்திரம் மற்றும் சமூக செயல்பாட்டில் சேர்ந்தார். இவர் காந்தி மற்றும் சர்தார் வல்லபாய் படேலின் ஆரம்ப மற்றும் நெருங்கிய கூட்டாளிகளில் ஒருவராக இருந்தார். மேலும் 1920 மற்றும் 1930களில் குசராத்தில் தேசியவாத கிளர்ச்சிகளின் தலைமை அமைப்பாளரான தர்பார் கோபால்தாசு தேசாய், நரஹரி பாரிக் மற்றும் மோகன்லால் பாண்டியா ஆகியோருடன் தொடர்பிலிருந்தார். கடலோர மத்திய குசராத்தின் பரையா மற்றும் பதான்வதிய சாதிகளுக்கு மறுவாழ்வு வழங்குவதற்காக பல ஆண்டுகள் பணியாற்றினார்.
1920 இல் சுனவ் கிராமத்தில் தேசிய பள்ளியை நிறுவினார். மனைவியின் விருப்பத்திற்கு எதிராக மூதாதையர் சொத்து மீதான தனது உரிமைகளை விட்டுவிட்டு, 1921 இல் இந்திய சுதந்திர இயக்கத்தில் சேர்ந்தார். இவர் 1923இல் போர்சத் சத்தியாக்கிரகத்தில் பங்கேற்று அய்தியா வரிக்கு எதிர்ப்பு தெரிவித்தார். 1928 இல் பர்தோலி சத்தியாக்கிரகத்திலும் பங்கேற்ற இவர் பிரிட்டிசு அதிகாரத்தால் ஆறு மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். இவர் 1927 இல் வெள்ள நிவாரணப் பணிகளில் பங்கேற்றார். இது இவருக்கு அங்கீகாரத்தை வழங்கியது. 1930 ஆம் ஆண்டில் உப்புச் சத்தியாகிரகத்தில்காந்தியுடன் சேர்ந்தார். இதனால் இரண்டு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். 1942 ஆம் ஆண்டில், இவர் வெளியேறு இந்தியா இயக்கத்திலும் பங்கேற்றார். மேலும் அகமதாபாத்தில் ஏற்பட்ட வகுப்புவாத வன்முறையை சமாதானப்படுத்தவும் முயன்றார்.[1]
1947இல் இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர், இவர் சமூகப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். நிலக்கொடை இயக்கத்தில் வினோபா பாவேவுடன் சேர்ந்த இவர் 1955 மற்றும் 1958க்கும் இடையில் 6000 கிலோமீட்டர் பயணம் செய்தார். 1960களில், இவர் சர்வோதயா இயக்கத்தை நிறுவி ஆதரித்தார். குசராத் மாநிலம் 1960 மே 1 அன்று உருவாக்கப்பட்டபோது ரவிசங்கர் மகாராஜ் அதனை ஆர்ம்பித்து வைத்தார். 1975 ல் நெருக்கடி நிலையையும் எதிர்த்தார். இவர் இறக்கும் வரை , குசராத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட ஒவ்வொரு முதல்வரும் பதவியேற்ற பின்னர் ஆசீர்வாதங்களுக்காக இவரை சந்திப்பது ஒரு பாரம்பரியமாக இருந்தது. இவர் 1984 சூலை 1, அன்று குசராத்தின் போர்சத்தில் இறந்தார்.[1] இவருக்கு அர்ப்பணிக்கப்பட்ட நினைவுச்சின்னம் போச்சசனின் வல்லப வித்யாலயா, அதியபன் மந்திர் என்ற இடத்தில் அமைந்துள்ளது.[2]
இவர், கல்வி, கிராமப்புற புனரமைப்பு மற்றும் கொல்கத்தா பற்றியும் எழுதியுள்ளார்.[3][4]
1984 ஆம் ஆண்டில் இவரது நினைவாக இந்திய அரசு அஞ்சல் முத்திரையை வெளியிட்டது. ₹ 1 லட்சம் மதிப்புள்ள சமூகப் பணிகளுக்கான இரவிசங்கர் மகாராஜ் விருது, இவரது நினைவாக குசராத் அரசின் சமூக நீதித் துறையால் நிறுவப்பட்டது.[5]
குசராத்தி இலக்கியத் துறையில் நன்கு அறியப்பட்ட ஜாவர்சந்த் மேகானி என்ற எழுத்தாளார் பழங்குடியினரிடையே தனது சமூகப் பணிகளின் போது இரவிசங்கர் மகாராஜ் உடனான அனுபவங்களின் அடிப்படையில் மனசாய் நா திவா என்ற பெயரில் எழுதியுள்ளார்.[6] பன்னாலால் படேல் என்ற குசராத்தி இலக்கிய எழுத்தாளர் ஜீன் ஜீவி ஜான்யு (1984) என்ற இரவிசங்கரின் வாழ்க்கை வரலாற்று நூலையும் எழுதியுள்ளார்.
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)