இரா. நாகசாமி

இரா. நாகசாமி
பிறப்பு(1930-08-10)10 ஆகத்து 1930
இறப்பு23 சனவரி 2022(2022-01-23) (அகவை 91)
சென்னை, இந்தியா
பணிதொல்லியல் வரலாற்றாளர், தொல்லியல் அறிஞர்
தாக்கம் 
செலுத்தியோர்
க. அ. நீலகண்ட சாத்திரி
டி. என். இராமச்சந்திரன்
விருதுகள்பத்ம பூசண் (2018)

இராமச்சந்திரன் நாகசாமி (Ramachandran Nagaswamy, ஆகத்து 10, 1930 - சனவரி 23, 2022) இந்தியத் தொல்லியல் மற்றும் கல்வெட்டியல் அறிஞர் ஆவார். தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் முதலாவது இயக்குனராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.[1] இவரது பணிகளைப் பாராட்டி இந்திய அரசு இவருக்கு 2018 ஆம் ஆண்டு பத்ம பூசண் விருதை வழங்கியது.[2]

இளமை வாழ்க்கை

[தொகு]

சமசுகிருத வித்துவான் இராமச்சந்திரனுக்கு 10 ஆகஸ்டு 1930ல் பிறந்தவர் நாகசாமி[3][4] இரா. நாகசாமி சென்னைப் பல்கலைக்கழகத்தில் சமசுகிருத மொழியில் முதுநிலைப் பட்டப் படிப்பு முடித்தவர்.[3]பூனா டெக்கான் கல்லூரியில் தொல்லியல் தொடர்பான ஆய்வில் முனைவர் பட்டம் பெற்றவர்.[3]

அரசுப் பணி

[தொகு]

இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தில் தொல்லியல் துறையில் பயிற்சி எடுத்த ஆர். நாகசாமி, 1959 முதல் 1963 முடிய சென்னை அரசு அருங்காட்சியகத்தின் காப்பாட்சியராக (curator) பணியில் சேர்ந்தார்.[3]] 1963 முதல் 1966 முடிய தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் உதவி சிறப்பு அதிகாரியாகவும், பின்னர் 1966 முதல் 1988 முடிய தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் முதலாவது இயக்குனராக இருந்தவர்.

சர்ச்சைகள்

[தொகு]

இவர் பக்கச்சார்பு மிக்கவர் இவர் அனைத்தையும் சமசுகிருத கண்ணோட்டத்தில் பார்ப்பவர் என்ற குற்றச்சாட்டு உண்டு.[5] இவர் தமிழ்மொழி, தமிழ் வரலாறு, திருக்குறள் போன்றவற்றின் மீது மீகுதியான திரிபுகளை மேற்கொண்டதாக விமர்சனங்கள் வைக்கப்பட்டுள்ளன.[6] இதற்கு எடுத்துக்காட்டாக தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தின் கண்ணாடி” (The Mirror Tamil and Sanskrit) என்ற பெயரில் இவர் எழுதிய நூலில், தமிழின் எழுத்து முறை பிராமணர்களிடமிருந்து பெறப்பட்டது என்றும் தொல்காப்பியம், புறநானூறு, அகநானூறு, சிலப்பதிகாரம் முதலியவை சமசுகிருத நூல்களைப் பார்த்து எழுதப்பட்டவை என்றும் கூறியுள்ளார். மேலும் செம்மொழிக்கான தகுதிகளாக வரையறை செய்யப்பட்டுள்ளவை எதுவும் தமிழுக்கு இல்லை என்றும், தொல்காப்பியம் நூல் சமசுகிருதத்திலிருந்து வந்தது என்றும், தமிழ் சமசுகிருதத்திலிருந்து கடன் பெற்றுதான் செம்மொழியாக வளர்ந்தது என்றெல்லாம் கூறியுள்ளார். இவர் செய்த மற்றொரு திரிபானது வேதங்களின் சாரம் திருக்குறள் (Tirukkural an Abridgement of Sastras) என்று இவரால் எழுதப்பட்ட ஆங்கில நூலாகும். அதற்கு இவர் எழுதிய விளக்கங்களையும், திரிபு வேலைகளையும் கண்டு தமிழ் அறிஞர்கள் அதிர்ச்சியடைந்து, கண்டனங்களை வெளியிட்டனர்.[7][8]

ஊழல் புகார்

[தொகு]

இரா. நாகசாமி 1980களில் தமிழ்நாடு தொல்லியல் துறையில் பதவியில் இருந்தபோது ஊழல் புகாரில் சிக்கினார். இவர் மீதான ஊழல் புகாரில் இவருக்கு ஆதரவாக இருக்கும்படி காஞ்சி சங்கர மடத்திலிருந்து அதிகார வர்கத்துக்கு தொடர்ந்து அழுத்தங்கள் தரப்பட்டன. பின்னர் அந்த சிக்கலில் இருந்து மீண்டார் எனப்படுகிறது.[9]

விருதுகள்

[தொகு]

மறைவு

[தொகு]

உடல்நிலை குறைவு காரணமாக, 2022 சனவரி 23 அன்று சென்னையில் காலமானார்.[10]

படைப்புகள்

[தொகு]

தமிழ்

[தொகு]
  • மாமல்லை
  • ஓவியப்பவை
  • உத்தரமேரூர்
  • கலவை
  • கவின்மிகு சோழர் கலைகள்

ஆங்கிலம்

[தொகு]
  • R. Nagaswamy (1980). Art and culture of Tamil Nadu. Sundeep Prakashan.
  • Vidya Dehejia, Richard H. Davis, R. Nagaswamy, Karen Pechilis Prentiss (2002). The sensuous and the sacred: Chola bronzes from South India. American Federation of Arts. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-295-98284-7.
  • R. Nagaswamy (2003). Facets of South Indian Art and Architecture. Aryan Books International. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7305-244-6.
  • R. Nagaswamy (10 October 2003). "Democracy of a high standard — ancient example". தி இந்து இம் மூலத்தில் இருந்து 5 ஜனவரி 2004 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20040105080504/http://www.hindu.com/fr/2003/10/10/stories/2003101001421200.htm. 
  • R. Nagaswamy (2006). Art and religion of the Bhairavas. Tamil Arts Academy.
  • R. Nagaswamy (2010). Monumental Legacy Series: Mahabalipuram. Oxford University Press India. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-807127-3.
  • Mahabalipuram (Monumental Legacy), 28 October 2010 [11]
  • Ramanathapuram district: An archaeological guide, 1979
  • Vedic Roots Of Hindu Iconography, 2012
  • Brhadisvara Temple: Form and Meaning, 1 December 2010
  • Vishnu Temples of Kanchipuram, 30 August 2011
  • TIMELESS DELIGHT: SOUTH INDIAN BRONZES IN THE COLLECTION OF THE SARABHAI FOUNDATION, 2006
  • Siva Bhakti, September 1989
  • Masterpieces of Early South Indian Bronzes, June 1983
  • Facets of South Indian Art and Architecture, 15 March 2004
  • TAMIL NADU THE LAND OF VEDAS,[12]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. https://www.dailythanthi.com/News/TopNews/2022/01/24152709/Nagasamys-contribution-to-understanding-the-history.vpf
  2. ஷங்கர் (6 பெப்ரவரி 2018). "உண்மை மட்டுமே வரலாறு". கட்டுரை. தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 8 பெப்ரவரி 2018. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  3. 3.0 3.1 3.2 3.3 "Biodata of R. Nagaswamy". Tamil Arts Academy. Archived from the original on 2015-04-15. பார்க்கப்பட்ட நாள் 2017-09-20.
  4. Kausalya Santhanam (24 February 1995). "The Achievers". The Hindu. 
  5. தமிழை இழித்த நாகசாமிக்கு அரசு மரியாதை தர கோருவதா? ரவிக்குமார் எம்.பி.க்கு வலுக்கும் கடும் எதிர்ப்பு. ஒன் இந்தியா, 2022 சனவரி, 24
  6. "தமிழை சிறுமைப்படுத்திய நாகசாமிக்கு அரசு மரியாதையா?" - விசிக ரவிக்குமார் மீது சீறிய உபிக்கள்! toptamilnews.com 2022 சனவரி 24
  7. ஆர்.நாகசாமி: தொல்லியல் துறை பங்களிப்பும், திருக்குறள் பற்றிய சர்ச்சைக் கருத்தும், முரளிதரன் காசிவிஸ்வநாதன், பிபிசி தமிழ், 24 சனவரி 2022
  8. அறிஞர் இரா.நாகசாமி செய்த திரிபு வேலை: அன்றே கண்டித்த மு.க. ஸ்டாலின்!, tamil.samayam.com, 2022. சனவரி. 24
  9. பேராசிரியர் மு. நாகநாதன், தமிழ் விரோத நாகசாமி, கட்டுரை, விடுதலை பக்கம் 2, 27. சனவரி, 2022
  10. "முதுபெரும் தொல்லியல் அறிஞர் ஆர்.நாகசாமி மறைவு - தினமணி (23 சனவரி 2022)".
  11. https://www.amazon.in/Books-R-Nagaswamy/s?ie=UTF8&page=1&rh=n%3A976389031%2Cp_27%3AR%20Nagaswamy
  12. http://tamilartsacademy.com/

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]